புதன், 25 ஏப்ரல், 2018

நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமின் வழங்கியது செங்கல்பட்டு நீதிமன்றம்! April 24, 2018

Image

ரதமர் மோடியின் வருகையின் போது கைது செய்யப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானுக்கு ஜாமின் வழங்கி செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 12-ம் தேதி தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு எதிராக இயக்குநர்கள் அமீர், பாரதிராஜா, சீமான் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். 

அவர்களை விடுவிக்கக்கோரி நடிகர் மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பல்லாவரம் போலீசார், அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே மன்சூர் அலிகான் உட்பட 18 பேருக்கு ஜாமின் கேட்டு செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி செல்வக்குமார், மன்சூர் அலிகான் உள்ளிட்ட 18 பேருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

மறுஉத்தரவு வரும் வரை செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் கையெழுத்திடவேண்டும் எனவும் நீதிபதி ஆணையிட்டுள்ளார்.