ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

திரவுபதி முர்மு 18-ம் தேதி தமிழகம் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசு ஆலோசனை

 12 2 23

திரவுபதி முர்மு 18-ம் தேதி தமிழகம் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசு ஆலோசனை
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

தமிழகம் பயணிக்கும் இந்திய குடியரசு தலைவரின் பாதுகாப்பிற்கான ஏற்பாடுகள் குறித்து, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை மேற்கொண்டார்.

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, தமிழகத்திற்கு வருகைத்தந்து, மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

இந்நிலையில் குடியரசு தலைவரின் வருகையை ஒட்டி மேற்கொள்ளப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி, தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், டி.ஜி.பி., உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-chief-secretary-security-arrangement-for-president-draupadi-murmu-visit-592037/

Related Posts: