சனி, 11 பிப்ரவரி, 2023

இந்தியாவில் முதன்முறையாக லித்தியம் படிமம் கண்டுபிடிப்பு

 10 2 23

இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் கனிம படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுரங்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பேட்டரிகள் தயாரிப்பதற்கு மிக முக்கியமான மூலப்பொருள் லித்தியம் கனிமம் ஆகும். குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்கள் முக்கிய மூலப் பொருளாக லித்தியம் பங்கு வகுக்கிறது. சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து இந்த சூழலில் லித்தியம் கனிமம் குறித்து உலக நாடுகள் அனைத்தும் அந்த கனிமத்தை கண்டறியும் பணியில் இறங்கியுள்ளன. இந்தியாவில் இதுவரை லித்தியம் கனிமம் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போதுவரை லித்தியம் பேட்டரிகளை சீனா, ஹாங்காங் போன்ற நாடுகளில் இருந்து இந்தியா இறக்குமதி செய்துவருகிறது.

இந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக லித்தியம் கனிம படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய புவியியல் ஆய்வு அமைப்பு நாட்டில் உள்ள கனிம வளங்களை கண்டறிய ஆய்வுகளை நடத்தி வருகிறது.


அந்த வகையில் ஜம்மு காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆய்வில் லித்தியம் தனிமம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தின் சலால்-ஹைமானா பகுதியில் 5.9 மில்லியன் டன் அளவிலான லித்திய படிமங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் லித்திய படிமங்கள் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.


source https://news7tamil.live/5-9-million-tonnes-of-lithium-reserves-found-in-jammu-and-kashmir.html