புதன், 8 பிப்ரவரி, 2023

துருக்கியை தாக்கிய சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள்;

 7 2 23

துருக்கியை தாக்கிய சக்திவாய்ந்த தொடர் நிலநடுக்கங்கள்; அதன் பின்னால் மறைந்திருக்கும் அறிவியல்

துருக்கி நிலஅதிர்வு இயக்க மண்டலத்தில் உள்ளது. திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் அனடோலியா டெக்டோனிக் பகுதி எனப்படும் நன்கு அறியப்பட்ட நில அதிர்வுக் கோட்டில் தாக்கியது. அடிப்பகுதிக்கும் மேல் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்னும் பேரழிவை ஏற்படுத்தியது – நிலநடுக்கங்களின் அளவு முக்கியமானது என்றாலும், நிலநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்க இன்னும் வழி இல்லை.

துருக்கி திங்கள்கிழமை அதிகாலை முதல் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. முதலில் பதிவான 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களிலேயே வலுவான நிலநடுக்கம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க புவியியல் ஆய்வு (யு.எஸ்.ஜி.எஸ்) வலைத்தளத்தின் தகவல்களின்படி, தென்கிழக்கு துருக்கி சிரியாவின் எல்லைகளுக்கு அருகில், ஒரே பகுதியில் 12 மணி நேரத்திற்குள், 4 மேக்னிடியூட்க்கும் மேல் அளவிலான குறைந்தது 41 நிலநடுக்கங்களுக்கு மேல் பதிவாகியுள்ளன. முதலில் ஏற்பட்ட நில நடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட நிலநடுக்கங்களில், முதல் நிலநடுக்கத்தைப் போலவே ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பெரியதாக இருந்தது.

துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளும் நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. திங்கள்கிழமை மாலைக்குள் குறைந்தது 1,700 பேர் இறந்ததாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த உயிரிழப்புகளில் 1,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் துருக்கியில் பதிவாகியுள்ளன.

நிலஅதிர்வு தீவிரமான பகுதியில் துருக்கி மற்றும் சிரியா

நிலநடுக்கம் தாக்கிய பகுதியானது, வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு துருக்கியின் வழியாக செல்லும் அனடோலியா டெக்டோனிக் பிளாக் எனப்படும் நன்கு அறியப்பட்ட நில அதிர்வுக் கோட்டில் அமைந்துள்ளது.

நிலநடுக்க கோணத்தில் உலகின் மிகவும் ஆபத்தான பகுதிகளில் ஒன்றான இமயமலைப் பகுதியைப் போல இயக்கத்தில் இல்லை என்றாலும் – இது நில அதிர்வு இயக்கத்தில் உள்ள மண்டலம்.

பெரிய நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவு 5 அல்லது அதற்கும் அதிகமாக இருக்கும். சமீபத்திய ஆண்டுகளில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படவில்லை. யு.எஸ்.ஜி.எஸ் கருத்துபடிம், 1970-ம் ஆண்டு முதல் இப்பகுதியில் 6 அல்லது அதற்கு மேற்பட்ட அளவிலான மூன்று நலநடுக்கங்கள் மட்டுமே நிகழ்ந்துள்ளன. இந்த பகுதியில் கடைசியாக பெரிய நிலநடுக்கம் ஜனவரி 2020-ல் ஏற்பட்டது.

இந்த பிராந்தியத்தில் நில அதிர்வு ஆப்பிரிக்க, யூரேசிய மற்றும் அரேபிய தட்டுகளுக்கு இடையிலான தொடர்புகளின் விளைவாகும். அரேபிய தட்டு வடக்கு நோக்கி நகர்வதாக அறியப்படுகிறது, இதன் விளைவாக துருக்கி அமைந்துள்ள அனடோலியன் தட்டுக்கு சிறிது மேற்கு நோக்கி நகர்கிறது.

திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கம் கிழக்கு அனடோலியன் பகுதியில் சிரியா எல்லைக்கு அருகில் உள்ள செங்குத்து நில அதிர்வுக் கோட்டைச் சுற்றி நடந்ததாக யு.எஸ்.ஜி.எஸ் தெரிவித்துள்ளது.

“நிலநடுக்கத்தின் இயங்குமுறை மற்றும் இருப்பிடம் கிழக்கு அனடோலியா நில அதிர்வு மண்டலம் அல்லது சாக்கடல் உருமாற்ற நில அதிர்வு மண்டலம் ஆகியவற்றில் ஏற்பட்ட நிலநடுக்கத்துடன் ஒத்துப்போகிறது. கிழக்கு அனடோலியா நில அதிர்வு மண்டலம் ஏஜியன் கடலில் துருக்கியை மேற்கு நோக்கி வெளியேற்றுவதற்கு இடமளிக்கிறது. அதே சமயம் சாக்கடல் மாற்றம் ஆப்பிரிக்கா மற்றும் யூரேசியா தட்டுகளுடன் தொடர்புடைய அரேபிய தீபகற்பத்தின் வடக்கு நோக்கி நகர்வதற்கு இடமளிக்கிறது” என்று யு.எஸ்.ஜி.எஸ் அதன் நிலநடுக்கம் பற்றி கூறியுள்ளது.

பூமியின் அடிப்பகுதிக்கும் மேல்பகுதிக்கும் இடையில் ஏற்படும் நிலநடுக்கம் பெரிய சேதத்தை ஏற்படுத்துமா?

திங்கள்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ஒப்பீட்டளவில் பூமியின் அடிப்பகுதிக்கும் மேல்பகுதிக்கும் இடையில் உள்ள பகுயின் ஆழத்திலிருந்து வெளிப்பட்டன, இந்த நிலநடுக்கம் பேரழிவை ஏற்படுத்தியது. 7.8 ரிக்டர் அளவில் பதிவான முதல் நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பிலிருந்து 17.9 கிமீ ஆழத்தில் உருவானது. 7.5 ரிக்டர் அளவுள்ள ஒரு நிலநடுக்கம் உட்பட அனைத்து நிலநடுக்கங்களும் அடுத்தடுத்து பூமியின் மேற்பரப்புக்கு இன்னும் நெருக்கமாக இருந்து வெளிப்பட்டது.

பூமியின் அடிப்பகுதிக்கும் மேல்பகுதிக்கும் இடையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் பொதுவாக மிகவும் அழிவுகரமானவை. ஏனெனில், அவை மேற்பரப்பில் வெளிப்படும் போது அதிக ஆற்றலைக் கொண்டு வருகின்றன.

ஆழமான நிலநடுக்கங்கள் பூமியின் மேற்பரப்புக்கு வரும் நேரத்தில் அவற்றின் ஆற்றலை இழக்கின்றன. ஆழமான நிலநடுக்கங்கள் அதிக தூரம் பரவினாலும் – நில அதிர்வு அலைகள் மேற்பரப்பை நோக்கி கூம்பு வடிவமாக மேல்நோக்கி நகரும் – அதிக தூரம் பயணிக்கும்போது ஆற்றலை இழக்கும் போதும், அதனால் குறைந்த சேதம் ஏற்படுகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்பு நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம், அதன் அதிர்வு வட இந்தியாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது. எடுத்துக்காட்டாக, பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 25 கி.மீ. நிலநடுக்கத்தின் காரணமாக மலையிலிருந்து விழுந்த கல் ஒன்றினால் பெண் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இது பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால் நேபாள நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவில் இருந்தது. – நிலநடுக்கம் எவ்வளவு அழிவுகரமானதாக இருக்கும் என்பதற்கான மற்ற சமிக்ஞைகள் உள்ளன.

பிப்ரவரி 6, 2023-ல் துருக்கியின் தியர்பாகிரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்கள் இடிபாடுகளுக்குள் தேடுகிறார்கள். (REUTERS)

மேக்னிடியூட் அளவு என்பது அதிர்வுகள் எவ்வளவு பெரியது என்பதற்கான அளவீடு ஆகும். அதே சமயம் வலிமை என்பது அது கொண்டு செல்லும் ஆற்றலைக் குறிக்கிறது. ரிக்டர் அளவு 6 நிலநடுக்கத்தால் உருவாகும் நில அதிர்வு அலைகள் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் உருவாகும் அலைகளை விட 10 மடங்கு அதிக அலைவீச்சு கொண்டதாக இருக்கும். ஆற்றல் வேறுபாடு இன்னும் அதிகமாக இருக்கும். ரிக்டர் அளவு 1 இன் ஒவ்வொரு மாற்றத்திற்கும் 32 மடங்கு அதிகம்.

அதாவது திங்கள்கிழமை துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேபாளத்தில் ஏற்பட்ட 5.8 நிலநடுக்கத்தை விட 100 மடங்கு பெரியது – 100 மடங்கு பெரிய அலைகளை உருவாக்கியது – மேலும் 1,024 (32 x 32) மடங்கு சக்தி வாய்ந்தது. பொதுவாக, 0.1 அளவில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் ஆற்றலில் 1.4 மடங்கு மாற்றம் ஏற்படுகிறது.

பிப்ரவரி 6, 2023-ல் துருக்கியின் அடானாவில் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ள மக்களைச் சென்றடைய மீட்புக் குழுக்கள் முயற்சி செய்கின்றன. (ஏபி வழியாக IHA நிறுவனம்)

நிலநடுக்கத்தை ஏன் முன்கூட்டியே கணிக்க முடியாது?

நிலநடுக்கங்கள் முன்கூட்டியே கணிக்க முடியாத பொதுவான இயற்கை ஆபத்தாகத் தொடர்கின்றன. எனவே, முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளை உருவாக்க முடியாது.

கோட்பாட்டளவில், நிலநடுக்கத்தின் தோற்றம் மற்றும் நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பை அடையும் நேரத்திற்கு இடையில் ஒரு சில வினாடிகளில் செல்லும் நேரத்தை வழங்குவது சாத்தியமாகும். நில அதிர்வு அலைகள் ஒளியின் வேகத்தைவிட கணிசமாக மெதுவாக பயணிக்கின்றன – வினாடிக்கு 5 முதல் 13 கிமீ வரை பயணிக்கின்றன. எனவே, நிலநடுக்கம் ஏற்பட்ட உடனேயே கண்டறியப்பட்டால், அது தரையை அடைவதற்கு சில வினாடிகளுக்கு முன்னதாகவே அது பற்றிய தகவல்களைத் தெரிவிக்க முடியும்.

நிலநடுக்கங்கள் குறித்த எச்சரிக்கைகளை வெளியிட சில இடங்களில் இத்தகைய அமைப்புகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன. இருப்பினும், அவை முன்கூட்டியே கணிக்கப்படுவதில்லை. ஆனால், நிகழ்வுக்குப் பிந்தைய எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

நிலநடுக்கங்களை மூன்கூட்டியே கணிப்பதற்கு நம்பகமான கணிப்பு கருவிகளைக் கண்டுபிடிக்கும் முயற்சிகள் இதுவரை பலனளிக்கவில்லை. விஞ்ஞானிகள் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகளை வரைபடமாக்க முடிந்தது. எதிர்காலத்தில் நிலநடுக்கங்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. ஆனால், எப்போது என்று முன்கூட்டியே கணிப்பதற்கு வழி இல்லை.

எடுத்துக்காட்டாக, இமயமலைப் பகுதியானது மேற்பரப்பிற்கு அடியில் அதிகமான அழுத்தத்தை குவித்துள்ளது. அதனால், 7 அல்லது 8 ரிக்டர் அளவில் பல நிலநடுக்கங்கள் ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஆனால், அது எப்போது நடக்கும் என்று முன்கூட்டியே கணிக்க முடியாது.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 8 அல்லது அதற்கு மேற்பட்ட நிலநடுக்கங்கள் ஒன்று முதல் மூன்று வரை பதிவு செய்யப்படுகின்றன. அதே நேரத்தில் 7 முதல் 8 மேக்னிடியூட் வரையிலான 10-15 நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

நிலநடுக்கங்களால் பாதிக்கப்பட்ட பகுதி

தெற்கு துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகியைச் சுற்றி நிலஅதிர்வு தீவிரமாக இருந்தது. உள்ளூர் நேரப்படி திங்கள்கிழமை அதிகாலை 4.17 மணிக்கு ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையப்பகுதி (வரைபடம் இடதுபுறம்). இருண்ட ஆரஞ்சு கோட்டால் பிணைக்கப்பட்ட நீளமான இணைப்பு மிகவும் கடுமையான குலுக்கலின் பகுதி; வெளிப்புற பச்சைக் கோடுகள் படிப்படியாக இலகுவான நடுக்கத்தின் பகுதிகளைக் குறிக்கின்றன.

7.5 ரிக்டர் அளவுள்ள இரண்டாவது நிலநடுக்கம் நண்பகல் வேளையில் தாக்கியது. அதன் மையப்பகுதி கஹ்ரமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள எகினோசுவில், காசியான்டெப்பிற்கு வடக்கே 80 கிமீ தொலைவில் ஏற்ப்ட்டது. இதையடுத்து 40 சிறிய் நிலஅதிர்வுகளும் ஏற்பட்டன.

துருக்கி நில அதிர்வு இயக்கம் உள்ள முக்கிய இடம்

துருக்கி, சிரியா, ஜோர்டான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில், ஆப்பிரிக்க, அரேபிய மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகள் மற்றும் அனடோலியன் டெக்டோனிக் பிளாக் பகுதி ஆகியவற்றுக்கு இடையேயான சிக்கலான தொடர்புகளால் டெக்டோனிக் தட்டுகள் ஆதிக்கம் செலுத்துகிறது.

இங்கே ஆதிக்கம் செலுத்தும் கட்டமைப்புகள்: (i) செங்கடல் பிளவு, ஆப்பிரிக்க மற்றும் அரேபிய தட்டுகளுக்கு இடையே பரவும் மையம்; (ii) சாக்கடல் (Dead Sea) மாற்றம் ஒரு பெரிய அதிர்சி -குலுக்கள் அதிர்வு இது ஆப்பிரிக்கா-அரேபியா தொடர்புடைய இயக்கங்களுக்கும் இடமளிக்கிறது; (iii) வடக்கு அனடோலியா அதிர்வு பகுதி, வடக்கு துருக்கியில் உள்ள வலது-பக்க அதிர்ச்சி அமைப்பு, யூரேசியா மற்றும் ஆப்பிரிக்காவைப் பொறுத்து மேற்கு நோக்கி அனடோலியா தொகுதியின் மாறும் இயக்கத்த்தின் பெரும்பகுதிக்கு இடமளிக்கிறது; (iv) சைப்ரியன் ஆர்க், ஆப்பிரிக்கா தட்டுக்கும் அனடோலியா தொகுதிக்கும் இடையேயான பகுதி.

source https://tamil.indianexpress.com/explained/turkey-hit-by-series-of-powerful-earthquakes-science-behind-it-589945/