மொபைல் போன்களுக்கான புதிய வகை back caseகளை ஜெர்மன் மாணவர் கண்டுபிடித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் மனித உறுப்புகளில் ஒன்று போல மாறியிருக்கிறது மொபைல் போன். மொபல் போன் வாங்குவதற்கு செய்யப்படும் செலவுகளைப் போலவே அதனை அழகுபடுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் அதிகமான செலவுகளை இன்றைய தலைமுறை செய்து வருகிறது. ஆனாலும் இப்படியெல்லாம் அழகுபடுத்தப்படும் மொபைல் போனின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அதற்கான தீர்வொன்றை ஜெர்மனியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் முன்வைத்திருக்கிறார்.
மொபைல் போன்களை பாதுகாப்பதற்கென்றே பிரத்யேகமான back case ஒன்றை ஜெர்மனியைச் சேர்ந்த Philip Frenzel என்ற மாணவர் வடிவமைத்திருக்கிறார். இதுவரை புழக்கத்தில் இருக்கும் மொபைல் போன் back caseகள் அளவில் பெரியதாக இருக்கும். அவை மொபைல் போன்களின் அழகைக் கெடுப்பது போல் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் Philip Frenzel வடிவமைத்திருக்கும் back caseகள் அளவில் சிறியதாக இருக்கின்றன.
அளவில் சிறியதாக இருந்தாலும் நவீன தொழில்நுட்பத்தோடு அந்த back caseகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த மொபைல் back caseகள் active dambening முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. மொபைல் போன்கள் தவறி கீழே விழும் சூழல் ஏற்படும் போது அதனைக் கண்டறியும் active dambening, back caseகளின் பின்புறம் இருக்கும் ஸ்பிரிங்குகளை போனுக்கான அரணாக மாறும்.
இதனால் மொபைல் போன் கீழே விழுந்து மீண்டும் பவுன்ஸ் ஆகும். இதன் மூலம் மொபைல் போனில் ஏற்படும் சேதாரங்கள் தவிர்க்கப்படும். மொபைல் போன்களை பாதுகாக்கும் இந்த நவீன வகை back caseகளை வடிவமைத்த Philip Frenzel கடந்த மாதம் அதற்கான காப்புரிமைகளையும் பெற்றிருக்கிறார்.
இந்த புதிய வகை back caseகள் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆனால் இதனைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ள பிலிப்பிற்கு ஜெர்மன் மெக்கட்ரானிக்ஸ் சொசைட்டி விருது வழங்கி கவுரவித்துள்ளது. விரைவில் விற்பனைக்கு வரவிருக்கும் இந்த வகை back caseகள் மூலம் மொபைல் போன்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.