”நம்முடைய கொள்கை ஆசான் அம்பேத்கர்,பாஜகவின் கொள்கை ஆசான் கோல்வால்கர்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலைச் சிறுத்தை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக வின் தலைமை கழகச் செயலாளர் துரை வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பங்கேற்றனர்.
இந்நிகழ்வில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்ததாவது..
” அம்பேத்கரை இந்துத்துவ அடையாளமாக திடீரென பாஜக ஆர்எஸ்எஸ் காட்டுகிறார்கள். இதை விட அயோக்கியத்தணம் வேறு என்ன இருக்க முடியும். தமிழ்நாட்டில் தொடர்ந்து பதற்றத்தை உருவாக்கி கொண்டே இருக்கிறார்கள்.
பிபிசியின் ஆவணப்படம் மோடியின் முகத்திரையை தோலுரித்துக் காட்டுகிறது. கோத்ரா ரயிலில் வந்த பயணிகளை தீ வைத்து எரித்தது சங்ப்பரிவார் அமைப்பினர் தான். இஸ்லாமியர்களை கொல்ல வேண்டும் என்பதற்காக சொந்த மதத்தைச் சேர்ந்த துறவிகளையே கொன்ற கும்பல் தான் ஆர்எஸ்எஸ் அதைத்தான் பிபிசி ஆவணபடம் ஆதாரத்தோடு வெளியிட்டது. மோடியின் சிறந்த கொள்ளையின் சனாதன முகம் தான் அதானி.
ராகுல் காந்தியின் ஒற்றுமை நடை பயணத்தை காட்ட விடாமல் ஊடகத்தை அச்சுறுத்தியது மோடி அரசு. பாஜகவின் கொள்கை ஆசான் கோல்வால்கர். நம்முடைய கொள்கை ஆசான் அம்பேத்கர். பாஜகவினர் மாட்டு மூத்திரத்தை குடிப்பார்கள். பசும்பாலை கொட்டுவார்கள் இதுதான் சனாதன தர்மம்.” என திருமாவளவன் தெரிவித்தார்.
– யாழன்
source https://news7tamil.live/our-policy-is-aasan-ambedkar-bjps-policy-is-aasan-golwalkar-thirumavalavan-mp.html