ஞாயிறு, 16 ஜூலை, 2023

மருத்துவ சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியானது

 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

தமிழ்நாட்டில் உள்ள எம்.பி.பி.எஸ் , பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு  40, 193 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஆண்டு 32, 306 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் மருத்துவ படிப்பிற்கு விண்ணப்பம் செய்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. சென்னை கிண்டியில் இன்று காலை 10 மணிக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான முதல் சுற்று கலந்தாய்வை மருத்துவ மாணவர் சேர்க்கைக்குழு ஜூலை 20ம் தேதி தொடங்குகிறது. இது தொடர்பாக மருத்துவக் கலந்தாய்வு  குழு வெளியிட்ட அறிவிப்பில், சான்றிதழ் சரி செய்யும் பணிகள் ஆகஸ்ட் 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9, 3ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ல் நடைபெறும். 3 ம் ஆம் சுற்று கலந்தாய்வு முடிவில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு  செப்டம்பர்  21ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 % உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முதலில்  வெளியிட்டார்.  அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டு தரவரிசையில், சேலத்தை சேர்ந்த கிருத்திகா முதலிடம் பிடித்துள்ளார்.  தருமபுரியைச் சேர்ந்த பச்சையப்பன் 2வது இடம், காஞ்சிபுரத்தை சேர்ந்த முருகன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். மேலும் அரசு ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்கள் பிடித்துள்ள மாணவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டது.  


source https://tamil.indianexpress.com/tamilnadu/medical-admission-rank-list-released-today-723732/

Related Posts: