இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு தலைவர் ராஜ்குமார் மற்றும் தென்னிந்திய மில்ஸ் அசோசியேசன் தலைவர் ரவி சாம் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது அவர்கள் பேசுகையில்,
ஜவுளி மற்றும் ஆடை தொழிலில் மூன்று சதவீதம் முதல் ஆறு சதவீதம் வரையே லாபம் கிடைத்து வந்தது. தற்போது இந்த துறையினர் ஐந்து முதல் பத்து சதவீதம் வரை நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஜவுளி தொழிலுக்கு போர்க்கால அடிப்படையில் இடைக்கால நிதி நிவாரணம் தேவைப்படுகிறது அவ்வாறு இடைக்கால நிதி நிவாரணம் கிடைக்கா விட்டால் சிறு நடுத்தர குறுவகை நூற்பாலைகள் செயல்படாத நிலை மாறும் எனவும்
நாட்டிலுள்ள 75 சதவீதத்திற்கும் அதிகமான ஜவுளி ஆலைகள் சிறு நடுத்தர குறு வகை நூற்பாலைகள். இதனால் ஆலைகள் சரியாக இயங்க மின் கட்டணத்தில் சில நிவாரணங்களை அளிக்க வேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கையும் வைத்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா இங்கிலாந்து கனடா சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் உள்ள வரி இல்லா வர்த்தக ஒப்பந்தங்களை துரிதப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அதன் மூலம் எட்டு முதல் 26 சதவீதம் வரை ஏற்றுமதியை தவிர்த்து ஜவுளி பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பது போன்ற மத்திய அரசின் முயற்சிகளை வெகுவாக பாராட்டினார்கள்
மத்திய அரசுக்கு கோரிக்கை
பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை நீக்க வேண்டும். தர கட்டுப்பாட்டு ஆணைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சில நடைமுறை சிக்கல்களை நீக்கி செயற்கை இலைகளை பன்னாட்டு விலையில் கிடைக்க வழிவகை செய்து தொழிலில் சமதளம் உருவாக்கப்பட வேண்டும்
தமிழக அரசிடம் கீழ் காணும் கோரிக்கைகள்
உயர் அழுத்த தொழிற்சாலைகளுக்கு அதிகபட்சமாக நிலை கட்டணம் 20% வரையும் அல்லது பதிவாகும் மின்னலவுக்கு மட்டும் வசூலிக்கப்பட வேண்டும்.
தொழிற்சாலைகளுக்கு பல்வேறு பழுவிற்கு ஏற்றவாறு முறையே 75 ரூபாய் 150 ரூபாய் மற்றும் 550 ரூபாய் என்ற நிலை கட்டணம் வசூலிப்பதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும்
குறை அழுத்த தொழிற்சாலைகளுக்கு வசூலிக்கப்படும் அதிகபட்ச நுகர்வு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
இந்திய வங்கிகள் சங்கத்திற்கு ஏற்கனவே ஒரு மனுவை அனுப்பி உள்ளதாகவும் அதில் அனைத்து நிதி சார்ந்த நிறுவனங்களுக்கும் தொழில் துறையினருக்கும் வேண்டிய உதவிகளை வழங்க வேண்டும் தெரிவித்தனர்
கடனுக்கான அசலை திருப்பி செலுத்த ஒரு வருட காலம் அவகாசம் வேண்டும்
மத்திய அரசால் வழங்கப்பட்ட கொரோனா தொற்று நிவாரண நூற்றாண்டு கால கடனை ஆறாண்டு காலமாக மாற்ற வேண்டும்
நடப்பு நிதி மூலத்திற்கு தேவையான கடனை வழங்கி நிதி நெருக்கடியில் சிக்கி உள்ள சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களில் மேடையை கருத்தில் கொண்டு வழங்க வேண்டும்
மினிமம் வாஜஸ் தொழிலாளர்களுக்கு ஓராண்டு தள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-indian-textile-industries-federation-head-press-meet-update-723645/