19 7 23
அமர்தியா சென் கூறுகையில், “இந்தியாவில் பொது சிவில் சட்டம் என்ன முயற்சி செய்ய விரும்புகிறது, நம்முடைய ஜனநாயக சோதனையில் அது ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான விளைவுகளைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறேன்” என்று கூறினார்.
“ஜனநாயகம் பெரும்பாலும் அதிகாரப் பகிர்வைக் கோருகிறது” என்று கூறிய நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்தியா சென், அடுத்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கான கூட்டாட்சி முன்னணியை உருவாக்க பா.ஜ.க அல்லாத கட்சிகளுக்கு இடையே நடந்து வரும் விவாதங்களை வரவேற்றார்
89 வயதான பொருளாதார நிபுணர், சமீபத்தில் இந்தியா வந்தபோது இங்குள்ள தனது மூதாதையர் இல்லத்தில் பி.டி.ஐ-க்கு அளித்த பேட்டியில், மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசு அதிக சக்தியுடன் தலையிட வேண்டும் என்றார்.
“பெரும்பாலும் ஜனநாயகம் அதிகாரப் பகிர்வைக் கோருகிறது என்பதே உண்மை என்று நான் நினைக்கிறேன். (ஆனால்) பெரும்பாலும், பெரும்பான்மை வாக்குகள் சிறுபான்மைக் கட்சிகளுக்கு அந்த சக்தியை அனுமதிக்கவில்லை, மாறாக சிறுபான்மையினரை மிகவும் ஆபத்தான சூழ்நிலைக்கு மாற்றுகிறது” என்று அமர்தியா சென் கூறினார்.
பொருளாதார வல்லுனரும் தத்துவவாதியுமான அமர்தியா சென், “தற்போதைய சூழ்நிலையில், ஒருவித அதிகாரத்தை சமநிலைப்படுத்துவதற்கான ஒரே வழி எதிர்க் கட்சிகள் பாதிக்கப்படுவதைக் காட்டிலும் ஒருவருக்கொருவர் துணையாக நிற்க வேண்டும்” என்று கூறினார். அவர் மேலும் கூறுகையில், “சில வழிகளில் பாட்னாவில் (கடந்த மாதம் நடைபெற்ற எதிர்க்கட்சி மாநாடு) கூட்டத்தில் அது நடந்தது போல் தோன்றியது.” என்று கூறினார்.
24 கட்சிகளின் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீண்டும் திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் பெங்களூருவில் கூட்டம் நடத்துகிறார்கள். காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ஆர்.ஜே.டி தவிர, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, தி.மு.க), ஆம் ஆத்மி, சி.பி.ஐ(எம்), சி.பி.ஐ, சி.பி.ஐ (எம்.எல்), சிவசேனா, என்.சி.பி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் இணையும். 2024 பொதுத் தேர்தலை ஒற்றுமையாகப் போராடுவதற்கான வியூகத்தை இந்தக் கூட்டத்தில் வகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மே 3 முதல் இனக்கலவரம் 150க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்ட மணிப்பூரில் நிலைமை குறித்துப் பேசிய நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்தியா சென் “மத்திய அரசின் நியாயமான, சக்திவாய்ந்த தலையீடு தேவை” என்றார். மணிப்பூரைப் பற்றி நியாயமான மற்றும் சீரான தன்மை கொண்ட ஒரு அறிக்கையை பிரதமர் வெளியிடுவார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு குறித்தும் பேசிய அவர், இதேபோன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் இதேபோன்ற வழக்கின் காரணமாக லோக் சபாவில் தங்கள் இடத்தை இழந்ததாக நினைவில் இல்லை என்றார். மேலும், “நாம் அந்த திசையில் செல்வது இந்தியாவுக்கு மிகவும் துரதிர்ஷ்டவசமாக இருக்கும்” என்று அமர்தியா சென் கூறினார்.
பொது சிவில் சட்டம் ஒரு ஆக்கப்பூர்வமானதாக இருக்குமா என்று கேள்வி எழுப்பி பொருளாதார நிபுணர் அமர்தியா சென் வியப்பை வெளிப்படுத்தினார். “இந்திய அரசியலமைப்பு ஒரு நன்கு சிந்திக்கப்பட்ட கட்டமைப்பாகும்” என்று அவர் சுட்டிக்காட்டினார். ஒருமித்த கருத்து வருவதற்கு முன்பு, அரசியலமைப்பு சபையால் மிகவும் விவாதிக்கப்பட்டு சிந்தனைக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்த செயல்முறை “இந்திய அரசியலில் வெவ்வேறு பக்கங்களை” வழங்கியுள்ளது என்றும் கூறினார்.
“இந்தியாவில் பொது சிவில் சட்டம் என்ன முயற்சி செய்ய விரும்புகிறது, நம்முடைய ஜனநாயக சோதனையில் அது ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான விளைவுகளைப் பற்றி தான் மிகவும் கவலைப்படுகிறேன்” என்று அமர்தியா சென் மேலும் கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/amartya-sen-welcomes-opposition-unity-moves-725625/