செங்கல்பட்டு அருகே அதிகாலையில் நில அதிர்வு ஏற்பட்டதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மையமாகக் கொண்டு இன்று லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகி உள்ளது. இன்று காலை 7.39 மணிக்கு நில அதிர்வு ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வின் மையம் தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வின் தாக்கம் சுமார் 100 கி.மீ சுற்றளவு வரை இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழையால் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த நில அதிர்வு பெரும் அதிர்ச்சியை மக்களிடத்தில் ஏற்படுத்தி உள்ளது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/chengalpattu-earthquake-of-magnitude-32-1944555