செவ்வாய், 10 மார்ச், 2026

ஆதரவு வாபஸ்: ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி அதிரடி முடிவு

 

jana

விஜய் தொடங்கியுள்ள த.வெ.க கட்சி தன் முதல் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. இக்கட்சி இதுவரை யாருடனும் கூட்டணி வைக்கவில்லை. என்.டி.ஏ கட்சி த.வெ.க-வை கூட்டணிக்கு அழைப்பதாக சமீப காலமாக தகவல் பரவி வந்தது. ஆனால் அந்த தகவல்கள் முற்றிலும் வதந்தி என பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார். த.வெ.க கட்சி சமீபத்தில் மகளிர் தினத்தன்று தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்தது.

  • பெண்கள், குழந்தைகள், முதியோர்களுக்கான தனி இலாக்கா உருவாக்கப்படும்.
  • மகளிர் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் உரிமை தொகை ரூ.2,500 வழங்கப்படும்.
  • கட்டணமின்றி வருடத்திற்கு 6 கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
  • 1 முதல் 12 வரை பயிலும் மாணவர்களின் தாய் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டுதோறும் ரூ.15,000 பொருளாதார உதவித் தொகையாக வழங்கப்படும் என பல்வேறு திட்டங்களை விஜய் அறிவித்தார்.

இது ஒருபுறம் இருக்க த.வெ.க கட்சி குறித்து அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சர்சைகள் எழுந்துள்ளது. இந்நிலையில், த.வெ.க-விற்கு அளித்த ஆதரவை ஜனநாயக முஸ்லீம் மக்கள் கட்சி வாபஸ் பெற்றுள்ளது. இதுகுறித்து அக்கட்சி தலைவர் எம்.எஃப். தமீம் அளித்த பேட்டியில், “ 8 மாதங்களாக த.வெ.க-வோடு பயணித்தோம். அவர்கள் செயல்பாடு சரியில்லாததால் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளோம்.

கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க அறிவுறுத்தியும் விஜய் போகவில்லை. வரும் தேர்தலில் தி.மு.க தலைமையிலான அணிக்கு ஆதரவு கொடுத்து. போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளோம்” என்றார். இச்சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.


source https://tamil.indianexpress.com/tamilnadu/support-withdrawn-for-tvk-democratic-muslim-peoples-party-takes-sudden-decision-11191693