ஹஜ் கையேடு
ஒருவர் ஒரு இஹ்ராமில் ஹஜ்ஜையும் உம்ராவையும்
செய்ய நாடினால் லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்(ஹஜ்ஜையும் உம்ராவையும் நாடி இறைவா
உன்னிடம் வந்து விட்டேன்) என்று கூற வேண்டும்.
ஹஜ்ஜை மட்டும் செய்ய நாடினால் லப்பைக்க ஹஜ்ஜன் என்று கூற வேண்டும்.
உம்ராவை மட்டும் செய்ய நாடினால் லப்பைக்க
உம்ரதன் என்று கூற வேண்டும்.
இவ்வாறு கூறுவதே இஹ்ராம் ஆகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லப்பைக்க ஹஜ்ஜன்
வஉம்ரதன்என்று கூறி ஹஜ், உம்ராவுக்காக தல்பியா
கூறியதை நான் செவியுற்றுள்ளேன். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 2194, 2195
இஹ்ராம் கட்டும் போது
குளித்து விட்டு நறுமணம் பூசிக் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டும்
போது என்னிடம் உள்ள நறுமணத்தில் மிகச் சிறந்ததைப் பூசி விட்டேன். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 5928, 267, 5923.
இஹ்ராம் கட்டிய ஆண்கள் தொப்பிஇ தலைப்பாகை
போன்றவற்றால் தலையை மறைக்கக் கூடாது. நறுமணம் பூசக் கூடாது. மயிர்களை நீக்கக்
கூடாது
தல்பியா கூறுதல்
லப்பைக்இ அல்லாஹும்ம லப்பைக்இ லப்பைக் லாஷரீக
லக லப்பைக்இ இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல்முல்க, லாஷரீக லக என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்
(ரலி) நூல்: புகாரி 1549, 5915
தல்பியாவை உரத்துக்
கூறுதல்
என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து
இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என்
தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்என்று கட்டளையிட்டார்கள் என்று நபிகள் நாயகம்
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸாயிப் பின்
கல்லாத் (ரலி) நூல்கள்: ஹாகிம், பைஹகீ
தல்பியாவை நிறுத்த
வேண்டிய நேரம்
நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரஃபாவிலிருந்து மினா வரை சென்றேன்.
ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டே இருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஃபழ்லு பின் அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1544, 1683, 1687
இஹ்ராம் கட்ட வேண்டிய
இடங்கள்
மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாஎன்ற
இடத்தையும், ஷாம் (சிரியா) வாசிகளுக்கு ஜுஹ்ஃபாஎன்ற இடத்தையும், நஜ்துவாசிகளுக்கு கர்னுல் மனாஸில்என்ற இடத்தையும், யமன்வாசிகளுக்கு யலம்லம்(இப்போதைய ஸஃதியா) என்ற இடத்தையும் இஹ்ராம் கட்டும்
இடங்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயம் செய்தார்கள். இந்த எல்லைகள் இந்த
இடங்களில் உள்ளவர்களுக்கும், இந்த இடங்களில்
வசிக்காமல் இந்த இடங்கள் வழியாக ஹஜ், உம்ராவை நாடி
வரக்கூடியவர்களுக்கும் இஹ்ராம் கட்டும் இடங்களாகும். இந்த எல்லைகளுக்கு உட்பட்டு
வசிப்பவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடமே எல்லையாகும். மக்காவாசிகள் மக்காவிலேயே
இஹ்ராம் கட்ட வேண்டும்எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1524, 1526, 1529, 1530, 1845.
இஹ்ராம் கட்ட வேண்டிய
காலம்
துல்ஹஜ் மாதம் எட்டாம் நாளிலிருந்து தான்
ஹஜ்ஜின் கிரியைகள் துவங்குகின்றன என்றாலும்இ அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டலாம். ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும். (அல்குர்ஆன் 2:197)
தவாஃப் அல்குதூம்
அவரவருக்குரிய எல்லைகளில் இஹ்ராம் கட்டி, மக்காவுக்குள் பிரவேசிக்க வேண்டும். மக்காவில் பிரவேசித்தவுடன் தவாஃப்செய்ய
வேண்டும். இந்த தவாஃப் தவாஃபுல் குதூம்என்று கூறப்படுகிறது. குதூம்என்றால் வருகை
தருவது என்று பொருள்.
தவாஃப் அல்குதூம்செய்யும்
முறை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃப்
அல்குதூம்செய்யும் போது மட்டும் முதல் மூன்று சுற்றுக்கள் ஓடியும் நான்கு
சுற்றுக்கள் நடந்தும் தவாஃப் செய்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்
(ரலி) நூல்: புகாரி 1644, 1617.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது
அமர்ந்து தவாஃப் செய்தார்கள். (ஹஜருல் அஸ்வத் அமைந்த) மூலையை அடைந்தவுடன் அதை
நோக்கி சைகை செய்தார்கள். தக்பீரும் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1612, 1613, 1632, 5293
தவாஃப் செய்யும் போது கூற
வேண்டியவை
ருக்னுல் யமானிக்கும்இ ஹஜருல் அஸ்வதுக்கும்
இடையே ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனதன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்என்று
நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸாயிப் (ரலி) நூல்கள்: அஹ்மத் 14851, அபூதாவூத் 1616
ஹஜருல் அஸ்வதை
முத்தமிடுவது
ஒவ்வொரு சுற்றின் போதும் ஹஜருல் அஸ்வதை
அடைந்ததும் அதைத் தொட்டு முத்தமிடுவது நபிவழியாகும்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வதைத்
தொட்டு முத்தமிட்டதை நான் பார்த்துள்ளேன். அறிவிப்பவர்:இப்னுஉமர்
(ரலி)
நூல்: புகாரி 1611ருக்னுல் யமானியை முத்தமிடுதல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்இ நான்கு மூலைகளில்
யமானிஎனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான்
பார்த்ததில்லை. அறிவிப்பவர்: இப்னு உமர்
(ரலி) நூல்: புகாரி 166, 1609
தவாஃப் செய்து
முடித்தவுடன் இரண்டு ரக்அத்கள் தொழுவது அவசியம்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃபை முடித்து
விட்டு மகாமே இப்ராஹீம்என்ற இடத்தை அடைந்த போது மகாமே இப்ராஹீமில் தொழுமிடத்தை
ஏற்படுத்திக் கொள்ளுங்கள்என்ற(2:125)
வசனத்தை ஓதினார்கள். இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.
அத்தொழுகையில் குல்யாஅய்யுஹல் காஃபிரூன்சூராவையும், குல்ஹுவல்லாஹு
அஹத்சூராவையும் ஓதினார்கள். பின்னர் திரும்பவும் ஹஜருல் அஸ்வதுக்குச் சென்று அதைத்
தொட்(டு முத்தமி)ட்டார்கள். பிறகு ஸஃபாவுக்குச் சென்றார்கள். அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் 2137
ஸஃபா, மர்வா
எனும் குன்றுகளுக்கிடையே ஓடுவது :
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபாவை அடைந்ததும்
ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும்என்ற (2:158)
வசனத்தை ஓதினார்கள். அல்லாஹ் எதை முதலில்
கூறியுள்ளானோ அங்கிருந்தே ஆரம்பிப்பீராக என்று கூறிவிட்டு
ஸஃபாவிலிருந்து அவர்கள் ஆரம்பித்தார்கள். அதன் மேல் ஏறி கஃபாவைப் பார்த்தார்கள்.
கிப்லாவை முன்னோக்கி லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹுஇ லஹுல் முல்கு வலஹுல்
ஹம்து வஹுவ அலாகுல்லி ஷையின் கதீர். லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தாஇ அன்ஜஸ வஃதாஇ வநஸர
அப்தாஇ வஹஸமல் அஹ்ஸாப வஹ்தாஎன்று கூறி இறைவனைப் பெருமைப்படுத்தினார்கள். இது போல்
மூன்று தடவை கூறினார்கள். அவற்றுக்கிடையே துஆ செய்தார்கள். பின்னர் மர்வாவை நோக்கி
இறங்கினார்கள். அவர்களின் பாதங்கள் நேரானதும் (சம தரைக்கு வந்ததும்) பதனுல்
வாதீஎன்ற இடத்தில் ஓடினார்கள். (அங்கிருந்து) மர்வாவுக்கு வரும் வரை நடந்தார்கள்.
ஸஃபாவில் செய்தது போலவே மர்வாவிலும் செய்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்
(ரலி) நூல்கள்: முஸ்லிம் 2137
8th
மினாவுக்குச் செல்வது
துல்ஹஜ் மாதம் எட்டாம் நாள் அன்று மினா
எனுமிடத்துக்குச் செல்ல வேண்டும்.
அன்றைய தினம் லுஹர், அஸர், மஃரிப், இஷா பஜ்ரு தொழுகையையும்
மினாவிலேயே நிறைவேற்ற வேண்டும். நூல்: முஸ்லிம் 2137.
எட்டாம் நாளின் லுஹர் தொழுகையையும், அரஃபா நாளின் (ஒன்பதாம் நாளின்) பஜ்ரு தொழுகையையும் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் மினாவில் தொழுதார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1632, 1634, அஹ்மத் 5856
9th அரஃபாவுக்குச் செல்வது :
மினாவில் ஒன்பதாம் நாளின் சுபுஹ் தொழுகையை
முடித்து விட்டு சூரியன் உதயமாகும் வரை தங்கி விட்டு அரஃபாவுக்குப் புறப்பட
வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) சூரியன் உதயமாகும் வரை
மினாவில் தங்கியதாக ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம் 2137
மினாவிலிருந்து அரஃபாவுக்குச்
செல்லும் வழியில் தல்பியாகூறிக் கொண்டும் தக்பீர்கூறிக் கொண்டும் செல்ல வேண்டும்.
நானும் அனஸ் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து
அரஃபாவுக்குச் சென்று கொண்டிருக்கும் போது தல்பியா பற்றி அவர்களிடம் கேட்டேன்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் செல்லும் போது நீங்கள் எவ்வாறு செய்து வந்தீர்கள்? எனக் கேட்டேன். அதற்கு
அனஸ் (ரலி) அவர்கள் தல்பியா கூற விரும்பியவர் தல்பியா கூறுவார். அது
ஆட்சேபிக்கப்படவில்லை. தக்பீர் கூறுபவர் தக்பீர் கூறுவார். அதுவும்
ஆட்சேபிக்கப்படவில்லைஎன்று விடையளித்தார்கள். அறிவிப்பாளர்: முஹம்மத் பின்
அபீபக்ர் நூல்: புகாரி 970இ 1659
அரஃபாவில் தங்குவதன்
அவசியம்
ஹஜ்ஜின் மிக முக்கியமான கிரியை அரஃபாவில்
தங்குவது தான். சிறிது நேரமேனும் அரஃபாவில் ஒன்பதாம் நாள் தங்காவிட்டால் ஹஜ்
கூடாது.
ஹஜ் என்பதே அரஃபா(வில் தங்குவது) தான். பத்தாம்
இரவில் பஜ்ருக்கு முன் ஒருவர் (அரஃபாவுக்கு) வந்து விட்டால் அவர் ஹஜ்ஜை அடைந்து
கொள்வார்என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்:
அப்துர்ரஹ்மான் பின் யஃமுர் (ரலி) நூல்கள்: நஸயீ 2966, 2994 திர்மிதீ 814
அரஃபாவில் செய்ய
வேண்டியவை
நான் அரஃபாவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்
பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை
செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து
விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள். அறிவிப்பவர்: உஸாமா பின்
ஸைத் (ரலி) நூல்: நஸயீ 2961
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரஃபா நாளில் குத்பா
- உரை - நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) உங்களின் இரத்தங்களும் உங்கள்
செல்வங்களும் உங்களுக்குப் புனிதமானவையாகும் என்று தொடங்கும் நீண்ட உரையை
நிகழ்த்தினார்கள். பிறகு பாங்கு சொல்லி பின்னர் இகாமத் கூறி லுஹர் தொழுதார்கள்.
பிறகு மீண்டும் இகாமத் கூறி அஸர் தொழுதார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்
(ரலி) நூல்: முஸ்லிம் 2137
முஸ்தலிஃபாவுக்குச்
செல்வது
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சூரியன் மறையும்
வரை அரஃபாவில் தங்கினார்கள். சூரியன் மறைந்ததும் புறப்பட்டு முஸ்தலிஃபாவுக்கு
வந்தார்கள். ஒரு பாங்குஇ இரண்டு இகாமத்கள் கூறி மஃரிபையும்இ இஷாவையும்
தொழுதார்கள். அவ்விரண்டுக்குமிடையே எதையும் தொழவில்லை. பிறகு பஜ்ரு நேரம் வரை
படுத்து (உறங்கி) விட்டு பஜ்ரு நேரம் வந்ததும் ஒரு பாங்கு கூறி பஜ்ரு தொழுதார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்
(ரலி) நூல்: முஸ்லிம் 2137
மீண்டும் மினாவுக்குச்
செல்வது
(பஜ்ரு தொழுததும்) கஸ்வா
எனும் தமது ஒட்டகத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏறி மஷ்அருல் ஹராம் என்ற
இடத்துக்கு வந்தார்கள். அங்கே கிப்லாவை முன்னோக்கினார்கள். அல்லாஹ்விடம்
இறைஞ்சினார்கள். (அல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு என்று கூறி)
அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தி லாயிலாஹ இல்லல்லாஹு கூறி அவனது ஏகத்துவத்தை நிலை
நாட்டினார்கள். நன்கு வெளிச்சம் வரும் வரை அங்கேயே இருந்தார்கள். சூரியன்
உதயமாவதற்கு முன் (மினாவை நோக்கிப்) புறப்பட்டார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்
(ரலி) நூல்: முஸ்லிம் 2137
ஸவ்தா (ரலி) அவர்கள் பருமனாகவும் விரைந்து
நடக்க முடியாதவர்களாகவும் இருந்தனர். அதனால் இரவிலேயே முஸ்தலிஃபாவிலிருந்து
புறப்பட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் அனுமதியளித்தார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1681, 1680
மினாவில் செய்ய வேண்டியவை
ஜம்ரதுல் அகபா
முஸ்தலிஃபாவிலிருந்து மினாவுக்குள் நுழையும்
போது இடப்புறமாக ஜம்ரதுல் அகபாஎனும் இடம் அமைந்துள்ளது.
துல் ஹஜ் பத்தாம் நாள் காலையில்
முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு மினாவை அடைந்ததும் ஜம்ரதுல் அகபாஎன்ற இடத்தில்
மட்டும் ஏழு கற்களை எறிய வேண்டும். (புகாரி 1753) ஒவ்வொரு கல்லை எறியும்
போதும் தக்பீர் கூற வேண்டும். (புகாரி 1753) ஏழு கற்களை எறிந்த பின்
கிப்லாவை நோக்கி நின்று கொண்டு இரு கைகளையும் உயர்த்தி நீண்ட நேரம் துஆச் செய்ய
வேண்டும். (புகாரி 1753) எறியப்படும் கற்கள் விரல்களால் சுண்டி விளையாடும் அளவுக்குச் சிறிதாக இருக்க
வேண்டும். (முஸ்லிம் 2289)
தலை மழித்தல்
பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபாவில்
கல்லெறிந்ததும் ஆடு, மாடுஇ ஒட்டகம்
ஆகியவற்றில் எதையேனும் குர்பானி கொடுக்க வேண்டும். அதன் பிறகு தலை முடியை
மழித்துக் கொள்ள வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவர் இவ்வாறு செய்ததும் இஹ்ராமிலிருந்து
ஓரளவு விடுபடுகிறார். இஹ்ராம் கட்டியதால் அவருக்கு விலக்கப்பட்டிருந்த நறுமணம்இ
தைக்கப்பட்ட ஆடைகள் போன்றவற்றை அவர் பயன்படுத்திக் கொள்ளலாம். மனைவியுடன் உடலுறவு
கொள்வதைத் தவிர மற்ற அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ள இப்போது முதல் அவர்
அனுமதிக்கப்படுவார்.
தலை மயிரைச் சிறிதளவு குறைத்துக் கொள்ளவும், முழுமையாக மழித்துக் கொள்ளவும் அனுமதி உண்டு; என்றாலும் முழுமையாக
மழித்துக் கொள்வதே சிறந்ததாகும். பெண்கள் சிறிதளவு முடியைக் குறைத்துக் கொள்ள
வேண்டும்.
இறைவா! மழித்துக் கொள்பவர்களை
மன்னிப்பாயாகஎன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்
தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்(மன்னிப்பாயாக என்று கூறுமாறு)
கேட்டுக் கொண்டார்கள். இறைவா! மழித்துக் கொள்பவர்களை மன்னிப்பாயாகஎன்றே (மீண்டும்)
கூறினார்கள். (மீண்டும்) நபித்தோழர்கள் முடியைக் குறைத்துக் கொள்பவர்களையும்என்று
கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறைத்துக் கொள்பவர்களையும்
(மன்னிப்பாயாக)என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா
(ரலி) நூல்: புகாரி 1727
கல்லெறிந்த பின்
நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து
விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்என்று நபிகள் நாயகம்
(ஸல்) கூறியுள்ளனர்.அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 1708
தவாஃப் அல் இஃபாளா
பத்தாம் நாள் அன்று மினாவில் ஜம்ரதுல் அகபாவில்
கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்துஇ தலையை மழித்த பின் மக்காவுக்குப்
புறப்பட்டு மீண்டும் தவாஃப் அல் இஃபாளா எனும் தவாஃப் செய்ய வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள்
அன்று தவாஃப் அல் இஃபாளாசெய்து விட்டுஇ திரும்பி வந்து மினாவில் லுஹர்
தொழுதார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 2307
தவாஃப் அல் இஃபாளா
செய்யும் முறை
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவாஃப் அல்
குதூம்செய்யும் போது மூன்று தடவை ஓடியும்இ நான்கு தடவை நடந்தும் சுற்றியதாக
முன்னர் கண்டோம். ஆனால் இந்தத் தவாஃபின் போது ஏழு சுற்றிலும் நடந்தே தான் செல்ல
வேண்டும். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: அபூதாவூத் 1710, இப்னுமாஜா 3051
பெயர் குறிப்பிடப்பட்ட தவாஃபாக இருந்தாலும்இ
உபரியாகச் செய்யும் தவாஃபாக இருந்தாலும் ஒவ்வொரு தவாஃபையும் முடித்த பின் இரண்டு
ரக்அத்கள் தொழ வேண்டும்.
அது போல் ஸஃபாஇ
மர்வாவுக்கிடையே ஸஃயும் செய்ய வேண்டும்.
இந்தத் தவாஃபை முடித்த பிறகு உடலுறவு உட்பட
அனைத்தும் ஹலாலாகின்றது. இப்போது தான் முழுமையாக இஹ்ராமிலிருந்து ஒருவர்
விடுபடுகிறார். இஹ்ராம் காரணமாக அவருக்குத் தடுக்கப்பட்ட யாவும் இப்போது முதல்
ஹலாலாகின்றது. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்கள்: புகாரி 319, 1562, 4408
கல்லெறியும் நாட்களும்இ
இடங்களும்
பத்தாம் நாள் அன்று ஜம்ரதுல் அகபா எனும்
இடத்தில் மட்டும் ஏழு கற்களை எறிவது பற்றி முன்னர் அறிந்தோம். அதைத் தவிர கல்லெறிய
வேண்டிய மற்ற இடங்களும் நாட்களும் உள்ளன.
துல்ஹஜ் பதினொன்றுஇ
பனிரெண்டுஇ பதிமூன்று ஆகிய மூன்று நாட்கள்
அந்த நாட்களில் கல்லெறிவதற்காக அதற்கு முந்திய
இரவுகளில் மினாவிலேயே தங்கிட வேண்டும். தினமும் சூரியன் உச்சியிலிருந்து
சாய்ந்ததும் கல்லெறியும் மூன்று இடங்களிலும் தலா ஏழு கற்களை எறிய வேண்டும்.
மினாவுக்குள் நுழையும் போது இடது புறம்
ஜம்ரதுல் அகபா அமைந்துள்ளதை நாம் முன்னர் அறிந்தோம். அங்கிருந்து 116.77 மீட்டர் தூரத்தில்
ஜம்ரதுல் உஸ்தா எனும் இடம் அமைந்துள்ளது.
ஜம்ரதுல் உஸ்தாவிலிருந்து 156.4 மீட்டர் தூரத்தில்
ஜம்ரதுல் ஊலா (அல்லது ஜம்ரதுல் ஸுக்ரா) அமைந்துள்ளது.
இம்மூன்றும் கல்லெறிய வேண்டிய இடங்களாகும்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஊலாஎனுமிடத்தில் ஏழு
கற்களை எறிந்தார்கள். ஒவ்வொரு கல்லுடனும் தக்பீர் கூறினார்கள். பிறகு சற்று
முன்னேறிஇ சம தரையைத் தேர்வு செய்து கொண்டுஇ கிப்லாவை முன்னோக்கி நீண்ட நேரம்
நின்றார்கள். தமது கைகளை உயர்த்தி துஆச் செய்தார்கள். பிறகு ஜம்ரதுல் உஸ்தாவில்
கல்லெறிந்தார்கள். பிறகு இடது புறமாக நடந்து சென்று சம தரையில் கிப்லாவை நோக்கி
நின்றார்கள். பிறகு கைகளை உயர்த்தி துஆச் செய்தார்கள். அங்கே நீண்ட நேரம்
நின்றார்கள். பிறகு பதனுல் வாதிஎன்ற இடத்திலிருந்து ஜம்ரதுல் அகபாவில்
கல்லெறிந்தார்கள். ஆனால் அங்கே நிற்காமல் திரும்பினார்கள். நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்திருக்கிறேன்எனவும் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸாலிம் நூல்: புகாரி 1751 1753
சூரியன் உச்சியிலிருந்து
சாய்வதைக் கவனித்து உடனே கல்லெறிய வேண்டும்.
நாங்கள் நேரத்தைக் கணித்துக் கொண்டே இருப்போம்.
சூரியன் உச்சி சாய்ந்ததும் கல்லெறிவோம்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1746
தவாஃபுல் விதாஃ
மினாவில் கல்லெறிந்து முடிந்ததும் ஹஜ்ஜின்
எல்லாக் கிரியைகளும் நிறைவுறுகின்றன. ஆயினும் இறுதியாக தவாஃபுல் விதாஃ என்று
கூறப்படும் தவாஃபைச் செய்ய வேண்டும்.
விதாஃ என்றால் விடை பெறுதல் என்பது பொருள்.
விடை பெற்றுச் செல்லும் நேரத்தில் இந்த தவாஃப் செய்யப்படுவதால் இது தவாஃபுல் விதாஃ
என்று கூறப்படுகின்றது.
மக்கள் பல திசைகளிலும் புறப்பட்டுச்
செல்லலானார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசிக் கிரியையை
அல்லாஹ்வின் ஆலயத்தில் (தவாஃப்) செய்து விட்டுப் புறப்படுங்கள்என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு
அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம் 2350, 2351
தவாஃபுல் இஃபாளாவைப் போன்றே இந்தத் தவாஃபும்
செய்யப்பட வேண்டும். இதைச் செய்தவுடன் புறப்பட்டுச் சென்று விடலாம்.
ஹஜ்ஜுக்காக மூன்று வகையாக
இஹ்ராம் கட்டுதல்
1. தமத்துவ்
ஷவ்வால்இ துல்கஃதாஇ துல்ஹஜ் மாதத்தின் பத்து
நாட்கள் ஹஜ்ஜுடைய மாதங்கள் என்பதை முன்பே நாம் அறிந்தோம்.
ஹஜ்ஜுடைய இந்த மாதங்களில் இஹ்ராம் கட்டுவதற்கு
நிர்ணயிக்கப்பட்ட எல்லைகளில் முதலில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இவ்வாறு இஹ்ராம்
கட்டியவர் மக்கா சென்று உம்ராவை நிறைவேற்றி விட்டு இஹ்ராமிலிருந்து விடுபட
வேண்டும். இஹ்ராம் இல்லாமல் அவர் மக்காவிலேயே தங்கியிருக்க வேண்டும். துல்ஹஜ்
மாதம் எட்டாம் நாள் அன்று மீண்டும் ஒரு தடவை ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட வேண்டும்.
அதன் பிறகு ஹஜ்ஜுடைய கிரியைகளை நிறைவேற்றி முடிக்க வேண்டும். இதற்கு தமத்துவ்
என்று கூறப்படுகின்றது. உம்ராவுக்கு இஹ்ராம் கட்டும் போது லப்பைக்க உம்ரதன்என்றும்
ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டும் போது லப்பைக்க ஹஜ்ஜன்என்றும் கூறி இஹ்ராம் கட்ட
வேண்டும்.
2. கிரான்
கிரான்என்றால் சேர்த்துச்
செய்தல் என்பது பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட வேண்டிய இடத்தில் ஒருவர் இஹ்ராம்
கட்டும் போது ஹஜ்ஜுக்காகவும், உம்ராவுக்காகவும்
சேர்த்து இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும். லப்பைக்க ஹஜ்ஜன் வஉம்ரதன்என்று கூறுவதன்
மூலம் இவ்வாறு இஹ்ராம் கட்டலாம்.
இவ்வாறு இஹ்ராம் கட்டியவர் உம்ரா என்று எதையும்
தனியாகச் செய்வதில்லை.தவாஃபுல் குதூம் செய்து விட்டுஇ இஹ்ராமைக் களையாமல் எட்டாம்
நாளில் இருந்து ஹஜ்ஜின் கிரியைகளை அவர் செய்ய வேண்டும்.
3. இஃப்ராத்
இஃப்ராத்என்றால்
தனித்துச் செய்தல்என்பது பொருள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டுமிடத்தில் ஹஜ்ஜுக்காக மட்டும் லப்பைக்க ஹஜ்ஜன்என்று
கூறி இஹ்ராம் கட்ட வேண்டும். அதைத் தொடர்ந்து ஹஜ்ஜின் கிரியைகளை நிறைவேற்ற வேண்டும்.
ஹஜ்ஜின் கிரியைகளை முடித்த பிறகு விரும்பினால் உம்ராச் செய்யலாம். இவ்வாறு ஹஜ்ஜுக்காக
மட்டும் இஹ்ராம் கட்டியவர்கள் குர்பானி எதனையும் கொடுக்க வேண்டியதில்லை.
நபிவழியில் நம் ஹஜ் என்ற
சகோ: பீஜே.அவர்கள் எழுதிய நூலிலிருந்து.
ஹஜ்பயணிகளின் கனிவான கவனத்திற்கு....!!
அல்லாஹ்வுடைய மாபெரும் பேரருளால் மக்காவை நோக்கி ஹஜ் பயணிகளின் வருகை குவிந்த வண்ணம் இருக்கிறது..
மக்க மாநகரே மக்கள் வருகையால் சூழ்நது காணப்படுகிறது ...
ஆர்வமுடன் மக்கள் புனித பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் வேளையில் வரக்கூடிய மக்கள் கஃபாவின் மீது வைத்துள்ள கூடுதல் பாசத்தினாலும் , சில தவறான வழிகாட்டுதல்களாலும் கஃபாவை தவாப் செய்யும் போது அதன் சுவற்றில் தங்கள் கரங்களைத் தேய்த்து கொள்வதையும் , முகங்களை தேய்த்துக் கொள்வதையும் , ரூபாய் நோட்டுகளை கஃபாவின் சுவற்றில்தேய்த்து எடுத்துச் சென்றால் பரக்கத் கிடைக்கும் என்ற தவறான நம்பிக்கைகளால் அவற்றையும் தேய்க்கிறார்கள்...
இன்னும் சிலரோ.... தவாபின் நோக்கமே ஹஜ்ருல் அஸ்வத் கல்லைத் தொடுவதும் முத்தமிடுவதும்தான் எனத் தவறாக விளங்கி கொண்டு அதைத் தொடுவதற்காக சண்டையிட்டு கொள்வதும் வேதனையான விசயம் ...
அதிலும் பெண்களில் சிலர் இக்காரியங்களில்ஈடுபடுவது வேதனையிலும் வேதனை ...!!
கஃபாவின் வாசலைப் பிடித்து தொங்குவது ... இது போன்ற நபி (_ஸல்) அவர்கள் காட்டித்தராத வழிமுறைகளைப் பக்தியின் பெயரால் செய்வது அனைத்தும் தவிர்க்கப்பட
வேண்டும் .
வேண்டும் .
இங்குள்ள மார்க்க அறிஞர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சிலர் கேட்பதில்லை ...
அதேபோல் தவாப் செய்யும் போது வீடியோ கால் செய்து பேசுவது ... புகைப்படங்கள் எடுக்க முனைவது இவையெல்லாம் நமது அமல்களை பாழாக்குவதோடு மட்டும் அல்லாமல்... பிற சகோதரர்கள் தவாப் செய்வதற்கும் இடையூறாக அமைந்துவிடும் ...
இது போன்ற காரியங்களில் பெரும்பாலும் தமிழ் மக்கள் ஈடுமடுவதில்லை என்றாலும் பிறருக்கு தெரியப்படுத்தி அத்தவறுகளை விட்டு காப்பாற்றிட
வேண்டும் .
வேண்டும் .
எவ்வளவோ சிரமங்களுக்கு மத்தியில் நாம் செய்யும், ஹஜ் இறைவனால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ் ஆக அமைந்தால்மட்டுமே நற்கூலி கிடைக்கும் .
அதற்காக ஹஜ் உடைய வழிமுறைகளக , செய்ய வேண்டியவை எவை , செய்யக்கூடாதவை எவை என்பதைப் பற்றி நன்கு அறிந்து கொண்டு ஹஜ் செய்வது சாலச்சிறந்தது ...
அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனால் ஒப்புக்கொள்ளப்பட்ட வகையில் ஹஜ் செய்யும் பாக்கியத்தை தந்தருள் புரிவானாக ..!
-- வாட்ஸ் அப் தகவல்
-- வாட்ஸ் அப் தகவல்