சனி, 31 அக்டோபர், 2015

நாட்டு கொய்யா

Prithiviraj Logi's photo.
உலகில் உள்ள பழங்களிலே மிகவும் அதிக சத்து நிறைந்தது நம்ம நாட்டு கொய்யா தான் நிறுபித்துள்ளது அமெரிக்கா பல்கலைக்கழகம்
நாட்டு கொய்யாப்பழம்
இதன் அருமை தெரிந்தோ,
தெரியாமலோ நாம்
இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டால்
மிகவும் அக்கறையோடு உட்கொள்வோம்.
* நோய் எதிர்ப்பு சக்தி தரும்
* கொய்யாவில் உள்ள வைட்டமின் 'சி' சத்து ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட நான்கு மடங்கு அதிகம். வைட்டமின் 'சி' சத்து
உடலை ஆராக்கியமாக வைத்துக் கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிக்கின்றது.
* கொய்யாவில் உள்ள காப்பர் சத்து ஹார்மோன்கள் சுரப்பதற்கும், செயல்படுவதற்கும் வெகுவாய் உதவுகின்றது. நாளமில்லா
சுரப்பிகளின் செயல்பாட்டிற்கு குறிப்பாக தைராய்டு சுரப்பி செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகின்றது.
* புற்று நோய் அபாயத்தை கொய்யா வெகுவாய் குறைக்கின்றது. கொய்யாவில் உள்ள வைட்டமின் 'சி' சத்தும், லைகோபேனும்
திசுக்களை பாதுகாப்பதால் புற்று நோய் தாக்கும் அபாயம் வெகுவாய் குறைகின்றது.
* சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொய்யா. நார் சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரை
நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம்.
* கண் பார்வை சிறக்க கொய்யாப்பழமும் சிறந்ததாகும்.
* இதில் போலிக் ஆசிட், வைட்டமின் பி9 இருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கொய்யாபழம் உண்ண அறிவுறுத்தப்படுகின்றது.
இது குழந்தையின் நரம்பு மண்டலத்தினை நன்கு பாதுகாக்கின்றது.
* ரத்த அழுத்தத்தை சீராய் வைக்கின்றது. ரத்த உற்பத்தியைக் கூட்டுகிறது.
* கொய்யாப்பழம் உண்டால் இதில் உள்ள 'மக்னீசியம்' நரம்புகளையும், தசைகளையும் தளர்த்தி விடுவதால் மனச் சோர்வு
குறையும்.
* கொய்யாவில் உள்ள நியாசின் எனப்படும் வைட்டமின் பி3, பிரிடாக்ஸின் எனப்படும் வைட்டமின் பி6 மூளைக்கு ரத்த ஓட்டம்
நன்கு செல்ல உதவுவதால் மூளை சோர்வின்றி இருக்கும்.
* இதில் உள்ள வைட்டமின் சி, ஏ மற்றும் லைகோபேன், கரோட்டின் போன்றவை சரும சுருக்கங்களை நீக்குவதால் முதுமைத்
தோற்றம் தள்ளிப் போகின்றது.
* கொய்யா கழிவுப் பொருட்களை நீக்கி குடல் சுத்தமாய் வைக்கும்.
எந்த ஒரு பழத்தையும் பழமாய் சாப்பிடுவதே நல்லது. சில வகை சமையல் குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. காயோ,
பழமோ, சமைக்கும் பொருளோ நன்கு கழுவிய பிறகே அதை பயன்படுத்த வேண்டும். வெள்ளை, சிகப்பு இருவகை
கொய்யாப்பழங்களுமே சிறந்ததுதான்.
கொய்யாப் பழத்தில் உள்ள சத்துக்கள்
:
1 கப் கொய்யாப்பழம் சுமார் - 165 கிராம்
கலோரி சத்து 112
கொழுப்பு சத்து - 2 சதவீதம்
கொலஸ்டிரால் - 0 சதவீதம்
உப்பு - 0 சதவீதம்
மாவுச்சத்து - 8 சதவீதம்
நார்சத்து - 36 சதவீதம்
புரதம் 4 கிராம்
வைட்டமின் ஏ - 21 சதவீதம்
வைட்டமின் சி - 628 சதவீதம்
கால்சியம் - 3 சதவீதம்
இரும்பு சத்து - 2 சதவீதம்
வைட்டமின் சத்துக்கள் நிறைந்தது.

பொது சிவில் சட்டம்

பொது சிவில் சட்டம் கோரிய வழக்கைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ...
( அனுப்பி உதவியவர் நண்பர் வழக்குரைஞர் பாலு...)

வெள்ளி, 30 அக்டோபர், 2015

போலி பெண்ணுரிமை பேசுபவர்

பிறந்த சில வினாடிகளில் நாய்க்கு இரையான சிசு.
நெஞ்சை பதற வைக்கும் படம்....இந்த கொடூரத்துக்கு காரணம் இரண்டு.
முதல் காரணம்:
பெண் உரிமை, பெண் சுதந்திரம் என்கிற பெயரில் அந்நிய ஆண்களுடன் நெருங்கி பழகுவது. முறையற்ற உறவின் மூலம் குழந்தையை பெறுவது. பிறகு அவமானத்துக்கு பயந்து பிறந்த குழந்தையை நாய்களுக்கு இரையாக்குவது.
இரண்டாவது காரணம்:
பிறந்தது பெண் குழந்தையாக இருந்தால் அதை இது போல் தூக்கி எறிவது. இதற்க்கு காரணம் பிரசவ செலவு, பெயர் வைக்க செலவு, பூப்புனித நீராட்டு விழாவுக்கு செலவு, கலயாணத்துக்கு செலவு, வளைகாப்புக்கு செலவு, பேரக்குழந்தைகளுக்கு செலவு, இப்படி பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு எண்ணற்ற செலவுகள். செலவு செய்ய முடியாதவன். பிறக்கும் போதே அந்த பெண் குழந்தைக்கு முடிவு கட்டுகிறான்.
ஆக போலி பெண்ணுரிமை பேசுபவர்களும், வரதட்சணை வாங்கியவர்களும், வாங்க முடிவு செய்து இருப்பவர்களும் இந்த படத்தை பார்த்து பரிதாபப்பட அருகதை அற்றவர்கள். இந்த கொடுமைக்கு முழு காரணமே நீங்கள் இருவர்களும் தான்.
தமீம் அன்சாரி's photo.

கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு..

Healer G Giridharan's photo.

பெண்களுக்கு “கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு...” என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால் இன்று உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை பெண்களின் அழகை மெருகேற்றி கொள்ள பல்வேறு அழகு பொருட்கள் (Cosmetics) வந்துவிட்டன. அவ்வற்றில் ஒன்றை கூட பயன்படுத்தாத பெண்ணே உலகில் 99% இல்லை எனலாம். ஆனால் அவ்வாற்றின் தீமைகளை அறியாதவர்களே பெரும்பாலானோர். இங்கே உள்ள இந்த படத்தை பார்த்தபோது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அதை அனைவரும் அறிந்து விழிப்படைய வேண்டியே இங்கு உங்களுக்காக பதிவிடபடுகிறது. ஆங்கிலம் தெரியாத நண்பர்களுக்காக இங்கு அதன் தமிழாக்கமும் தரப்பட்டுள்ளது. இங்கே இருக்கும் இந்த புகைப்படம் எனக்கு நண்பர் செந்தில்குமார் என்பவரின் மூலம் Judgement Day என்கிற PDF file தொகுப்பில் கிடைத்தது. அது மிக சிறியதாகவும் விரிவாக்கினால் தெளிவில்லாமலும் ஒழுங்கீனமாகவும் இருந்தது. நண்பர் ஜகதீஷ் (Jagatish JA) இந்த புகைப்படத்தை Edit செய்து சீராக்கி தந்தார். அவருக்கு மிக்க நன்றி.
படத்தில் உள்ளவற்றின் விரிவாக்கங்களும் தமிழாக்கமும்:
SHAMPOO:
AVERAGE NO. OF CHEMICALS: 15
MOST WORRYING CHEMICALS: Sodium Lauryl Sulphate, Tetrasodium and Prophylene Glycol
POSSIBLE SIDE EFFECTS: Irritation in Eyes and Head; Possible Eye Damage.
நாம் தலைக்கு பயன்படுத்தும் ஷாம்பூக்களில் 15 விதமான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Sodium Lauryl Sulphate, Tetrasodium and Prophylene Glycol ஆகியவை.
இதை பயன்படுத்துவதனால் வரும் பக்க விளைவுகள்: கண்களிலும் தலையிலும் எரிச்சல் மற்றும் கண்கள் சேதமடைய வாய்ப்பு.
EYE SHADOW:
AVERAGE NO. OF CHEMICALS: 26
MOST WORRYING CHEMICALS: Polythylene Terephthalate
POSSIBLE SIDE EFFECTS: Linked to Cancer; Infertility; Hormonal disruptions and Damage to the Body’s Organs.
கண் புருவ மை: இதில் 26 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Polythylene Terephthalate ஆகும்.
இதை பயன்படுத்துவதனால் வரும் பக்க விளைவுகள்: பெண்களுக்கு மலட்டுத்தன்மை, ஹோர்மோன்கள் சுரப்பதில் தடைகள், உடல் உறுப்புகள் பாதிப்பு, தோல் புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்.
LIPSTICK:
AVERAGE NO. OF CHEMICALS: 33
MOST WORRYING CHEMICALS: Polymenthyl Methacrylate
POSSIBLE SIDE EFFECTS: Allergies; Linked to Cancer
லிப்ஸ்டிக்: இதில் 33 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Polymenthyl Methacrylate ஆகும்.
இதை பயன்படுத்துவதனால் வரும் பக்க விளைவுகள்: ஒவ்வாமை, புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்
NAIL VARNISH:
AVERAGE NO. OF CHEMICALS: 31
MOST WORRYING CHEMICALS: Phthalates
POSSIBLE SIDE EFFECTS: Linked to Fertility Issues and Problems in Developing Babies.
நக மேற்பூச்சு: இதில் 31 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Phthalates ஆகும். இதை பயன்படுத்துவதால் பெண்கள் கருத்தரிப்பதிலும் குழந்தை வளர்ச்சியிலும் பாதிப்புகள் ஏற்படும்.
PERFUME:
AVERAGE NO. OF CHEMICALS: 250
MOST WORRYING CHEMICALS: Benzaldehyde, Benzyl Alcohol, Benzyl Acetate
POSSIBLE SIDE EFFECTS: Irritation to Mouth, Throat and Eyes; nausea (Feel like a patient, incomfortability); Linked to Kidney Damage.
Perfume (நறுமண தைலம்): இதில் 250 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Benzaldehyde, Benzyl Alcohol, Benzyl Acetate ஆகும். மற்ற அழகுசாதன பொருட்களை விடவும் Perfume பயன்படுத்துவது மிகவும் தீமையானது. இதை பயன்படுத்துவதால்
1. கண்கள், வாய், தொண்டை போன்ற இடங்களில் எரிச்சல் இருக்கும்.
2. சிறுநீரகம் பழுதடைய வழிவகுக்கிறது.
3. பயன்படுத்துபவர்கள் எந்த நேரமும் அசாதாரண நிலையிலேயே காணப்படுவார்கள்.
FAKE TAN (Skin Hair Remover):
AVERAGE NO. OF CHEMICALS: 22
MOST WORRYING CHEMICALS: Ethyl Paraben, Methyl Paraben, Prophyl Paraben
POSSIBLE SIDE EFFECTS: Rashes; Irritation; Hormonal(Thyroid) Disruption.
தோல் ரோமம் நீக்கி(Fake tan): இதில் 22 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Ethyl Paraben, Methyl Paraben, Prophyl Paraben ஆகும். இதை பயன்படுத்துவதால் சொறி, தடித்தல், எரிச்சல், ஹோர்மோன் (Thyroid) சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
HAIRSPRAY:
AVERAGE NO. OF CHEMICALS: 11
MOST WORRYING CHEMICALS: Octinoxate, Isophthalates
POSSIBLE SIDE EFFECTS: Allergies; Irritation to Eyes, Nose and Throat; Hormone Disruption, Linked to Damage in Cell Structure.
இதில் 11 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Octinoxate, Isophthalates ஆகும். இதை பயன்படுத்துவதால் ஒவ்வாமை, கண், மூக்கு, தொண்டை பகுதிகளில் எரிச்சல், ஹோர்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும். உடலின் செல்கள் பழுதடைய வழிவகுகிறது.
BLUSHER:
AVERAGE NO. OF CHEMICALS: 16
MOST WORRYING CHEMICALS: Ethylparabens, Methylparaben, Prophylparaben
POSSIBLE SIDE EFFECTS: Rashes; Irritation; Hormonal Disruptions
இதில் 16 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Ethyl Paraben, Methyl Paraben, Prophyl Paraben ஆகும். இதை பயன்படுத்துவதால் சொறி, தடித்தல், எரிச்சல், ஹோர்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
FOUNDATION:
AVERAGE NO. OF CHEMICALS: 24
MOST WORRYING CHEMICALS: Polymethyl Methacrylate
POSSIBLE SIDE EFFECTS: Allergies; Disrupts Immune System; Links to Cancer.
இதில் 24 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Polymethyl Methacrylate ஆகும். இதை பயன்படுத்துவதால் சொறி, தடித்தல், எரிச்சல், நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாக பாதிக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படும்.
DEODORANT
AVERAGE NO. OF CHEMICALS: 15
MOST WORRYING CHEMICALS: Isoprophyl Myrislate, ‘Parfum’
POSSIBLE SIDE EFFECTS: Irritation to Skin, Eyes; lungs problem; headaches; Dizziness; Respiratory Problems.
இதில் 15 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது Isoprophyl Myrislate, ‘Parfum’ ஆகும். இதை பயன்படுத்துவதால் தோளில், கண்களில் எரிச்சல்; நுரையீரல் பாதிப்பு, மூச்சு விடுவதில் பிரச்சனைகள்; பலவிதமான தலைவலிகள், மயக்கம் ஏற்படும்.
BODY LOTION:
AVERAGE NO. OF CHEMICALS: 32
MOST WORRYING CHEMICALS: Polyethylene Glycol, Which is also found in Oven Productions, Methylparaben, Prophylparaben
POSSIBLE SIDE EFFECTS: Rashes; Irritation; Hormonal Disruptions
இதில் 32 வகையான ரசாயன நஞ்சுகள் பயன்படுத்தபடுகின்றன. அவற்றில் மிக மோசமானது, Polyethylene Glycol (Microwave oven தயாரிப்பதில் பயன்படுவது) Methyl Paraben, Prophyl Paraben ஆகும். இதை பயன்படுத்துவதால் சொறி, தடித்தல், எரிச்சல், ஹோர்மோன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும்.
BABY SHAMPOO:
MOST WORRYING CHEMICALS: 1,4-dioxane
POSSIBLE SIDE EFFECTS: Leads to Cancer
குழந்தைகளுக்கான ஷாம்பூவில் மிருதுதன்மைகாக 1,4-dioxane இருக்கிறது. அது குழந்தைகளுக்கு புற்றுநோய் வர வழிவகுக்கிறது.
FORMALDEHYDE (Methylene Glycol) used in HAIR STRAIGHTENING/ SMOOTHENING CREAMS is Carcinogenic (புற்றுநோய் வளரத் தூண்டுதல் செய்யும் பொருள்.) and can cause asthma like symptoms and Dermatitis.
தலைமுடியை நேராகவும் மிருதுவாகவும் ஆக்கும் கிரீம்களில் FORMALDEHYDE (Methylene Glycol) பயன்படுத்தபடுகிறது. அது புற்றுநோய்க்கான ஆராய்ச்சிகளில் புற்றுநோய் வளரத் தூண்டுதல் செய்யும் பொருளாக பயன்படுகிறது. ஆஸ்துமா நோய் ஏற்படுத்துகிறது.
LITHIUM HYDROXIDE used in Beauty parlors as a pH Adjuster affects Developmental, neutral and Reproductive Tissues.
Beauty parlor களில் pH Adjuster ஆக பயன்படும் LITHIUM HYDROXIDE இனபெருக்க திசுக்களை பாதிக்கிறது.
Kohl, Kajal, Al-kahl or Surma in Eye Cosmetics is often contaminated with lead, aluminium and antimony, and can lead to neurological damage, learning and behaviour Problems, seizures, anaemia, kidney problems and more.
பெண்கள் சாதரணமாக கண்களுக்கு பயன்படுத்தும் காஜல் ஈயம், அலுமினியம், அண்டிமோனி ஆகியவற்றால் உருவாக்கபடுவது. அதை பயன்படுத்துவதால் அவர்களுக்கு கற்றல் மற்றும் நடத்தை பிரச்சனைகள், அனிமியா, சிறுநீரக பிரச்சனைகள் என பல ஏற்படும்.
P-phenylenediamine in HAIR COLORANTS can be carcinogenic.
Carcinogenic COAL TAR ingredients in dark hair dyes.
ஹேர்டையில் பயன்படுத்தும் P-phenylenediamine புற்றுநோயை தூண்டுவது.
PRESERVATIVES added in Cosmetic Things are leads to Cancer and give Impact in Developmental, Reproductive and Endocrine Function.
அழகு பொருட்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் Preservative அனைத்துமே உடலின் வளர்ச்சி, இனபெருக்கம் மற்றும் நாளமில்லா சுரப்பிகளின் இயக்கத்தை பாதிக்கும்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் உலக காஸ்மெடிக் நிறுவனங்கள் இந்தியாவைக்குறிவைத்தன – உடனே 1994ல் ஐஸ்வர்யாவுக்கும், சுஸ்மிதாவுக்கும் உலக அழகி பட்டங்கள் கொடுத்து இந்தியப்பெண்களை கவிழ்த்தன.
1994, 1996, 1997, 1999, 2000 ம் என தொடர்ந்து லாரா தத்தா, டயான ஹெய்டன், யுக்தா, பிரியங்கா என தேர்வு செய்து இந்தியாவில் அழகுசாதனப்பொருட்களை ஆழமாக கால் ஊன்றச்செய்து இந்தியப்பெண்களை மயக்கி கோடிகளை குவித்தது.
2000த்திற்க்குப்பிறகு முதல் 20 இடங்களில் கூட இந்திய அழகிகள் வந்ததில்லை. காரணம் இனி இந்தியப்பெண்கள் அழகு சாதனப்பொருட்களை கைவிடமாட்டார்கள் என்று புரிந்துக்கொண்டதால் ஆப்ரிக்க, தென்அமெரிக்க நாட்டுப்பெண்களை கவர சென்றுவிட்டார்கள்.
இனி பெண்களே உங்கள் வாழ்வில் இத்தகைய அழகு (தீமை தரும் அசிங்கமான) பொருட்களை திரும்பியும் பார்க்க வேண்டாம், ஒரு சகோதரனாக எனது அன்பான வேண்டுகோள். – ஹீலர். கிரிதரன்
எல்லாம் அவன் செயல்! அவனின்றி ஒரு அணுவும் அசையாது! எல்லா புகழும் இறைவனுக்கே!

பொன்னான வாக்கினை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் .

Divya Victor Raj's photo.
1 1/2 லட்சத்திற்கும் அதிகமாக தமிழ்மக்கள் குவைத்தில் இருக்கின்றோம் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான பேர் இனைய தளத்தினை உபயோகிக்கின்றோம் ஆனால் GULF AIR விமான சேவை குறித்த வாக்கெடுப்பிற்கு இதுவரையிலும் வெறும் 18000 ஓட்டு மட்டுமே பதிவாகியிருக்கின்றது என்பது மிகவும் வருத்தம் அளிக்கின்றது தயவுசெய்து 1 நிமிடம் ஒதுக்கி http://gulfaircampaign.digeelabs.comஇந்தஇனைய தளத்திற்கு சென்று தங்களது பொன்னான வாக்கினை அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் .
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில், அதிக அளவு நம் தமிழ் சொந்தங்கள் வாழ்கிறார்கள், அதிலும் பெரும்பானவர்கள் தென் தமிழகத்தை சேர்ந்தவர்களே... ஆனால் இவர்கள் தாயகம் எளிதாக செல்ல வேண்டும் எனில், இவர்களுக்கு இன்று வரை குவைத்தில் இருந்து திருச்சிக்கு செல்ல உள்ள ஒரே விமான சேவை ஸ்ரீலங்கன் மட்டுமே...
இப்போது பஹ்ரைன் நாட்டின் விமான நிறுவனம் "GULF AIR" நமது தமிழ் மக்களுக்கு உதவ முன் வந்துள்ளார்கள் - இதன் முதற்கட்டமாக மக்களிடம் நேரடியாக அவர்களின் இணையத்தளம் மூலம் வாக்கடுப்பு நடத்துகிறார்கள்..
(இணையத்தள விபரம்: http://gulfaircampaign.digeelabs.com/ )
என் அருமை சொந்தங்களே - உங்களின் சிறிய நேரத்தை ஒதுக்கி, நமது குவைத் வாழ் சொந்தகளுக்காக, அவர்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற.. உங்களின் ஆதரவை நீங்கள் அளிக்கும் வாகுகள் மூலம் தருமாறு, மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்...!!!

ஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி?

Cuddalore Aranganathan's photo.

++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும் ஈ.சி எனப்படும் வில்லங்கச் சான்றிதழை ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாடு அரசு பத்திரப்பதிவுத்துறை அதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பொதுவாகவே ஈ சி (EC - Encumbrance Certificate) எனப்படும் (வில்லங்க சான்றிதழ்) கிடைக்க நிறைய பேருக்கு ஒன்று ஒரு தரகரை நாட வேண்டும் அல்லது ரிஜஸ்டர் ஆபிசுக்கு இரண்டு அல்லது மூன்று முறை நடக்க வேண்டிய கட்டாயம்.
இனிமேல் 1 ரூபாயில் ஆன்லைனில் எடுத்துவிடலாம். அது போக இதை வீட்டுக்கு கொரியர் அல்லது ஸ்பீட் போஸ்ட்டில் கூட அனுப்பி வைக்க இந்த அரசாங்கம் ரெடி நீங்க ரெடியா?
ஈஸி எடுக்க 1 ரூபாய். முதல் வருடத்திற்க்கு 15 ரூபாயும் ஒவ்வொரு வருஷம் கூடுதல் ரெக்கார்ட் பெற 5 ரூபாய், பத்து வருடத்திற்க்கு தோராயமாக 1+15+9 = 61 ரூபாய் தான் செலவு. இதை உங்கள் வீட்டுக்கே கொரியர் செய்ய ரூபாய் 25 தான் செலவு. ஆன்லைனில் நேரடியாக தேடி பிரின்ட் அவுட் செய்து கொள்ள வெறும் 100 ரூபாய் தான் மொத்த செலவு.
இது போக ரெஜிஸ்டர் டாக்குமன்ட் காப்பி, சிட்டா அடங்கல் கூட இங்கு காப்பி கிடைக்கும். சென்னை, கடலூர், கோயம்புத்தூர்,திருச்சி, சேலம், மதுரை, தஞ்சாவூர், வேலூர் நம்ம திருநெல்வேலி அலுவலகங்களுக்கும் இது பொருந்தும். அது போக ஆங்கிலத்திலும், தமிழிலும் ஃபார்ம் ஃபில் செய்யலாம்.
அது போக பதிவு திருமண சான்றிதழ் கூட உங்களுக்கு இங்கே ஆன்லைன் மூலம் டவுன்லோட் செய்யலாம். அதற்கு சார்ஜ் 1ருபாய். கொரியரில் அனுப்ப ஒரு காப்பிக்கு 2 ரூபாய் மற்றூம் கொரியர் சார்ஜ் 25 ரூபாய் மட்டுமே.
அது போக சிட் கம்பெனிகள், சொசைட்டிகளின் டாக்குமென்ட்களை பற்றி தெரிந்து இன்வெஸ்ட் செய்யுங்கள் அது கிடைக்க கூட ஆன்லைன் லின்க் உள்ளது
உங்களின் அரசாங்க லேன்ட் வேல்யு கைட்லைன்ஸ் பெறவும் முடியும். இதனால் நீங்கள் வாங்கும் சொத்துக்கு எவ்வளவு ஸ்டாம்ப் பேப்பர் என முன்னமே திட்டமிட முடியும்.
அதற்கான இணைய தள முகவரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
ஈ.சி சர்டிபிகேட் ஆங்கிலத்தில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0
ஈ.சி சர்டிபிகேட் தமிழில் பெற
http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1
டாக்குமெண்ட் ரிஜிஸ்ட்ரேசன்
http://www.tnreginet.net/igregn/webAppln/cert_document.asp
திருமணத்தை பதிவு செய்ய
http://www.tnreginet.net/english/smar.asp
சீட்டு கம்பெனி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/schit.asp
சொசைட்டி ரிஜிஸ்டர்
http://www.tnreginet.net/english/society.asp
லேண்ட் வேல்யூ சர்டிபிகேட் பெற
http://www.tnreginet.net/Guidelineva…/gvaluemainpage2011.asp
சற்றே சிந்தித்து உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்...

பலஸ்தீனத்திற்கும் ஆதரவு வாக்கெடுப்பு நடந்து கொன்டிருக்கிறது

யூத இஸ்ரேல் யஹுதிகளால் பலஸ்தீனம் தாக்கப்படுவதை நிறுத்த
இந்த இணைப்பில் உலகளவில் இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கும் ஆதரவு வாக்கெடுப்பு நடந்து கொன்டிருக்கிறது
கவலைக்குரிய விசயம் என்னவென்றால் பலஸ்தீனத்திற்கு இதுவரை 30.4% வாக்குகள் மட்டுமே கிடைக்க பெற்றுள்ளது
இன்ஷா அல்லாஹ் நீங்கலும் வாக்களியுங்கள் அனைவருக்கும் பகிருங்கள்
அல்லாஹ் போதுமானவன்
அநியாயக்கார இஸ்ரேலுக்கு அதிக வாக்கு சதவிகிதம் இருப்பதால் இதை அதிகளவு SAHRE செய்யுங்கள்..
நீங்கள் செய்ய வேண்டியது இது தான்
பலஸ்தீன லோகோ வை க்ளிக் செய்து
4 digit number இருக்கும் அதை கீழே இருக்கும் பெட்டியில் டைப் செய்து
submit பண்ணுங்கள்.. இன்ஷா அல்லாஹ் பலஸ்தீன் மக்களுக்கு வெற்றி கிடைக்கும். இது நீங்கள் பலஸ்தீன் உறவுகளுக்கு செய்யும் ஒரு உதவி
Received by .what's app

"பீகாரில் பா ஜ க தோற்றுப்போனால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவார்கள்"

அங்கு மட்டுமல்ல அமித் இங்கும் கொண்டாட்டமே
"பீகாரில் பா ஜ க தோற்றுப்போனால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்துக்
கொண்டாடுவார்கள்" என்று அமித் ஷா பேசியிருக்கிறார் .(டி ஒ ஐ ஏடு) அங்கு
மட்டுமா, இந்தியாவிலும் பட்டாசு வெடித்துக் கொண்ணடாடுவார்கள் -வீழ்ந்தான் 
எமது மெய்யான நரகாசுரன் என்று.நாடாளுமன்றத் தேர்தலில் இவர்களுக்கு ஓட்டுப்
போட்ட நாள்முதல் மக்கள் நொந்து கிடக்கிறார்கள். இவர்களது பாகிஸ்தான் எதிர்ப்பு
பேச்சு தேசபக்தியால் அல்ல ஓட்டு பக்தியால் எழுந்தது என்பதை அவர்கள் அறிவார்கள்.

thanks to 
Arunan Kathiresan

நான் மாட்டிறைச்சி சாப்பிடுவேன், என்னை யாரும் தடுக்க முடியாது: கர்நாடக முதல்வர்


பெங்களூர்: நான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிட்டது இல்லை. தற்போது சாப்பிடுவேன். என்னை யாரும் தடுக்க முடியாது என்று பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தாக்கி பேசியுள்ளார் கர்நாடக முதல்வர் சித்தராமையா.
மாட்டிறைச்சி தொடர்பான சர்ச்சைகளும், மாட்டிறைச்சிக்கான தடை குறித்தும் நாடெங்கும் விவாதம் நடந்து வருகிறது. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா மாட்டிறைச்சி பற்றி பேசியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிட்டது இல்லை. ஆனால் தற்போது சாப்பிடுவேன். அது என் உரிமை. என்னை யார் தடுக்க முடியும். நீங்கள் யார் என்னை கேள்வி கேட்க(பாஜக, ஆர்.எஸ்.எஸ்.)
அவர்கள் தனிமனித உரிமையை பறிக்க முடியாது. தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டது காட்டுமிராண்டித்தனமானது. நாட்டில் சகிப்புத்தன்மை இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. இது கண்டனத்திற்குரியது.
பஜ்ரங் தளம், ஸ்ரீராமசேனா, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்டவை பாஜக ஆட்சியில் தங்களின் சகிப்புத்தன்மையின்மையை காட்டுகின்றன என்றார்.

எச்சரிக்கை பாசிசம்


திருமலை நாயக்கர் மகாலை இடிக்க வேண்டும் எனச் சொல்வதற்கு தமிழ்ச் சிவசேனையினர் சொல்லும் காரணம் சோழ, பாண்டிய மன்னர்களின் அரண்மனைகள் எல்லாம் இன்று இல்லையாம். நாயக்கர் கால அரண்மனையாக இது உள்ளதாம்.எனவே இது அவமானச் சின்னமாம்.
பாசிசம் இப்படித்தான் வரலாற்றைக் கட்டமைக்கும் என்பதை அதன் வரலாற்றை அறிந்தவர்கள் அறிவர்.
சோழ, பாண்டியர்களின் அரண்மனைகளை இடித்தவர்கள் என்ன நாயக்க மன்னர்களா? சோழர்களின் அரண்மனைகளைச் சுந்தர பாண்டியன் அழித்தான். பாண்டியர்களின் சின்னங்களை மூன்றாம் குலோத்துங்கன் அழித்தான்.
இன்றுள்ளா முக்கியமான பாண்டியர் மற்றும் சோழர் கால ஆலயங்கள் பலவற்றிலும் திருப்பணிகள் செய்து இன்றுள்ள வடிவில் அமைத்துள்ளவர்கள் பிற்கால நாயக்க, மராட்டிய மன்னர்கள்தான். ஆனானப்பட்ட தஞ்சைப் பெரிய கோவிலையே எடுத்துக் கொள்ளுங்கள், அதன் மூல கோபுரமும் நந்தியும் மட்டுந்தான் ராஜராஜன் காலத்தியவை, மற்ற அனைத்தும் பிற்கால நாயக்க, மராட்டிய மன்னர்களின் இணைப்புகள்தான்.
அதையெல்லாம் கூட நாயக்கர் காலத்தவை எனச் சொல்வீர்களா?

குஜராத் போலிசின் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் #‎ஆண்ட்டிசிபேட்ரி_பெயில்‬..!


இஷ்ரத் ஜஹான் உட்பட ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ரானா, ஜீஷான் ஜோகர் என்கிற 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட குஜராத் போலிசின் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் CBI மூலமாக உண்மை வெளிப்பட்டவுடன், "Gujarat Additional Director General of Police" என்ற மிக உயர்ந்த பதவியில் இருந்த P.P. Pandey திடீரென தலைமறைவானார்.
பின்னர் அவரை "தேடப்படும் குற்றவாளி" என்று நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டார். இன்னும் இரண்டு நாளுக்குள் கோர்ட்டில் வந்து சரணடைய வேண்டும் என்று வெள்ளிக்கிழமை கெடு விதிக்கப்பட்டதை அடுத்து... இன்று அவர் கோர்ட்டில் சரண் அடைந்தார்..! எப்படி..?!?!?
டீக்காக பேன்ட் ஷர்ட் போட்டு நீட்டாக இன் பண்ணி பெல்ட் போட்டிருக்கும் அவர் நடந்து வந்திருந்தால்... அவரை புடிச்சி கைது பண்ணி சிறையில் தள்ளி விடுவார்கள் என்பதால்... ஆஸ்பத்திரியில் இருந்து... ஆம்புலன்ஸில் வந்து... இதோ... "இப்படி ஸ்ட்ரெச்சரில் படுத்த படுக்கையாக" வந்து சரணடைந்தார்..!
அடடே... இன்னிக்கி காலையில் அவருக்கு நெஞ்சுவலியாம்ங்க..! ஆளு... 'கிரிட்டிக்கல் கண்டிஷன்' என்று மெடிகல் ரிப்போர்ட்..! பரிதாபப்பட்ட நீதிபதி வேறு என்ன செய்வார்...? தந்தார்... ‪#‎ஆண்ட்டிசிபேட்ரி_பெயில்‬..!

இரு சக்கர வாகன சீட் கவர் தயாரிப்பு:


வாகனங்களின் எண் ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களின் சீட் கவர் தயாரித்து நேரடியாகவோ கடைகளுக்கோ விற்றால் லாபம் சம்பாதிக்கலாம் என்கிறார் கோவை டவுன்ஹாலை சேர்ந்த அப்துல் ரசாக். அவர் கூறியதாவது : வாகனங்களின் சீட் கவர் தயாரிக்கும் கடையில் 15 ஆண்டாக வேலை பார்த்தேன். சம்பளம் குடும்ப தேவைக்கு போதவில்லை. கடந்த 5 ஆண்டுக்கு முன்பு சொந்தமாக சீட் கவர் தயாரிக்கும் கடை துவங்கினேன். இத்தொழிலில் பலர் இருந்தாலும் இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பெருகி வருவதால், வாகனங்களில் சீட் கவர் மாற்றும் தேவை நிரந்தரமாக உள்ளது. இதனால் தொடங்கியது முதலே தொழில் சீராக நடந்து கொண்டிருக்கிறது. இருசக்கர வாகனங்கள் பிராண்ட்களுக்கேற்ப சீட்கள் ஒன்றுக்கொன்று சிறிய அளவில் மாற்றம் இருக்கும். பல்வேறு இரு சக்கர வாகன சீட்களின் மாதிரிகளை நாம் வைத்திருந்தால் உடனடியாக தயாரித்துவிடலாம்.
சீட் கவரில் வாடிக்கையாளர்கள் டிசைன்கள், எழுத்துகளை வடிவமைக்க விரும்புகின்றனர். டிசைன் வேலைப்பாட்டுக்கேற்ப கூலி கிடைக்கும். குறிப்பாக கல்லூரி மாணவர்கள் சீட் கவரில் டிசைன்களை விரும்புகிறார்கள். பெண்கள் டிசைன் இல்லாத சீட் கவர்களை விரும்புகின்றனர். சீட் கவர் தயாரிக்க பெரிய அளவில் பயிற்சிகள் தேவை இல்லை. ஓரளவு தையல் தெரிந்தவர்களாக இருந்தால் போதும். இருசக்கர வாகன சீட் கவர் தயாரிப்பில் போதிய அனுபவம் இருந்தால் 4 சக்கர வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களுக்கு சீட் கவர் செய்து கொடுக்கலாம். நல்ல வருவாய் கிடைக்கும்.
இத்தொழிலை பெண்கள் வீட்டிலேயே செய்ய முடியும். மொத்த சீட் விற்பனை கடைகளில் ஆர்டர் எடுத்து செய்யலாம் அல்லது வெட்டி கொடுக்கும் பாகங்களை கொண்டு தைத்து கொடுக்கலாம். மழை, வெயிலில் நிறுத்தப்படுவதால், சீட் கவர்கள் அடிக்கடி கிழிந்து விடுகிறது. ஒரு சீட் கவர் 9 மாதம் வரை உழைக்கும். இதனால் நிரந்தர வேலை வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அப்துல் ரசாக் கூறினார்.
தயாரிக்கும் முறை
இரு சக்கர வாகனத்துக்குரிய சீட்டின் மாதிரி வடிவத்தை வைத்து, சீட்டின் மேல், இடது மற்றும் வலது புற பாகங்களை ரோசிலின் சீட்டில் வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். அவற்றை பார்டர் டேப் அல்லது பீடிங் வயரால் இணைத்து தைக்க வேண் டும். அதை ஸ்பாஞ்ச் மீது வைத்து இடது, வலது புறங்கள் வழியாக கீழ் புறம் வரை கவரை இறுக்க மாக கொண்டு வர வேண் டும். இப்போது ரோசிலின் சீட்டை ஸ்பாஞ்ச் மீது கன் சூட்டரால் அமுக்கினால் சீட் கவர் தயார்.
டிசைன் சீட் கவர் தயாரிக்க, டிசைன் இடம்பெறும் பகுதிகளுக்கு புள்ளி ரெக்சின் சீட் அல்லது சிம்பொனி சீட்டை தேவையான வண்ணங்களில், டை மூலம் வெட்டி கொள்ள வேண்டும். அதற்கு வடிவமைப்பு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும். வெட்டிய டிசைன்களை ஏற்கனவே தயாரித்த சீட்டில் இணைத்து தைக்க வேண்டும். (சீட் கவர் பொருத்துவதற்கு முன்பு, இரு சக்கர வாகனத்தில் இருந்து பழைய சீட்டை டூல் கிட் மூலம் கழற்ற வேண்டும். அதில் ஸ்பாஞ்சின் மீதுள்ள கவரை அகற்ற வேண்டும்.)
முதலீடு: டிசைன் வடிவமைப்பு இயந்திரம் ரூ.1.25 லட்சம், மின் தையல் இயந்திரம் ரூ.13 ஆயிரம், கம்ப்ரசருடன் இணைந்த கன் சூட்டர் ரூ.16 ஆயிரம், டூல் கிட் ரூ.2 ஆயிரம், பல்வேறு டிசைன் டை ரூ.15 ஆயிரம், சீட் கவர் மாதிரிகள் ரூ.4 ஆயிரம், கத்திரி 2 ரூ.1000, 10க்கு 16 அடி அளவுள்ள அறை அட்வான்ஸ் ரூ.15 ஆயிரம், ஒரு டேபிள் ரூ.4 ஆயிரம், ரேக் ரூ.4 ஆயிரம் என ரூ.2 லட்சம் தேவை.
உற்பத்தி பொருட்கள்: ரோசிலின் சீட், புள்ளி ரெக்சின் சீட், சிம்பொனி சீட், ஸ்பாஞ்ச், பீடிங் வயர், கருப்பு நிற நூல், பின்.
கிடைக்கும் இடங்கள்: டிசைன் வடிவமைப்பு இயந்திரம், கன்சூட்டர் ஆகியவை சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் கிடைக்கிறது. மற்ற முதலீட்டு பொருள்கள் ஹார்டுவேர்ஸ் கடைகளில் கிடைக்கும். உற்பத்தி பொருட்கள் பிரத்யேக ரெக்சின் கடைகளில் கிடைக்கிறது.
உற்பத்தி செலவு (மாதத்துக்கு): ஒரு நாளில் 8 மணி நேரத்தில் 5 சீட் கவர்கள் வீதம் மாதம் 25 நாளில் 125 சீட் கவர் தயாரிக்கலாம். இதற்கு உற்பத்தி செலவு ரூ.14 ஆயிரம், கடை வாடகை ரூ.2 ஆயிரம், மின் கட்டணம் ரூ.400, உழைப்பு கூலி ரூ.6 ஆயிரம், இதர செலவுகள் ரூ.2 ஆயிரம் என ரூ.22,400 செலவாகும். ஒரு சீட் சராசரி உற்பத்தி செலவு ரூ.180 ஆகிறது.
லாபம் (மாதத்துக்கு): ஒரு சாதாரண சீட் கவர் ரூ.250, டிசைன் சீட் கவர் ரூ.350க்கு விற்கப்படுகிறது. 75 சாதாரண சீட் கவர் விற்பதன் மூலம் ரூ.18,750, 50 டிசைன் கவர் விற்பதன் மூலம் ரூ.17,500 என மொத்த வருவாய் ரூ.36,250. இதில் செலவு போக லாபம் ரூ.13,850.
சந்தை வாய்ப்பு
இரு சக்கர வாகன விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில வாகன விற்பனை நிலையங்களில் மட்டுமே சீட் தயாரித்து விற்கின்றனர். அதிலும் பிளெய்னாக உள்ள சீட்கள் மட்டும் கிடைக்கிறது. தாங்கள் விரும்பும் நிறம் மற்றும் டிசைன் உள்ள சீட் கவரை பெற வெளியில் உள்ள கடைகளையே நாடுவதால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்கிறார்கள். சீட் கவர்கள் சேதமடைந்தால் அவற்றை மாற்றவும் பழைய வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இரு சக்கர வாகன விற்பனை நிலையங்கள் மற்றும் சீட் கவர் மொத்த விற்பனை நிலையங்களுக்கும் ரெடிமேடு சீட் கவர்களை சப்ளை செய்யலாம். நல்ல கிராக்கி உள்ளது.

நொண்டிச்சாக்கு

சீனா பக்கம் நேபாளத்தை தள்ளிவிட்டுவிட்டார் மோடி
தமிழர்களுக்காக ஏன் குரல் கொடுப்பதில்லை என்று கேட்டால் இலங்கை
சீனா பக்கம் போய்விடும் அபாயம் உள்ளது என்பார்கள் பா ஜ கவினர். ஆனால்
இவர்களின் அரசு நேபாளத்தை சீனா பக்கம் தள்ளிவிட்டுள்ளது ! நேபாளத்தின்
மதச்சார்பற்ற- முற்போக்கு அரசியல் சாசனத்தை எதிர்த்து அதன் மீது
பொருளாதாரத் தடையை அமுல் படுத்தியுள்ளது மோடி அரசு . அந்த நாடு என்ன
செய்து விட்டது என்றால் தனக்கான கச்சா எண்ணெயை சர்வதேச விலைக்கு
சீனாவிடமிருந்து வாங்க ஒப்பந்தம் போட்டு விட்டது (டி ஒ ஐ ஏடு ) தமிழர்களுக்கு
துரோகம் செய்ய சீனா இவர்களுக்கு நொண்டிச்சாக்கு என்பது அம்பலமானது.

thanks to Arunan Kathiresan

Quran -உதவி

உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. "அல்லாஹ்வின் உதவி எப்போது?'' என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது.
திருக்குர்ஆன் 2:214

பத்ம பூஷண் வரை எட்டி விட்டது விருதுளைத் திருப்பித்தரும் போராட்டம்

பத்ம பூஷண் வரை எட்டி விட்டது
விருதுளைத் திருப்பித்தரும் போராட்டம் இப்போது பத்ம பூஷண் வரை எட்டி விட்டது.
அதைத் திருப்பித் தந்துள்ள பிரபல விஞ்ஞானி பி எம் பார்கவா கூறியிருக்கிறார் :
"அறிவியலுக்காக நான் பெற்ற நூற்றுக்கு மேற்பட்ட விருதுகளில் பத்ம பூஷண் 
ஒரு சிறப்பு இடத்தை வகித்தது . ஆனால் அரசு மதத்தை நிறுவனமயப்படுத்தவும் ,
சுதந்திரத்தை-அறிவியல் உணர்வைக் கட்டுப்படுத்தவும் முயலுவதைக் கண்ட
பிறகு அதன் மீதிருந்த உணர்வுபூர்வமான பிரியம் எனக்கு போய்விட்டது".(டி ஒ ஐ)
திரு அருணன் அவர்களிடமிருந்து.....!

வியாழன், 29 அக்டோபர், 2015

Hadis - (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை (சத்திய) சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), புகாரி 5645

சிறுபான்மையினருக்கு எதிரான தொடர் தாக்குதல்..!!

முகநூல் முஸ்லிம் மீடியா's photo.


மத்திய அரசின் உயரிய விருதான "பத்மஸ்ரீ" விருதை திருப்பி அளித்த பெண் எழுத்தாளர்...!!!
நாட்டில் நடக்கும் சகிப்புத்தன்மையினால் ஏற்படும் சம்பவத்தை தடுக்காமல் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டிக்கும் விதமாக பஞ்சாப் மாநில மூத்த பெண் எழுத்தாளர் தலீப் கவுர் தனக்கு வழங்கிய "பத்மஸ்ரீ" விருதை திருப்பி தந்துள்ளார்.
உத்திரபிரதேச மாநில தாத்ரியில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக வதந்தியை பரப்பி நூற்றுக்கணக்கான காவி பயங்கரவாதிகளால் முஹம்மமது இக்லாஸ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்,
காவி பயங்கரவாதிகளால் கல்பர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் போன்ற பகுத்தறிவு சிந்தனையாளர்கள் படுகொலை சம்பவங்கள்.
இது போன்ற கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தொடர் தாக்குதலை கண்டிக்கும் விதமாக தனங்கு வழங்கிய மத்திய அரசின் உயரிய தனது "பத்மஸ்ரீ" விருதை திருப்பி அளித்துள்ளார்.
மேலும் இவர் தனக்கு வழங்கிய சாகித்ய அகாடமி விருதையும் ஏற்கனவே திருப்பி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து சங்பரிவார பயங்கரவாதிகளால் நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இந்திய நாட்டின் மறக்க முடியாத சம்பவங்களான காந்தி படுகொலை,பாபர் மஸ்ஜித் இடிப்பு,குஜராத் இனப்படுகொலையை தொடர்ந்து தற்போது நடக்கும் சம்பவங்களால் உலக நாடுகள் இந்தியாவை காரி உமிழ வைத்துவிட்டது.

மக்கள் தொடர்பு முகம்


கலை 10 மணி முதல்  1 வரை - மக்கள்  தொடர்பு  முகம் நடைபெறும்  , இடம் பழைய ஹை ஸ்கூல்  -முபட்டி. மக்கள் கலந்து கொள்ளவும்.





Photo ---thanks to முக்கண்ணாமலைப்பட்டி பக்கம்

ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் ஆதிக்கம் நண்டுகள் மற்றும் மீன்களை அடியோடு அழித்துவிட்டது



இதெல்லாம் நம்ம ஊர்வயல்களில் சாதாரணமாக பார்த்தது. ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் ஆதிக்கம் நண்டுகள் மற்றும் மீன்களை அடியோடு அழித்துவிட்டது. இந்த புகைப்படத்தை இன்று முகநூலில் காண்கிறோம். சிலவருடங்களுக்கு பிறகு வரலாற்று பாடத்தில் படிக்கும் நிலை ஏற்படும்.இயற்கை வேளாண்மையை நேசிப்போம்.

என்ன கொடுமை


Kaalaimalar's photo.

அதிக இந்தியர்களுக்கு வேலை தரும் வெளிநாடு

தமிழ் இஸ்லாம்
அரபு நாட்டில் வாழும் மாற்றுமத சகோதரனின் அருமையான பதிவு!
உலகிலேயே அதிக இந்தியர்களுக்கு வேலை தரும் வெளிநாடு சவுதி அரேபியா. இந்தியாவுக்கு கிட்டும் அந்நிய செலவாணியில் அதிக சதவீதத்தை தருவதும் சவூதி தான். என் சிறு வயதில் அனுபவித்த வறுமையின் கொடூரத்தை நினைத்தால் இன்னும் அழுகை வருகிறது.
இக்கால இளைஞர்கள் அவற்றை அறிய வாய்ப்பு இல்லை. அணிய பின்புறத்தில் கிழிந்த ஓட்டையுடன் கூடிய ட்ரவுஸர், புதிய துணி இல்லாத தீபாவளிகள். சாப்பிட ஒரு வேளை மட்டும் கிட்டும் கேப்பை கூழ்.
நகர்ப்புறங்களில் வாழ்ந்தவர்களை விட கிராமங்களில் நிலவிய பஞ்சம் பசி இன்றைய இளைஞர்களுக்கு தெரியாது. இதனை மாற்றி இப்போது நாம் அனுபவிக்கிற ஒரளவு வறுமை இல்லாத நிலை உண்டாக அரபு நாடுகள் தந்த வேலை வாய்ப்புகள் தானே பிரதான காரணம்.
மெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் போன்றவை டாக்டர், இன்ஜினியர், mca, mba களுக்கு மட்டுமே கைகொடுத்தன. ஆனால் இரண்டாம் கிளாஸ் படித்த என் அப்பா போன்றவர்களுக்கு கை கொடுத்தது அரபு நாடுகளே.
என் அப்பா போன்ற படிக்காத ஏழைகள் பல லட்சம் பேரின் வாழ்க்கையின் வெற்றியின் திருப்பு முனைக்கும் அரபு நாடுகள் தான் காரணம். நானும் லட்சக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் படிப்பு படித்ததும் அரபு நாட்டு பணத்தில்தான்.
இன்று கிராமங்களில் கூட பல லட்சம் கொடுத்து மனைகள் வாங்கும் அளவுக்கு மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்க அரபு நாட்டு காசும் ஒரு முக்கிய காரணம் அல்லவா.. நம் பொருளாதாரத்தின் ஆணிவேராகிய அந்நிய செலவாணி கையிருப்பு பெரும்பாலும் நமக்கு கிட்டியதும் கிட்டுவதும் இந்தியர்கள் அரபுநாட்டிலிருந்து அனுப்பும் பணம் மூலமாகவே.
துலுக்கன் கடையில் சாமான் வாங்காதே என பிரச்சாரம் செய்யும் இயக்கங்களுக்கு அதிக நன்கொடை அனுப்புவது அரபு நாட்டில் வேலை செய்யும் NRE களே.
அரபு நாடுகளை, இஸ்ரேல் பூண்டோடு அழிக்க வேண்டும் என ஸ்டேட்ஸ் போடுவோர் பெரும்பாலோர் அந்த ஸ்டேடஸ் போட உபயோகித்து வரும் கம்ப்யூட்டர் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் துலுக்கன் துட்டில் வாங்கப் பட்டவைகளே.
உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கத் தூண்டிய என் தமிழ் பண்பாட்டை கொலை செய்து எம் இந்துக்களை செய் நன்றி கொன்ற மக்களாக மாற்றப் பாடுபடும் மதவெறியர்கள் புண்ணியத்தில் பழய பஞ்சம் பசி மீண்டும் வந்து விடுமோ என பயப்படுகிறார்கள் பச்சை ஹிந்துக்கள்.
பரமேஷ்வரா!, உன் பாரதத்தை இந்த பாதகர்களிடமிருந்து பாதுகாத்திடு பரம்பொருளே!.
நன்றி. ரவி சங்கர் இந்து தமிழன்…

முறையான வடிகால் வசதி இல்லாமல், தெருவுகுல் பாயும் சகடை நீர்.

பல வருடங்களாக .....முறையான வடிகால் வசதி இல்லாமல், தெருவுகுல் பாயும் சகடை நீர். பஞ்சயத் பணிகளை செயல் படவிடாமல் முட்டுகடயாக உள்ள - தனிமனிதன்... .

இடு குறித்து பொதுமகள் மற்றும் சமுக ஆர்வளர்க  கோரிக்கை விடுத்துள்ளனர் .


இந்த பகுதியை பற்றி சிறிய விபரங்கள்

1) சுமார் 14அடி அகலம் - 525அடி நீளம் ( 1948 ) ஆண்டு எப் எம் படி (பச்சை கொடு மற்றும் கரும் சிவப்பு கொடு)


2) சிவப்பு கொடு - குறுக்கே இரண்டு வீடுகள், பாதவிடாமல்   கட்டப்பட்டுள்ளது ஊதா வட்டம்.
3) சகடை கால்வை கட்ட பஞ்சயத் பலமுறை முரட்சி செய்தும் - தடுத்து - பணம்  பார்க்கும் எண்ணத்தில் பல முட்டு கட்டை. . (அவர் பங்காளி   எங்களுக்கு எங்கள் சுவற்றோடு எங்கள் அத்து முடிந்ததாகவும் ....மற்ற இடம் இல்லை என்று திட்டவட்டமாக கூறுகிறார் ....)

இந்த பகுதி சாக்கடை கள்வா அமைதல் சுமார் 20 வீடுகள் , மற்றும் அந்த பகுதி சுத்தமாகும். ( சிவப்பு அடையாளம் )




மேலும் இந்த வழி பயன் படுத்தி பள்ளிவாசலுக்கு செல்வது தடை பட்டுள்ளது .....

இன்று நேரில் ஆய்வை மேற்கொண்ட கோட்டாட்சியர்,  ஊரக வளர்ச்சி பனி  அதிகாரி பார்வை இட்டு .....உடனடி பணியை துவங்க ஆணை இட்டார்.....

 எதிர் நோகும் சமுக ஆர்வளர்க மற்றும் ஊர் பொதுமக்கள் 

காந்தியை கொன்ற கூட்டத்தின் மாட்டு




காந்தியை கொன்ற கூட்டத்தின் மாட்டு அரசியலை தோலுறிக்கும் நா.ம.கட்சி தலைவர் நடிகர் கார்த்திக்.


காந்தியை கொன்ற கூட்டத்தின் மாட்டு அரசியலை தோலுறிக்கும் நா.ம.கட்சி தலைவர் நடிகர் கார்த்திக்.அரசியல் கோமாளிகளாக நாம் கருதுபவர்களுக்கு இருக்கும் தைரியம் நம் ஓட்டுக்களால் தங்கள் குடும்பத்தை வளர்த்துக்கொண்ட சிறுபான்மை மக்களின் காவலர்கள் என்றவர்களிடமிருந்து வரவில்லையே!
Posted by Kumbakonam Mohamed Sultan on Wednesday, October 28, 2015
அரசியல் கோமாளிகளாக நாம் கருதுபவர்களுக்கு இருக்கும் தைரியம் நம் ஓட்டுக்களால் தங்கள் குடும்பத்தை வளர்த்துக்கொண்ட சிறுபான்மை மக்களின் காவலர்கள் என்றவர்களிடமிருந்து வரவில்லையே!

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 27/10/2015
PuthiyaThalaimurai TV's photo.

புதன், 28 அக்டோபர், 2015

படர்தாமரைக்கு சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்..!

12106712_712441185523942_3759361543775464000_n


டீனியா (Tinea) என்ற பூஞ்சையினால் ஏற்படும் தோல் நோய்தான் படர்தாமரை. சிவந்த படைகள் உடலில் ஏற்படுவதுதான் இதன் அறிகுறி. படர்தாமரை உடலின் கதகதப்பான மற்றும் ஈரப்பதம் நிறைந்த இடங்களில் விரைவாகத் தாக்கும். தலை, அக்குள், தொடை இடுக்குகள் மற்றும் பாதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். தலையில் படர்தாமரை தாக்கும்போது ஆங்காங்கே வழுக்கையான திட்டுகள் காணப்படும். படர்தாமரை நகங்களைப் பாதிக்கும்போது நகங்கள் நிறம் மாறி எளிதில் உடையும். அக்குள் மற்றும் தொடைப் பகுதிகளில் அரிப்பை ஏற்படுத்தும். இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு எளிதில் பரவும் தொற்று நோய். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் சீப்பு, முகச்சவர உபகரணங்கள், ஆடைகள் மூலமாகவும், கழிவறைகள், குளியலறைகள், நீச்சல்குளம் மூலமாகவும் பரவும். செல்லப் பிராணிகள் மூலமாகவும் பரவும்.
சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:
சீமை அகத்தி இலையை அரைத்துத் தேங்காய் எண்ணெயில் கலந்து பூசலாம்.
கடுக்காய்த் தோல், இந்துப்பு, கிரந்திதகரம், அறுகம்புல், கஞ்சாங்கோரை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து, மோர்விட்டு அரைத்துப் பூசலாம்.
புங்கம் விதையை அரைத்துப் பூசலாம்.
பூண்டை அரைத்து தேன் சேர்த்துப் பூசலாம்.
அருகம்புல்லுடன் மஞ்சளை அரைத்துப் பூசலாம்.
நிலாவாரை இலையைக் காடி விட்டு அரைத்துப் பூசலாம்.
ஜாதிக்காயைத் தேன் விட்டு அரைத்துப் பூச, படர்தாமரை குணமாகும்.
சரக்கொன்றைத் துளிர், புளியந்துளிர், மிளகு சம அளவு எடுத்து, அரைத்துப் பூசலாம்.
பப்பாளி விதையைக் காடிநீர் விட்டு அரைத்துப் பூசலாம்.
சந்தனக்கட்டையை எலுமிச்சம் பழச் சாறுவிட்டு அரைத்துப் பூசலாம்.
ஆகாயத் தாமரை இலையைக் காடி விட்டு அரைத்துப் பூசலாம்.
குந்திரிக்கம் நல்லெண்ணெய் வெள்ளை மெழுகு வகைக்கு 32 கி எடுத்து சிறு தீயில் இட்டு, உருக்கி, வடிகட்டி, ஆறிய பின் படர்தாமரை மீது பூசக் குணமாகும்.
யூகலிப்டஸ் இலையில் உள்ள சினியோல், பிசைமின் ஆகிய வேதிப்பொருட்கள் படர்தாமரையை உருவாக்கும் பூஞ்சையை அழிக்கின்றன. யூகலிப்டஸ் தைலத்தைப் படர்தாமரை மீது பூசக் குணமாகும்.
துளசி இலையை உப்புடன் சேர்த்துப் பூசலாம்.
சிவனார் வேம்பு இலையையும் பூவையும் அரைக் கைப்பிடி அளவு எடுத்து, சிதைத்து, நான்கு பங்கு நீர் சேர்த்து ஒரு பங்காக வற்றவைத்து அருந்த, படர்தாமரை குணமாகும்.
மாதுளம் பழத்தோல், வல்லாரை இலை சம அளவு எடுத்து காடிவிட்டு அரைத்துப் பூசலாம்.
கிராம்பை நீர்விட்டு அரைத்துப் பூச, படர் தாமரை குணமாகும்.
லவங்கப் பட்டையை நீர் விட்டு மையாக அரைத்துப் பூசலாம். பட்டையில் உள்ள சின்னமால்டிஹைடு, படர்தாமரையை அழிக்கும்.
கடைப்பிடிக்க வேண்டியவை:
படர்தாமரை வராமல் தடுக்க தோல், நகங்கள், தலைமுடி ஆகியனவற்றைச் சுத்தமாகவும் உலர்வாகவும் பராமரிக்க வேண்டும்.
உலர்வான, தளர்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும்.
பிறர் பயன்படுத்திய ஆடைகள், உபகரணங்கள் போன்றவற்றை உபயோகிக்க வேண்டாம்.

வீட்டுக்கு ஒரு பப்பாளி… இனி யாரும் இல்லை சீக்காளி!

ld164


‘யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே…’ என்கிற பழமொழியை மாற்றி நண்பர்கள் என்னைப்பார்த்து ”நான் வரும் பின்னே.. என் தொப்பை வரும் முன்னே’’ என்று சொல்லி கிண்டல் பண்றாங்க.. தொந்தியை குறைக்க தந்தி வேகத்தில் ஒருவழி சொல்லுங்க.” நாட்டில் உள்ள அனேகம் குண்டர்களின் ஒட்டுமொத்த வேண்டுக்கோள் இதுவாகத்தான் இருக்கும். அதற்கு மருத்துவர் சொல்லும் ஒரே தீர்வு ‘பப்பாளி சாப்பிடுங்க.’
‘அய்யா! எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சு 7 வருஷமாச்சு. இன்னும் வயித்தில ஒரு புழு பூச்சியும் தங்கல. குழந்தைப்பேறு கிடைக்க ஒரு வழி சொல்லுங்க’ என்று சித்த மருத்துவரிடம் உருகும் தம்பதியருக்கு அந்த மருத்துவர் சொல்லும் ஒரே பதில், ‘பப்பாளி சாப்பிடுங்க.’
‘சிறுநீரகத்தில் கல் உண்டாயிருக்கு வலி தாங்க முடியல, அறுவை சிகிச்சை செய்யவும் பயமா இருக்கு. அந்தக் கல்லைக் கரைக்க ஒருவழி சொல்லுங்க’ன்னு கேளுங்க. அதுக்கும் ‘பப்பாளி சாப்பிடுங்க’னு பதில் வரும்.
ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணிகள் தொடங்கி… அப்பல்லோ டாக்டர்கள் வரை தங்களைத் தேடிவரும் நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் பழங்களில் அதி முக்கியமானது பப்பாளி என்றால் அது மிகையில்லை.
வீட்டுப் புறக்கடையில் மட்டுமே ‘பவ்சு’ காட்டிய பப்பாளி மரங்கள் இன்று பல ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டும் வருகிறது. இன்றுகூட கிராமப்புறங்களில் வீட்டு பக்கத்தில் ஒன்றிரண்டு மரங்கள் இருப்பதை பார்க்க முடியும். நகர்ப்புற மக்களும் வீட்டில் பப்பாளி மரங்களை வளர்த்து சாப்பிட முடியும். அது எப்படி என்பதை அழகாய் சொல்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த சிவக்குமார். அவரது வீட்டுத்தோட்டத்தில் காய்கறி செடிகள் காய்த்துக் குலுங்குகின்றன. பப்பாளி மரத்தில் உள்ள பழங்களை பறவைகள் கொத்தி தின்று கொண்டுயிருந்தன. பப்பாளி மரத்தை சுட்டிக்காட்டி பேசத்தொடங்கினார் சிவக்குமார்.
“மாடி வீடு உள்ளவர்கள் மொட்டை மாடியிலும், அந்த வசதி இல்லாதர்கள் வீட்டு படிக்கட்டு மூலைகளிலும், பால்கனியிலும், சமையல் அறையிலும், திறந்தவெளி ஜன்னல் ஓரத்திலும் பப்பாளி மரங்களை வளர்க்கலாம். அதற்கு தேவையான பொருட்கள் இரண்டுதான். ஒன்று வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் பிடித்து நிரப்ப பயன்படும் ஒரு பழைய பீப்பாய். இன்னொன்று நிலத்து மண். பழைய பீப்பாயின் மையப்பகுதியை வட்டமாக வெட்டினால் கிடைக்கும், அடிப்பகுதியை பப்பாளி மரம் வளர்க்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதோடு 25 கிலோ மணலை வாங்கிக் கொள்ளவேண்டும். அதில் உள்ள கற்களை பொருக்கி எடுத்துவிட்டு நிலத்து மண், மணல் இரண்டையும் கலந்து தண்ணீர் விட்டு நன்றாக பிசைய வேண்டும். மண்ணில் உள்ள கட்டிகள் உடைந்து சந்தனம் போல் மாறும். பிறகு ஈரமண்ணை பரப்பி காய வைக்கவேண்டும். இரண்டு நாளில் மண் ஈரம் காய்ந்து பொலபொல என்று மாறிவிடும். அதோடு உயிர் உரங்களை கலக்க வேண்டும். அருகில் உள்ள வேளாண் அலுவலகம் அல்லது வீட்டுத்தோட்ட அங்காடிகளில் இந்த உரங்கள் கிடைக்கும். இதில் அசோஸ்-பைரில்லம் முக்கியமானது. அதை ஒரு கிலோ அளவில் வாங்கிவந்து, அந்த பொலபொல மண்ணில் கலந்து பீப்பாயினுள் நிரப்பவேண்டும். நிரப்பும் முன்பு மாட்டு சாணம் கிடைத்தால் அதையும் சேர்த்துகொள்ளலாம். தொடர்ந்து பூவாளி கொண்டு பீப்பாய்க்குள் உள்ள மண் நனையும்படி தண்ணீர்விட்டு அது சுண்டியபின், பப்பாளி விதைகளை ஊன்றலாம்.
விதைகளுக்குத் தேவையான பப்பாளிப் பழத்தை கடைகளில் வாங்கிகொள்ளலாம். நன்றாக கனிந்த சிவந்த நீளமான பழங்களில் தான் முளைப்புத்திறன் கொண்ட விதைகள் கிடைக்கும். அந்த பழங்களில் உள்ள விதைகளை எடுத்து அதன் ஈரப்பதம் குறையும்படி காயவைத்து, அந்த விதைகளில் ஒன்றுக்கும் மேற்பட்டதை பீப்பாயில் உள்ள மண்ணில் ஈர விதைப்பு செய்யவேண்டும். ஊன்றும் விதைகளை தகுந்த இடைவெளி விட்டு பரவலாக ஊன்றவேண்டும்.
தொடர்ந்து 35 நாட்கள்வரை பீப்பாய் நிழலில் இருக்க வேண்டும். 35வது நாளில் நாற்றுக்கள் முளைத்து நிற்கும். தொடர்ந்து ஈரம் ததும்ப தண்ணீர் விட்டு பீப்பாயினுள் உள்ள அனைத்து நாற்றுக்கலையும் பிடுங்கிவிட்டு, அதில் ஊக்கமுள்ள நாற்றை மட்டும் எடுத்து பீப்பாய் மன்ணின் மையப்பகுதியில் நடவு செய்து தண்ணீர் ஊற்றி வரவேண்டும். வெளிச்சம் படும்படியான இடத்தில் பீப்பாயை மாற்றி வைக்க வேண்டும். 120 நாள் தொடங்கி மரம் காய், கனிகளை கொடுக்கத் தொடங்கிவிடும். இரண்டு வருடங்களில் உங்கள் குடும்பத்திற்கு தேவையான காய், கனிகளை கொடுக்கும். உங்கள் வீட்டு மருத்துவ செலவும் குறையும்” என்று பயனுள்ள ஆலோசனையை வழங்கினார் சிவக்குமார்.

கட்டாயமாக ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை : சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை


highcourt_2597637f


குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பலாத்காரர்களுக்கு கட்டாயமாக ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யும் சட்டத்தை அமல்படுத்துவதை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் பரிந்துரைத்துள்ளார்.
மேலும், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாலியல் கல்வியை பாடத்திட்டத்தில் கட்டாயமாக்குவது குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 2011–ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் காப்பகத்துக்கு வந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவர், அந்த காப்பகத்தில் தங்கியிருந்து 9–ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன் ஒருவருக்கு கல்வி வாய்ப்பு வழங்குவதாக கூறியுள்ளார்.
அந்த மாணவனின் தாயாரிடம் பேசி சம்மதிக்க வைத்துள்ளார். பின்னர், அந்த மாணவனை தன்னுடன் டெல்லிக்கு கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் 15–ந் தேதி அழைத்துச் சென்றுள்ளார்.
டெல்லியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. சுற்றுலா விடுதியில், ஒரு அறையில் அந்த மாணவனுடன் அந்த நபர் தங்கியுள்ளார். அப்போது, அந்த மாணவனுக்கு பாலியல் தொந்தரவு செய்து, வலுகட்டாயமாக இயற்கைக்கு மாறாக உறவு கொள்ள முயன்றுள்ளார். பின்னர் அவர் பிரிட்டன் சென்றுவிட்டார்.
அதன் பின்னர் ஜஸ்டிஸ் அண்ட் கேர் என்ற நிறுவனத்தின் மூலம் (Justice and Care Organisation) அச்சிறுவன் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த அந்த நபரை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார். இந்திய தண்டனைச் சட்டம், சிறார் நீதி பாதுகாப்புச் சட்டம் கீழ் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் தனக்கு எதிராக கீழ் கோர்ட் வழங்கிய தண்டனையை ரத்து செய்யக் கோரி பிரிட்டனைச் சேர்ந்த அந்த நபர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், “பாலியல் அச்சுறுத்தல்களை கையாள்வதில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் பயனற்றதாக, திறனற்றதாக இருக்கும்போது, இந்த நீதிமன்றம், நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் மிகக் கொடூரமான குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை, கூட்டு பலாத்காரங்களை கண்டும் காணாமல் கைகட்டி மவுனியாக, எவ்வித சலனமும் இல்லாமல் இருக்க முடியாது.
குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பலாத்காரர்களுக்கு கட்டாயமாக ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை செய்யும் சட்டத்தை அமல்படுத்தினால், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை வெகுவாக குறையும்” எனக் கூறினார்.
இந்த வழக்கில் சம்பந்தபட்ட பிரிட்டன் நாட்டைச் சேர்ந்தவரின் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.
நீதிபதி மேலும் கூறும்போது, “கட்டாய ஆண்மை அகற்றும் அறுவை சிகிச்சை முறை என்பது காட்டுமிராண்டித்தனமாகத் தெரியலாம். ஆனால், காட்டுமிராண்டித்தனமான குற்றங்களுக்கு அதே பாணியில்தான் தண்டனைகளும் வழங்கப்பட வேண்டும். தண்டனையை நினைத்துப் பார்க்கும்போதே ஒருவர் அந்த குற்றத்தைச் செய்வதை தவிர்க்க வேண்டும்.
‘மனித உரிமை மீறல்’ என்ற பெயரில் இந்த பரிந்துரையை எதிர்க்கப்போகும் சமூக ஆர்வலர்களே, நீங்கள் அனைவரும் முதலில் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி தயவு காட்டுங்கள். அதைவிடுத்து உங்கள் கருணையை குற்றவாளியிடம் காட்டாதீர்கள்.
‘மனித உரிமைகள்’ என்பது குற்றம் செய்பவர்களை பாதுகாப்பதற்காக உள்ள கேடயம் அல்ல என்பதை நீங்கள் உணர வேண்டும். அதேபோல், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாலியல் கல்வியை பாடத்திட்டத்தில் கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும்.
ஏனெனில், பதின்ம பருவக் குழந்தைகள், பாலியல் சார்ந்த விவரங்களை தங்களது நண்பர்கள், இணையம், சினிமா ஆகியனவற்றின் மூலம் அரைகுறையாக தெரிந்துகொள்கின்றனர். தவறான புரிதல் ஆபத்தானது. எனவே அவர்களுக்கு பாலியல் தொடர்பாக அறிவியல்பூர்வமான தகவல்களை வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.