1999 - ல் சென்னை மத்திய சிறை உட்பட கோவை , வேலூர் , திருச்சி சிறையில் இருந்த முஸ்லீம் சிறைவாசிகளை தாக்குதல் நடத்தியதிற்க்கு ஒரு லாஃபியை (காரணம்) சொன்னார்கள்
2015-09-25 ந் தேதி சென்னை புழல் சிறையில்
நடத்திய தாக்குதலுக்கு என்ன லாஃபியை
(காரணம்) சொல்வார்கள் ?
நடத்திய தாக்குதலுக்கு என்ன லாஃபியை
(காரணம்) சொல்வார்கள் ?
1999 ல் சென்னை மத்திய சிறையில் முஸ்லீம் சிறைவாசிகளுக்கு எதிராக 100 நாட்கள் நிர்வாணப்படுத்தி தனிமை சிறையில் அடைத்து படுபயங்கரமான தாக்குதல் நடந்தேரியது அப்போது மாநிலத்தில் தி.மு.க. அரசும் , மத்தியில் பி.ஜே.பி. அரசும் ஆட்சியில் இருந்தது சிறைதுறையும் , உளவுதுறையும் , இணைந்து மத்திய பி.ஜே.பி அரசின் ஆசியோடு மாநில தி.மு.க. அரசு அந்த கொடூர தாக்குதல் நடத்தியது .
தாக்குதல் நடத்த ஒரு காரணம் சொன்னார்கள் அதாவது கோவை குண்டு வெடிப்புக்கு பின் சுமார் 160 முஸ்லீம்களை கைது செய்து சிறையில் அடைத்த பின் இன்னும் சில போராளிகள் தலைமறைவாக உள்ளனர் அவர்களை சிறையில் இருக்கும் போராளிகள் இயக்கிவருகின்றனர் அதன் எதிரொளியாக தான் திருச்சி மாவட்ட பி.ஜே.பி தலைவர் ஸ்ரீதர் படுகொலை செய்யப்பட்டார் என்றும்
அப்போது மத்திய அரசில் அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் அவர்கள் அத்வாணியிடம் புகார் கூறி அத்வாணி அவர்கள் முரசொலி மாறனிடம் சொல்லி முரொசலி மாறன் மாநில சட்ட அமைச்சர் ஆலடி அருணாவிடம் சொல்லி ஆலடி அருணா தன்னுடைய நேரடி பார்வையில் சிறைஅதிகாரிகளுக்கு உத்திரவு போட்டு முஸ்லீம் சிறைவாசிகளை அடிப்பதற்க்காக புதிதாக நியமிக்கப்பட்ட 1998 பேட்ஜ் சிறைகாவலர்களை கொண்டு சென்னை , வேலூர் , திருச்சி , கோவை ஆகிய சிறைகளில் உள்ள அணைவரையும் கடுமையான தாக்குதல் நடத்தினார்கள்..
குறிப்பாக சென்னை சென்ரல் சிறையில் இருந்த சுமார் 26 பேர் மீது மட்டும் 100 நாட்கள் தாக்குதல் நடந்தி , நிர்வாணப்படுத்தி , பல கொடுமைகளை நடத்திகாட்டினார்கள் அன்றைய சிறைதுறையும் , உளவுதுறையும் , தி.மு.க.அரசும் என்பது குறிப்பிடதக்கது ..
சிறையில் எங்களுக்கு நடந்த கொடுமைகளை கேட்க ஆளும் இல்லை போராட அமைப்புகளும் இல்லை ..
( மூன்று மாத எங்கள் மீது தாக்குதலுக்கு பின் சிறையில் எங்களுக்கு நடந்த கொடுமைகளை நிறுத்த வேண்டும் என சில சகோதரர்கள் சிறை வளாகத்திற்க்கு வெடிக்காத குண்டுகள் வைத்தாக கூறி சுமார் 18 பேர் கைது செய்யப்பட்டனர் )
அந்த நேரத்தில் எங்களுக்கு ஒரே ஆறுதல் அல்லாஹ் மட்டுமே பல கொடுமைகளை தாங்கிய நாங்கள் நிர்வாணமாகவும் , அழுதுகொண்டும் , எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவா செய்தோம் ..
எங்கள் மீது அநியாமான முறையில் தாக்குதல் நடத்த
1) முதல் காரணமான பி.ஜே.பி. மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்களம் தனக்கு என்ன வியாதி என அறிந்து கொள்ளாமலே பலமாதங்கள் மருத்துவமனையில் இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்
1) முதல் காரணமான பி.ஜே.பி. மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்களம் தனக்கு என்ன வியாதி என அறிந்து கொள்ளாமலே பலமாதங்கள் மருத்துவமனையில் இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்து போனார்
2) அடுத்து காரணமான முரொசலி மாறன் யாரும் இறந்துவிடுவார் என எதிர்பார்காமலேயே இறந்து போனார் ,
3) உடல்நலத்தோடு இருந்த ஆலடி அருணாவை கல்வியாளர் ஏ.ராஜா கூலி படையை வைத்து கொலை செய்துவிட்டார் ,
4) கைதிகளிடம் பணம் பறிப்பதோ அல்லது கைதிகளின் உணவு பொருட்களை திருடியோ தன் வாழ்க்கையை நடத்தாமல் குடிக்கும் தண்ணீர் கூட வீட்டில் இருந்து கொண்டு வந்து குடிக்கும் தன்மை கொண்ட டெப்புடீ ஜெயிலர் திரு.ஜெயகுமார் அவர்கள் நேர்மையின் சிகரமாய் சிறை அதிகாரியாக பணியாற்றியவர் என்றால் அது மிகையல்ல
ஆனால் 1999 முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு தலைமை தாங்கி பாசிச என்னத்தோடும் , நானும் முஸ்லீம்களுக்கு எதிராவன் என்றும் திரு.ஜெயகுமார் அவர்கள் கொடூரமாக முஸ்லீம் சிறைவாசிகளிடம் நடந்துக்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது
ஆனால் சுமார் 100 நாட்கள் அதாவது மூன்று மாதம் முஸ்லீம் சிறைவாசிகளை கொடூரமாக தாக்கிவிட்டோம் மற்ற கைதிகளுக்கு முன் முஸ்லீம் சிறைவாசிகளை கேவலப்படுத்தி விட்டோம் என்ற இறுமாப்போடு மீசையை முறுக்கி சிறை நாயகனாக வலம் வந்த திரு.ஜெயக்குமார் அவர்கள் சிறையில் போதைபவுடர் வியாபாரம் செய்ததாக கூறி பாக்சர் வடிவேலை ஒரு அறையில் அடைத்து 1 கிலோ போதை பவுடரை தண்ணீரில் கரைத்து பாக்சர் வடிவேலை குடிக்க செய்ததினால் பாக்சர் வடிவேல் சிறை சாலையிலேயே இறந்துவிட்டார் அதன் பிறகு சிறையில் ஒட்டு மொத்த சிறைவாசிகளும் கலவரத்தில் ஈடுபட்டனர் அப்போது திரு.ஜெயக்குமார் மட்டும் சிறையிலே விட்டுவிட்டு நீ போய் அந்த கலவரத்தை அடக்கு என கூறி அனைத்து அதிகாரிகளும் ஓடிவிட்டனர் இரண்டு வயதான வார்டர்களும் ஜெயக்குமாரும் சிறைவாசிகளின் ஆத்திரத்துக்கு ஆளாக்கப்பட்டு அதிலும் முஸ்லீம் சிறைவாசிகளை கொடூர தாக்குதல் நடத்தி மூன்று மாதம் முடிந்தவுடன் எங்கள் மீது நடத்திய கொடூர தாக்குதலுக்கு பின் சாதாரன கைதிகள் மூலம் திரு.ஜெயக்குமாரை அடித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டார் சிறைச்சலையில் நாயகனாக வலம் வந்து சிறைவாசிகள் எல்லாம் பார்த்து நடுங்கும் நேர்மையான அதிகாரி சிறைவாசிகளால் கொடூரமாக தாக்கப்பட்ட போது இனி உங்க பேச்சுக்கே வர மாட்டேன் என இரு கை எடுத்து கும்பிட்டு கெஞ்சி கேட்டும் கூட சிறைவாசிகள் திரு.ஜெயக்குமாரை கொடூரமாக கொன்றனர் என்பது குறிப்பிடதக்கது .
இந்த சிறைகலவரத்தில் திரு.ஜெயக்குமாரை கொடூரமாக கொல்லப்பட்டார் என காரணம் காட்டி சுமார் 40, 50 கைதிகள் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர் . அன்று இரவு சுமார் 2-00 மணிக்கு சிறைகண்காணிப்பாளர் திரு.ராமசந்திரன் அவர்கள் என்னிடம் சொன்னது இப்போது நினைத்தாலும் என் உடம்பு புல்லரிக்கும் (எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே) முஸ்லீம் சிறைவாசிகளை தலைமை ஏற்று கொடூரமாக நிர்வாணப்படுத்தி அடித்து கொடுமைப்படுத்தினார் அதனால் தான் உங்களுடைய பிரார்தனை (துவா) அல்லாஹ் ஏற்றுக்கொண்டான் அதனால் தான் இது போன்ற கொடூர தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் ஜெயக்குமார் என்ற கண்காணிப்பாளர் என்னை மன்னித்து விடுங்கள் என என் கைகள் பிடித்து கேட்டுக்கொண்டார் அந்த நேரத்தில் இமாம் அலி உட்பட அணைவரும் ஸஸ்தாவில் விழுந்து அல்லாஹ்வுக்கு நன்றி கூறினோம் .
1999 முஸ்லீம் சிறைவாசிகள் மீதான தாக்குதலுக்கு மாநில உளவுதுறை ஒரு லாஃபியை சொன்னது (காரணம்) அதாவது தமிழ்நாடு முழுவதும் சுமார் 160 பேர் கைது செய்துவிட்டோம் இன்னும் எத்தனை பேர் உங்களுக்கு ஆதரவாக உள்ளனர் என தெரிந்துக்கொள்ள தான் முஸ்லீம் சிறைவாசிகள் மீது தாக்குதல் நடத்தினோம் உங்களை சிறையில் தாக்கினால் உங்கள் ஆதரவாளர்களை அடையாளம் தெரிந்துக்கொள்ளலாம் என்று .
அந்த லாஃபியை ஏற்றுக்கொண்டாலும் இப்போது 25-09-2015 சென்னை புழல் விசாரனை சிறையில் எதற்க்காக போலீஸ் பக்ரூதின் , மண்ணடி அப்துல்லாஹ் , ஹாஜா பாய் , அபூதாஹீர் , நவாஸ் , ஹக்கீம் , முன்னா ஆகியோரை கடுமையான தாக்குதல் நடத்தினீர்கள் என சிறைதுறையும் , உளவுதுறையும் பதில் சொல்ல முடியுமா ?
இப்போது தமிழ்நாட்டில் முஸ்லீம் இளைஞர்கள் வன்முறையையோ அல்லது தீவிரவாதத்தையையோ விரும்பாமல் ஜனநாய வழியில் பயணிப்பது சிறைதுறைக்கும் , காவல் உளவுதுறைக்கும் பிடிக்கவில்லையோ ?
25-09-2015 அன்று பாதுகாப்பு தொகுதி 2 ல் உள்ள வெவ்வேறு தொகுதில் அடைக்கப்பட்டு இருந்த போலீஸ் பக்ரூதின், பண்ணா இஸ்மாயில், பிலால் மாலீக் ஆகியோரை கண்காணிப்பாளர் அழைப்பதாக கூறி அழைத்து வந்த ஜெயிலர் இளவரசன் அதேபோன்று பாதுகாப்பு தொகுதி 1 ல் இருந்து காஜா பாய் உட்பட இரண்டு பேரையும் 1 ம் பிளாக்கில் இருந்து மண்ணடி அப்துல்லாஹ்வையும் மாலை 5-30 மணிக்கு அழைத்து வந்து பிரச்சினை ஆரம்பித்துள்ளார் .
மொத்தம் 7 பேரை அழைத்து வந்து என்ன கண்காணிப்பாளரையா பார்கனும் என அசிங்கமாக பேசிய ஜெயிலர் இளவரசன் உட்பட சுமார் 20 சிறைகாவலர்கள் துலுக்க நாய்களே என ஏக வசனத்தை பயன்படுத்தி காஜா பாயை அடித்துள்ளனர். அப்போது பக்ரூதின் ஏன் அப்பாவி வயதானவரை அடிக்கின்றீர்கள் என கேட்க உடனே சுமார் 20 வார்டர்களும் சேர்ந்து அழைத்து வந்த 7 பேரையும் கடுமையாக தாக்கியுள்ளன்..
தாக்குதலுக்கு உள்ளான சிறைவாசிகள் தங்களை தற்காத்து கொள்ள அங்கிருந்து ஓடி உயர் பாதுகாப்பு தொகுதி 1 - ல் புகுந்து உள்பக்கமாக தாழ்பால் போட்டுக்கொண்டர் அந்த நேரத்தில் உயர் பாதுகாப்பு தொகுதி 1 ல் பாதுகாப்பு பணியில் இருந்த துணை ஜெயிலர் மற்றும் வார்டர் உள்ளேயே இருந்துவிட்டனர் அந்த இருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை
தாக்குதலுக்கு உள்ளான சிறைவாசிகள் தங்களை தற்காத்து கொள்ள அங்கிருந்து ஓடி உயர் பாதுகாப்பு தொகுதி 1 - ல் புகுந்து உள்பக்கமாக தாழ்பால் போட்டுக்கொண்டர் அந்த நேரத்தில் உயர் பாதுகாப்பு தொகுதி 1 ல் பாதுகாப்பு பணியில் இருந்த துணை ஜெயிலர் மற்றும் வார்டர் உள்ளேயே இருந்துவிட்டனர் அந்த இருவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை
சிறை கண்காணிப்பாளர் திரு . ராஜேந்திரன் வந்தால் மட்டுமே நாங்கள் கதவு திறப்போம் இல்லை என்றால் எங்களை ஜெயிலர் இளவரசன் கொலை செய்து விடுவார் என காயமடைந்த முஸ்லீம் சிறைவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது ..
சிறைவாசிகளுக்கும் சிறைகாவலருக்கும் நடந்த தள்ளுமுள்ளு காரணமாக சிறை வார்டர் காயமடைந்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது ...
வேலூர் சிறையில் உள்ள போலீஸ் பக்ரூதின், திருச்சி சிறையில் உள்ள மண்ணடி அப்துல்லாஹ் , சேலம் சிறையில் உள்ள காஜா பாய் கோவை சிறையில் உள்ள முன்னா சென்னை புழல் சிறையில் உள்ள அபூதாஹிர் , நவாஸ் , ஹக்கீம் ஆகியோர் நிலமை கடுமையாக சிறை தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளனர் .
தமிழக அரசுக்கும் , சிறைதுறைக்கும் , காவல் உளவுதுறைக்கும் இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக ஒரு கோரிக்கை முஸ்லீம் சிறைவாசிகள் மீது இப்போது நீங்கள் நடத்திய தாக்குதலுக்கு சட்ட ரீதியாகவும் , ஜனநாயக வழியிலுமே பாதிக்கப்பட்ட முஸ்லீம் சிறைவாசிகளுக்கு நீதி தேடுவோமே தவிர வன்முறையை கையில் எடுத்து சமுதாய இளைஞர்களை வழிதவர விடமாட்டோம் ..