கடந்த 2 நாட்களாக நெல்லை மற்றும் குமரி மாவட்டத்தில் காவல்துறையின் காட்டு தர்பார் தான் நடக்கிறது.
புதன் கிழமை காலை 10 மணிக்கு திருவனந்தபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்ற குமரி மாவட்டம் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த ராஃபி என்பவர் மர்ம நபர்களால் இழுத்துச் செல்லப்பட்டார்...
ஆனால் அவரை சட்ட விரோதமாக இழுத்துச் சென்றது குமரி மாவட்ட காவல்துறை என்பது 15/10/15 (வியாழக் கிழமை) காலையில் தான் தெரிய வந்தது,அதன் பேரில் குமரி மாவட்ட காவல் உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட போது தான் அவரை சட்ட விரோத காவலில் வைத்து சித்ரவதை செய்து வருவதும்,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் ராஃபியைக் கொன்று விடுவார்களோ என்ற பயமும் அவருடைய குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ளது...
இந்நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு திருவிதாங்கோட்டைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் நசீர்,அல்தாஃப்,கோட்டார் தௌபீக் போன்றவர்களின் வீடுகளில் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து தேடுதல் வேட்டை என்ற பெயரில் சட்ட விரோதமாக மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளனர்...
அதன் பின்னர் காலை 10 மணிக்கு தென்காசி காவல்நிலையத்தில் ஒரு வழக்கில் கையெழுத்துப் போடச் சென்ற #இந்திய_தேசிய_லீக்_கட்சி நிர்வாகி சுலைமான் சேட் என்பவரை காவல் நிலையத்தில் வைத்து 1 மணி நேரம் விசாரனை செய்துவிட்டு பின்னர் குமரி மாவட்ட காவல்துறையினர் கொண்டு வந்த டாடா சுமோவில் வலுக்கட்டாயமாக ஏற்றிச் சென்றுள்ளனர்...
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தென்காசி நகர மக்கள் ஏ.எஸ்.பி அரவிந்த்திடம் கேட்டதற்கு அவர் பொறுப்பற்ற முறையில் பதில் கூறியுள்ளார்..
பின்னர் பகல் 12 மணியளவில் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த மொபைல் கடை ஊழியர் கலீமுல்லா என்பவரை கடையில் புகுந்து காவல் துறையினர் இழுத்துச் சென்றுள்ளனர்...
பின்னர் பகல் 12 மணியளவில் திருவிதாங்கோட்டைச் சேர்ந்த மொபைல் கடை ஊழியர் கலீமுல்லா என்பவரை கடையில் புகுந்து காவல் துறையினர் இழுத்துச் சென்றுள்ளனர்...
இவ்வாறு தென்காசி மற்றும் திருவிதாங்கோடு,இடலாக்குடி போன்ற பகுதிகளில் காவல்துறை நடத்திய இந்த சட்டவிரோத நடவடிக்கைகளால் நான் குமரி மாவட்டத்திற்கு சென்று காவல்துறை அதிகாரிகளை சந்தித்து முறையிட்ட போது மேற்படி நபர்களை என்ன காரணத்திற்காக கைது செய்து சட்டவிரோத காவலில் வைத்துள்ளார்கள் என்பதை சொல்ல மறுத்துவிட்டனர்.
(முஸ்லிம் என்ற ஒரு காரணத்தை தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்??? )
இதனால் இவர்களை நம்பி இனி பிரயோஜனம் இல்லை என்பதை உணர்ந்து மதுரை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது...
இந்நிலையில் வியாழக்கிழமை மாலையில் திருவிதாங்கோட்டைச் சேர்நத் சமீர்,மற்றும் ஷம்மில் ஆகிய 2 இளைஞர்களை காவல்துறையினர் சட்ட விரோதமாக வேனில் தூக்கிப் போட்டு கொண்டு சென்றுள்ளனர்...
சமுதாய இயக்க தலைவர்கள் பேசியும்,வழக்கறிஞர்கள் சட்ட ரீதியாக போராடியும் காவல்துறையினர் மேற்படி நபர்களை ஏன் கைது செய்தோம்??
எங்கே வைத்துள்ளோம்??என்பதை கூற மறுப்பதோடு,2 நாட்களாகியும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சட்டவிரோத காவலில் வைத்திருப்பதும், கைது செய்யப்பட்டவர்கள் உயிருடன் தான் உள்ளனரா ???என்பதை உறுதியாக கூற மறுப்பதாலும் மேற்படி இளைஞர்களின் பெற்றோர்,உறவினர் மற்றும் சமுதாய இயக்கத்தினர் பெரும் அச்சத்தில் உள்ளனர்...
எங்கே வைத்துள்ளோம்??என்பதை கூற மறுப்பதோடு,2 நாட்களாகியும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் சட்டவிரோத காவலில் வைத்திருப்பதும், கைது செய்யப்பட்டவர்கள் உயிருடன் தான் உள்ளனரா ???என்பதை உறுதியாக கூற மறுப்பதாலும் மேற்படி இளைஞர்களின் பெற்றோர்,உறவினர் மற்றும் சமுதாய இயக்கத்தினர் பெரும் அச்சத்தில் உள்ளனர்...
காவல்துறையினரின் இந்த அராஜகப் போக்கு தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறதா அல்லது இந்துத்வாவினரின் பாசிச ஆட்சி நடைபெறுகிறதா என பொதுமக்கள் சந்தேகிக்கும் படி உள்ளது...
மேற்படி அப்பாவி இளைஞர்களுக்காக துஆ செய்வோம் !!!!