சனி, 17 அக்டோபர், 2015

தீவிரவாதிகள் என்று அழையுங்கள்

உலக அரங்கில் புகழ்பெற்ற இந்திய வரலாற்றியல் அறிஞர் ரோமிலா தாப்பர், வன்முறை, கொலை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்துத்துவ அமைப்புகளை தீவிரவாதிகள் என்று அழையுங்கள் என்று தெரிவித்துள்ளார். என்டிடீவி செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.
இந்த நேர்காணலில் மேலும் அவர், “அவர்கள் தொடர்ந்து கொலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்; கருப்பு மையை வீசுகிறார்கள்; அவர்கள் சமூகத்தையும் வன்முறைப் பாதையில் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே அவர்களை தீவிரவாதிகள் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார். மேலும் அவர், ஊடகங்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் இந்துத்துவ அமைப்புகளை கரிசனத்துடன் பார்க்கின்றன. தீவிரவாத செயல்களில் ஈடுபடும் அவர்களை தீவிரவாதிகள் என்று அழைக்கத் தயங்குகின்றன என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
வளர்ந்துவரும் மதவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து விருதுகளை திரும்ப அளித்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களின் செயல்பாடு மிகுந்த ஊக்கம் தருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். விருதுகளை திரும்ப ஒப்படைப்பது அரசுக்கு எதிரான அறிக்கை என்று வர்ணித்திருக்கிறார் அவர்
இஸ்லாமியர்களின் ஊடகத்துறை's photo.