சிம்லா, இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் பசுக்களை கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் தாக்கப்பட்டவர் உயிரிழந்தார். உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த நோமன் என்பவரை, பசுக்களை கடத்திவந்தவர் என்ற பஜ்ரங்தள் ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கிஉள்ளனர். மிகவும் காயம் அடைந்த நோமனை கடந்த புதன்கிழமை காலையில் இமாச்சல பிரதேச போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். நாகான் அருகே உள்ள ஷராகன் கிராமத்தில் நின்ற டிராக்டரில் காயம் அடைந்த நிலையில் கிடந்த அவரை மீட்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மிகவும் காயம் அடைந்த அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. டிராக்டரில் நோமனுடன் இருந்த இம்ரான் அஸ்கார் பேசுகையில், பஞ்ரங்தள் அமைப்பினர் பசுக்களை ஏற்றிச் சென்ற எங்களுடைய டிராக்டரை நிறுத்தினர், பின்னர் நோனை அவர்கள் கொடூரமாக தாக்கினர் என்று கூறினார். டிராக்டரில் இருந்த மற்ற நான்கு பேர்கள் மீது இமாச்சல பிரதேசம் மாநில பசுவதை தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே பஞ்ரங்தள் அமைப்பினரால் தாக்கப்பட்ட நோமன் உயிரிழந்துவிட்டார். இதுதொடர்பாக போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பஜ்ரங்தள் அமைப்பினரிடமும் விசாரிக்கப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்தா நகர் மாவட்டம் தாத்ரி அருகேயுள்ள பிசடா என்னும் கிராமத்தில் அண்மையில் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டதாக கூறி இக்லாக் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த பிரச்சினை நாடும் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இப்பிரச்சினையில் பிரதமர் மீதும், பா.ஜனதா மீதும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் இமாச்சல பிரதேசத்தில் ஒருவர்
சனி, 17 அக்டோபர், 2015
Home »
» இமாச்சல பிரதேசம்: பசுக்களை கடத்தியதாக தாக்கப்பட்டவர் உயிரிழப்பு
இமாச்சல பிரதேசம்: பசுக்களை கடத்தியதாக தாக்கப்பட்டவர் உயிரிழப்பு
By Muckanamalaipatti 11:45 AM