வெள்ளி, 9 அக்டோபர், 2015

வன்முறை கும்பலுக்கு உடந்தையாக 'மோடி' செயல்படுகிறார் :


'சாகித்ய அகாடமி' விருதை திருப்பி அளித்தார், பிரபல எழுத்தாளர் 'நயன்தாரா ஷகல்'..!
மாட்டுக்காக மனிதர்கள் கொலை செயப்படுவதை கண்டித்தும், இந்த கொடூர தாக்குதல் குறித்து பிரதமர் 'மோடி' எதுவும் பேசாமல் இருப்பதை கண்டித்தும், 'சாகித்ய அகாடமி' விருதை திருப்பி அளித்தார், எழுத்தாளர் நயன்தாரா ஷகல்.
பாஜக அரசு 'பாசிஸ கொள்கை'களை செயல்படுத்துகிறது, அனைத்து விவகாரங்களிலும் நீதி நசுக்கப்படுகிறது.
சுதந்திர இந்தியாவில் இதுபோன்ற 'பாசிஸ அரசு' எப்போதும் இருந்ததில்லை என்கிறார், அவர்.
"ரிச் லைக் அஸ்' என்ற ஆங்கில நாவலுக்காக 1986-ஆம் ஆண்டு 'சாகித்ய அகாடமி' விருது பெற்ற நயன்தாரா ஷகல், ஐ.நா.சபையின் முதல் பெண் தலைவரான விஜயலட்சுமி பண்டிட்டின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அரசியலுக்கு அப்பாற்பட்ட நயன்தாரா, 'இந்திரா காந்தி' எமர்ஜென்சியை அமல்படுத்தியபோது, அதைக் கடுமையாக எதிர்த்தவர் என்பதும் இங்கு நினைவு கூறத்தக்கது.
ஹிந்து மதத்தில் உள்ள முரண்பாடுகள் அல்லது மூடநம்பிக்கைகள் குறித்து புரட்சியாளர்கள் கேள்வி எழுப்பினால், அந்த எழுத்தாளர்களும் கொல்லப்படுகின்றனர்.
இதுபோன்ற அப்பட்டமான பயங்கரவாதங்களை, அரசே ஆதரிப்பதை கண்டிக்கும் வகையில் தனது விருதை திருப்பி கொடுப்பதாக கூறியுள்ளார்,நயன்தாரா ஷகல்.

Related Posts: