எங்கள் தோட்டத்தில் இந்தத் தக்காளி பயிர் செய்த பரப்பளவு இரண்டே கால் ஏக்கர்.
வரவு ரூபாய் மூன்று லட்சம்.
மூட்டுவளி செலவு ஒண்ணரை லட்சம்.
மோட்டார் வகையறா செலவு இருபத்தியைந்தாயிரம்...
வெங்காயத்தில் ஏற்ப்பட்ட நட்டத்தை ஈடு செய்த வகை ரூபாய் ஐம்பதாயிரம்.
மீதம் ரூபாய் எழுபத்தியைந்தாயிரம் ரூபாய்....
இதுதான் எனது என்னைவிட எனது துணைவியாருடைய உழைப்புக்கு இந்த வருடத்தில் கிடைத்த வருவாய்!.....
ஆதாவது ஏ சி அறையில் உட்கார்ந்துகொண்டு நல்ல சம்பளம் வாங்கும் ஒருவனின் ஒருமாத கிம்பளத்துகுக் கூடப் பெறாது.
கரணம் தப்பினால் மரணம் என்பதுதான் பெரும்பாலான விவசாயிகளின் விவசாயத்தின் இன்றைய நிலை!
ஆனாலும் உடலாலும் உள்ளத்தாலும் சரியான வாழ்க்கை வாழ்வதால் அமைதியாகவும் உறுதியாகவும் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது!...