சனி, 3 அக்டோபர், 2015

ஜெனிவா கூட்டத்தில் சவுதி அரேபியா ஆவேசம்

பாலஸ்தீனர்கள் இஸ்றேலால் கொலை செய்ய படுவதும் பாலஸ்தீனர்களின் வழிபாட்டு உரிமைகள் பறிக்க படுவதும் உங்களுக்கு தீவிரவாத செயலாக தெரியவில்லையா????? ஜெனிவா கூட்டத்தில் சவுதி அரேபியா ஆவேசம்
===============================================
.இஸ்லாமிய நாடுகளில் நடைபெறும் சிறு பிரச்சனைகளை கூட பெரிது படுத்தும் மேலைய நாடுகள் தீவிர வாதத்தின் முழு உருவமாகவும் தீவிரவாதத்தின் பிறப்பிடமாகவும் உள்ள இஸ்றேல் பற்றி ஏன் கண்டு கொள்வதில்லை
இது எனக்கு வியப்பு அளிக்கிறது என சவுதி அரேபியாவின் ஐநா பிரதி நிதி பைஸல் தராத் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகளுக்கான ஜக்கிய நாட்டு சபையின் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்தார்
மேலும் அவர் தனது உரையில்
பாலஸ்தீன மக்களுக்களின் உரிமை முழக்கங்களுக்கு முக்கியத்தும் அளிக்கும் பிரிவாக இருந்து வரும் மனித உரிமை பிரகடனத்தின் ஏழாவது பிரிவை நீக்குவதர்கு சில நாடுகள் முயர்ச்சிப்பதை கடுமையாக எதிர்ப்பதாக கூறிய சவுதி அரேபியா அதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் உறுதியுடன் கூறியது
தீவிர வாதம் பற்றி வாய்கிழிய பேசும் நாடுகளையும் மனித உரிமை அமைப்புகளையும் நோக்கி சவுதி அரேபியா விடுத்துள்ள கேள்வி அந்த நாடுகளின் கபடநாடகத்தை வெளிபடுத்துவதாக அமைந்தது
இஸ்லாமிய நாடுகளில் நடை பெறும் சிறு நிகழ்வையும் தீவிரவாதத்தோடு தொடர்ப்பு படுத்துபவர்களே
பாலஸ்தீனின் பச்சிளம் குழந்தை இஸ்றேல் பயங்கரவாதிகளால் ஈவிரக்கம் இன்றி எரித்து கொல்ல பட்டது உங்கள் கண்களுக்கு தீவரவாத செயலாக தெரியவில்லையா ????
முஸ்லிம்களின் புனித தலங்களில் ஒன்றான பைத்துல் முகத்தஸ் மீது இஸ்றேலால் தொடர்ந்து நடத்த பட்டு வரும் அத்து மீறல்கள் உங்களுக்கு தீவிரவாதமாக தெரியவில்லையா????
முஸ்லிம்களுக்கு எதிராக மட்டும் மத சுதந்திரம் பறிக்க படுவது உங்களுக்கு தீவிரவாதமாக தெரியவில்லையா????
இவைகளுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றால் அதனை தொடர்ந்து எழும் விபரீதங்களுக்கு நாங்கள் பொறுப்பேர்க்க முடியாது என்றும் மனித உரிமை ஆணையத்தை ஜெனிவா கூட்டத்தில் சவுதி அரேபியா எச்சரித்துள்ளது

Related Posts: