வியாழன், 15 அக்டோபர், 2015

இது திமுகவுக்கு தேவையா?

அண்ணாவையும் பெரியாரையும் நீக்கு!
திமுகவுக்கு இது தேவையா?
திமுக தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்களுக்கான இயக்கம் என்று சொல்லிவந்த நிலை மாறி ஸ்டாலின் தனது நமக்குநாமே பயணத்தில் கோவிலுக்கு சென்றதைப்பற்றிக் கேட்கும் போது, கலைஞர் மாதிரி கோவில் கூடாது என்பது திமுகவின் கொள்கை அல்ல! கோவில் கொடியவர்களின் கூடாரமாக மாறி விடக்கூடாது என்பதுதான்! ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றில் பார்த்த கோவிலை சுத்திப்பார்க்க வந்தேன்னு எதையாவது சொல்லாமல் திமுகவில் 90% இந்துக்கள்தான் என்று சொல்ல, அதைவைத்து அண்ணா பெயரை எடு! பெரியார் பெயரைச்சொல்லாதே என்று கண்டவனெல்லாம் புத்தி சொல்ல ஆரமிபிச்ட்டாணுங்க! இது திமுகவுக்கு தேவையா?
இந்து என்றால் திருடன் என்று ஒரு அர்த்தம் உண்டு என ஒருமுறை கருணாநிதி சொன்னார்! அந்த அர்த்தத்தில் கூட சொல்லி இருக்கலாம் ! விடுங்கப்பா! சிங்கத்துக்கு பல்லுப் போனால் எலி ஏறி விளையாடுமாம்! கொள்கையை விட்டுக் கொடுத்தால் கூறு கெட்டவன் எல்லாம் குத்திக் காட்டத்தான் செய்வான்!
-செங்கிஸ்கான்