இந்துத்துவாகளுக்கும் சாமியார்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில்
இரண்டு காவலர்களின் நிலை மிக மோசமாகவும், 8 காவலர்கள் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறர்கள்.
இரண்டு காவலர்களின் நிலை மிக மோசமாகவும், 8 காவலர்கள் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறர்கள்.
பல கோடி பொது மக்கள் சொத்துகளை சூறையாடி இருக்கிறார்கள்.
வெளி நாட்டு வாழ் உமை பிரதமர் இது வரை வாய் திறக்க வில்லை.

வாரணாசி: பிரதமர் நரேந்திர மோடியின்தொகுதியான வாரணாசியில் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு ஊரடங்குஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது.நேற்று மாலை இந்த சம்பவம் நடந்தது. இன்று காலை ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுவிட்டன.கடந்த 22ம் தேதி வினாயகர் சிலைகளை விதிகளை மீறி கங்கை ஆற்றில் கரைக்க சென்றவர்கள் பிரச்சனையில் ஈடுபட்டதாலும், கல்வீச்சில் ஈடுபட்டதாலும், கடைகளை தீ வீத்து எரித்ததாலும் போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர்.இதைக் கண்டித்து நேற்று போராட்டம் நடத்த இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்தன. மதத் தலைவர்கள், காங்கிரஸ் எம்எல்ஏ, பாஜகவினர் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்வீச்சிலும் கலவரத்திலும் ஈடுபட்டதையடுத்து பெரும் பதற்றம் ஏற்பட்டது.பல வாகனங்களை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர்.இதையடுத்து போராட்டம் தீவிரமடையவே இதை மதக்கலவரமாக மாற்ற சிலர் முயலலாம் என்பதால் வாரணாசியின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.சமீப காலமாக உத்தரப் பிரதேசத்தில் மதக் கலவரங்களும், மதம் சார்ந்த கொலைகளும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.