மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் ஆர்எஸ்எஸ் நிறுவனங்கள்!
இந்தியாவில் மிக அதிகமாக மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களில் முன்னிலையில் உள்ளவை யாவும் ஆர்எஸ்எஸ் பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்களுடையவையே. ஒரு பக்கம் பசுவதைத் தடுப்பு வேண்டும் என்று கூப்பாடு போடும் இவர்கள், மறுபக்கம் வளைகுடா நாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்து பணம் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள்.
உறைகளில் “ஹலால்” என்று முத்திரையிட்டு இவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். நேபாளத்தில் நடக்கும் மிருக பலிகளின் அனைத்து “அல் கபீர்” என்ற நிறுவனம் மொத்தமாக விலைக்கு வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது.
“அல் கபீர்” என்ற பெயரைப் பார்த்ததும் யாரும் ஏமாந்து விட வேண்டாம். இது சங்கப் பரிவாரக் கூட்டத்தைச் சார்ந்தது. அரபிப் பெயரை வைத்து மக்களை ஏமாற்றி, ஹலால் இல்லாத இறைச்சிகளை சந்தையில் புழங்க விடும் இந்நிறுவனம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.