வெள்ளி, 16 அக்டோபர், 2015

அல்குர்ஆன்:அவர்களுடைய உள்ளச்சமும் அதிகரிக்கும்.

(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "நீங்கள் (இந்தக் குர்ஆனை) நம்பிக்கை கொள்ளுங்கள் அல்லது நம்பிக்கை கொள்ளாதிருங்கள். (அதைப் பற்றி நமக்கு ஒன்றும் குறைவில்லை.) நிச்சயமாக இதற்கு முன்னுள்ள (வேதங்களின்) மெய்யான ஞானம் எவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றதோ அவர்களிடம் (இவ்வேதம்) ஓதிக் காண்பிக்கப்பட்டால் அவர்கள் (இதனை நம்பிக்கை கொண்டு) முகங்குப்புற விழுந்து (எனக்கு) சிரம் பணிவார்கள்.
அன்றி, (அவர்கள்) "எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். எங்கள் இறைவனின் வாக்குறுதி நிச்சயமாக நிறைவேறி விட்டது" என்றும் கூறுவார்கள்.
அன்றி, அவர்கள் முகங்குப்புற விழுந்து அழுவார்கள். அவர்களுடைய உள்ளச்சமும் அதிகரிக்கும்.
(அல்குர்ஆன்: 17:107-109)