வெள்ளி, 16 அக்டோபர், 2015

தமிழக முதல்வர் கவணத்திற்க்கு.....

இஸ்லாமிய தலைவர்களின் பார்வைக்கு.....
தமிழக முதல்வர் கவணத்திற்க்கு.....
புழல் சிறையில் ஏற்பட்ட முஸ்லிம் சிறைவாசிகளுக்கும்"ஜெயிலர்களுக்கும் இடையே ஏற்பட்ட கலவரத்தை ஒட்டி இனி முஸ்லிம் சிறைவாசிகளுக்கு யாரும் சட்ட ரீதீயாக உதவி செய்ய கூடாது எனவும்"சிறைவாசிகளின் விடுதலைக்காக சட்ட ரீதியாக மனு போட்டு சந்தித்து வந்த அனைத்து சகோதர்களையும் வேறொடு அழிக்க தமிழக உளவுத்துறை அதிகாரிகளின் புது வீயூகம் அம்பலம்.......
இனி தமிழகத்தில் சிறைவாசிகளுக்காக யாரும் பணியாற்ற கூடாது என அதற்கான புதிய Special Team ஒன்றை ஏற்படுத்தி இருக்கிறது....தமிழக உளவுத்துறை
கடந்த ரமலான் மாதம் தமிழகம் முமுவதும் மற்றும் பெங்களுர் சிறைக்கு சென்று அனைத்து சிறைவாசிகளுக்கும் ஆறுதல் கூறி தேவைகளை நிறைவேற்றி வந்த திருவாங்கோடு ராஃபீ இரண்டூ நாள்களுக்கு முன்பு கண்ணியாக்குமரி காவல்துறையினரால் எந்த அறிவிப்பும் இன்றி கடத்தப்படுக்கிறார்....
பிறகு நெல்லை மாவட்டம் தென்காசி காவல் நிலையத்தில் தென்காசி சுலைமான் சேட்" தென்காசி காவல் துறை கண்காணிப்பாளர் ADSPஅரவிந்தன்"அவர்களால் விசாரணை என அழைத்து சென்று விசாரணை செய்தார்....
அப்போதே சந்தேகம் அடைந்த சுலைமான் சேட் தமிழக முதல்வர் தனிப்பிரிவுக்கு தென்காசி காவல்துறையினர் எதோ ஒரு பொய் வழக்கில் தன்னை சேர்க்க திட்டம் திட்டுவதாகவும்"தங்கள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அனுப்பினார்கள்....
அவர்களின் சந்தேகத்திற்க்கு ஏற்ப மூன்று பிறகு தென்காசி காவல்துறையினர் சுலைமான் சேட் விசாரணை என அழைத்து சென்று வேறொரு மாவட்ட காவல்துறையிடம் ஒப்படைத்து இரண்டூ நாட்களாக பதில் சொல்லாமல் அவருடைய வீட்டுக்கும் தெரியப்படுத்தமால் பிறகு நீதி மன்றத்தில் ஆஜார் படுத்தினார்கள்.....
பிறகு ஒரு சில மனித உரிமை ஆர்வலாளர்களால் விசாரணை செய்யப்பட்ட போது....
கண்ணியாக்குமரி மாவட்ட எஸ்.பி.மணிவண்ணன் தலைமையில்
சிறப்பு ஆய்வாளர் விஜயன் தலைமையில் தமிழகத்தில் சிறைவாசிகளுக்காக சட்ட ரீதீயாக பணி செய்யக் கூடிய 45இஸ்லாமிய சகோதர்களை ஏதேனும் ஒரு பொய் வழக்குகளில் சேர்த்து 10"ஆண்டுகள்"15ஆண்டுகள் என அவர்களது வாழ்க்கையை கேள்வி குறியாக்க திட்டம் திட்டியது தெரிய வந்துள்ளது......
இதுவரை கண்ணியாகக்குமரி மாவட்டத்தில் சமீர்"நஷுர்"தென்காசி மலேசியா சுபஹான்"மதுரை சுல்தான் பாட்ஷா.சமீர் அஹமது என எந்த அறிவிப்பு இல்லாமல் அழைத்து சென்றவர்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை...?
இன்னும் முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காக களப்பணியாற்றிய சகோதர்களை தேடும் வேட்டையில் இறங்கி உள்ளார்கள்.....
காஷ்மீர் முஸ்லிம்களை எவ்வாறு கடத்தி கொடுமை படுத்தினார்களோ அதே நிலைமை இப்போது தமிழகத்தில் தொடர்ந்துள்ளது....
யாரும் அந்நீதீக்கு பாதிப்பு அடைய கூடாது சகோதர்களே....
பாதிப்பு அடைவது யாரோ ஒருவர் இல்லை....
உன்னுடைய சகோதர்கள்....
உடனே அனைத்து இயக்க தலைமைகளுக்கும்"மனித ஆர்வளர்களுக்கும்"தெரியப்படுத்தி தமிழக முதல்வர் கவணத்திற்க்கு கொண்டு செல்லுங்கள் சகோதர்களே...
தகவல்:அய்யூப் BABL
தென்காசி வழக்கறிஞர்