திங்கள், 2 நவம்பர், 2015

--> டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:


* தொடர்ந்து 3 முதல் 5 நாட்கள் வரை காய்ச்சல்
* திடீரென காய்ச்சல் அதிகமாகுதல்
* தலைவலி, கழுத்து வலி, உடம்பு வலி
* பித்தப்பை வீங்கி மூச்சுவிட கஷ்டப்படுதல்
* வயிறு உப்புசம், தோல் தடிப்பு
* தோலில் எரிச்சல், வாந்தி
* உடலில் சிவப்பு புள்ளிகள் தோன்றுவது
* மூக்கு மற்றும் பல், ஈறுகளில் ரத்தக் கசிவு
--> கொசுக்கள் மாயமாகும்!
நிழலில் காயவைக்கப்பட்ட நொச்சி, நிலவேம்பு, வேப்பிலை இலைகளை மஞ்சளுடன் சேர்த்து சாம்பிராணி புகை போடுவதைப் போல, வீடு முழுக்க பரப்ப, கொசுவின் உற்பத்தி குறைவதுடன், நம் சுவாசத்துக்கும் வலு சேர்க்கும்.
இயற்கை பூச்சிக் கொல்லியான பஞ்ச கவ்யத்தை (பால், தயிர், நெய், சாணம், கோமியம் சேர்ந்த கலவை) வீட்டைச் சுற்றி தெளித்தால் கொசுக்களின் எண்ணிக்கை குறையும்.
வேப்பிலை, நிலவேம்பு, மஞ்சள் ஆகியவற்றை நன்கு கொதிக்கவைத்து, வீட்டைத் துடைத்தும், வீட்டில் தெளித்தும் பயன்படுத்தினால், கொசுவின் இனப்பெருக்கம் குறையும்.
பேய் விரட்டிச் செடியின் வாசனைக்குக் கொசு நெருங்கவே நெருங்காது. அதனால், வீட்டிற்கு ஒரு நிலவேம்பு, நொச்சி, பேய்விரட்டி போன்ற செடிகளை வளர்க்கலாம்.
--> டெங்குவை தடுக்க செய்ய வேண்டியவை...
* டெங்கு கொசுவின் வாழ்விடமே, சுத்தமான நீர் தேங்கும் இடம்தான். எனவே, வீட்டுக்குப் பயன்படுத்தும் நல்ல நீர் நிரம்பிய பாத்திரங்களை நன்றாக மூடிவைக்கவும்.
* மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை, கொசு புகாதவாறு பாதுகாப்பாக மூடிவைக்கவும். அதோடு, வாரம் ஒருமுறை சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.
* வீட்டைச் சுற்றி நீர் தேங்கியுள்ள இடங்களில் 30 மி.லி பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெயை 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க, கொசுவின் லார்வாக்கள் இறந்துவிடும்.
* கிணறுகளில், சிறுசிறு மீன்களை விடலாம். அது கொசுவின் லார்வாக்களைத் தின்றுவிடும்.
* தேவையற்ற பொருட்களை, வீட்டின் உள்ளே அல்லது வெளியே சேமித்துவைத்து, கொசுவை விருந்தாளியாக அழைப்பதை விட, ஒரேயடியாக அதனைக் குப்பைத் தொட்டியில் போட்டுவிடுங்கள்.
* செப்டிக் டேங்க், வென்டிலேஷன் குழாய் போன்ற இடங்களில் நைலான் வலைகளைக் கட்டி, கொசு உள்ளே புகாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
* வீட்டின் தோட்டம், ஜன்னல், பழைய பொருட்கள் இருக்கும் இடம், டயர் இருக்கும் இடம் போன்ற பகுதிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

Kaalaimalar's photo.