திங்கள், 2 நவம்பர், 2015

கன மழை காரணமாக மின் இணைப்பில் பழுது ஏற்பட்டால் பொதுமக்கள் புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு


மழை தொடரும் நிலையில் சென்னையில் மின் கம்பிகள் மற்றும் மின் சாதனங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் பொதுமக்கள் தகவல் அளிக்கும் வகையில் தொலைபேசி எண்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

அண்ணாநகர் கோட்டத்திற்குட்பட்ட மக்கள் மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு 044-26154408 அல்லது 944-5850-286 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

அம்பத்தூர் மின்கோட்டத்திற்குட்பட்ட மக்கள் 044 - 26248282 மற்றும் 944-5850-311 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

ஆவடி கோட்டத்திற்குட்பட்ட மக்கள் 044 - 26375613, 044 - 26370410 ஆகிய தொலைபேசி எண்களிலும், 944-5850-344 என்ற கைப்பேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

தி.நகர் மின்கோட்டத்திற்குட்பட்ட பகுதியினர் 044 - 28235658, 044 - 28254900 மற்றும் 944-5850-727 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

மயிலாப்பூ கோட்டத்திற்குட்பட்டவர்கள் 044 - 28116281 மற்றும் 944-5850-717 ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.

அண்ணாசாலை கோட்டத்திற்குட்பட்டவர்கள், 044 - 25341953, 044 - 25342645 மற்றும் 944-5850-686 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்.

எழும்பூர் சுற்று வட்டாரப்பகுதி மக்கள் 044 - 26624703, 044 - 26625528 மற்றும் 944-5850-696 என்ற எண்களை தொடர்புகொண்டு மின்சாரம் தொடர்பான புகார்களை கூறலாம்.

பொன்னேரி மின்வாரிய கோட்ட மக்கள் 960-0454-077, 944-5850-915 ஆகிய கைப்பேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

பெரம்பூர் கோட்ட மக்கள் 044-25375783, 944-5850-959 ஆகிய எண்களிலும்

தண்டையார்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் 044 - 25750656, 044 - 25752573 மற்றும் 944-5850-889 ஆகிய எண்களிலும் தொடர்பு கொண்டு மின்சாரம் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம்.


வியாசர்பாடி மின்கோட்டத்திற்குட்பட்ட மக்கள் தங்கள் புகார்களை 044- 25516248, 9094 - 9340 -000 மற்றும் 944 - 5850 -871 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
இவை தவிர மின்சாரம் தொடர்பான அவசர உதவிகளுக்கு எந்தப்பகுதி மக்களாக இருந்தாலும் 944-5850-909, 944-5850-900 ஆகிய கைப்பேசி எண்களை அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.