பொதுமக்களின் வாழ்க்கையை வளப்படுத்தவும், ஐ. எஸ். தீவிரவாதிகளை எதிர்த்து போராடவும் முஸ்லிம்கள் ஆற்றி வரும் பங்களிப்பை பாராட்டிய பிரித்தானிய பிரதமர் டேவிட் கேமரூன்,
இரத்த வெறியர்கள் மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு முஸ்லிம்கள் பொறுப்பல்ல, மாற்றமாக தீவிரவாதிகளின் செயற்பாடுகள் அமைதியை வலியுறுத்தும் இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணானதாகும் என குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் இடம் பெற்ற அந்நாட்டு பாராளுமன்ற வாராந்திர கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அதே வேலை தீவிரவாதத்தை எதிர் கொள்வதற்கு நாட்டு மக்கள் அனைவரும் வழமைபோல் ஒற்றுமையுடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.