திங்கள், 29 பிப்ரவரி, 2016

நாட்டு வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வை மேம்படுத்தவும் உதவாத பட்ஜெட்:

மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட் நாட்டு வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வை மேம்படுத்த உதவாத வகையில் அமைந்துள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்தியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு தாக்கல் செய்யப்பட்ட மூன்றாவது நிதிநிலை அறிக்கையில் மக்கள் மீதான மறைமுக வரிகளை உயர்த்தியும், விவசாயிகளுக்கு கட்டுபடியாகும் கொள்முதல் விலைகளை தர மறுத்தும் கிராமப்புற வேலை உறுதி திட்டத்தை வெட்டி சுருக்கியும் கல்வி, ஆரோக்கியம், குழந்தை மற்றும் மகளிர் நலன், தலித் மற்றும் பழங்குடியினர் நலன் ஆகியவற்றை புறக்கணித்தும் சொல்லொணாத் துயரங்களுக்கு மக்களை தள்ளியுள்ளது.
நல்ல நாள் வருகிறது என்று உடுக்கை அடித்துக்கொண்டே மக்களை வாட்டி வதைக்கும் பாஜக நடவடிக்கை வரிசையில் 2016-17 க்கான மத்திய பட்ஜெட்டும் பயணிக்கிறது.
வழக்கம் போல், ஏழை உழைப்பாளி மக்கள் மீது அதிக சுமையாக விழும் மறைமுக வரிகளை உயர்த்தி 20,000 கோடி ரூபாய் திரட்டுவது, மறுபுறம் செல்வந்தர்களையும் பெரும் கம்பெனிகளையும் தொடர்ந்து மகிழ்விக்கும் வகையில் நேர்முகவரிகள் சுமையை 1000 கோடி ரூபாய் குறைப்பது என்று பட்ஜெட் அமைந்துள்ளது.
நாட்டின் பெரும் பகுதி வரி வருமானம் இவ்வாறு மறைமுக வரிகள் மூலம் திரட்டப்படுவது உழைக்கும் மக்களை தொடர்ந்து வஞ்சிப்பதாகும். இந்த பட்ஜெட்டில் இன்னும் ஒரு படி மேலே சென்று வரி ஏய்ப்பு செய்துள்ளவர்களை கூவி அழைத்து அவர்களுக்கு மன்னிப்பு வழங்கும் திட்டத்தை நிதி அமைச்சர் முன்வைத்துள்ளது மிகவும் மோசமான முன்மாதிரியாகும். 1997இல் அன்றைய நிதி அமைச்சர் கொண்டுவந்த இதேபோன்ற திட்டத்தை பாஜக எதிர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
திட்ட ஒதுக்கீடுகளில் முன்னேற்றம் இல்லை. பட்ஜெட் உரையில் விவசாயம் பற்றி பசப்பான பேச்சு உள்ளது. ஆனால் பட்ஜெட் முன்மொழிவுகளும் ஒதுக்கீடுகளும் விவசாய நெருக்கடியை தீர்க்க உதவாது, மாறாக தீவிரப்படுத்தவே செய்யும். ஊராக வேலை திட்டத்திற்கு ஒதுக்கீடு பண அளவில் சென்ற ஆண்டை விட அதிகரித்திருந்தாலும் விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் சரிவு தான்.
ஒரு சில ஆண்டுகளுக்குமுன் ரூபாய் 40 ஆயிரம் கோடியாக இருந்த ஒதுக்கீடு ரூபாய் 38 ஆயிரம் கோடியாகத்தான் இந்த ஆண்டு உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்கான ஒதுக்கீடும் குறைந்துள்ளது. கல்வித்துறையின் நிலைமையும் இதுதான். நடப்பு ஆண்டு உற்பத்தி வளர்ச்சி 7.5% என்று சொல்லும் அரசு ஒதுக்கீடுகள் எதையும் அந்த அளவுக்குக்கூட உயர்த்தவில்லை. மாறாக உண்மையளவில் பல துறைகளுக்கான ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டுள்ளன.
நிதிப்பற்றாக் குறையை குறைப்பதே நோக்கமாக கொண்டு பட்ஜெட் போடப்படுவது பன்னாட்டு நிதி மூலதனத்தை தாஜா செய்வதற்கே. இது நாட்டு வளர்ச்சிக்கும் மக்கள் வாழ்வை மேம்படுத்தவும் எந்த வகையிலும் உதவாது.
தாராளமய கொள்கைகளை தீவிரமாக பின்பற்றும் பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை வன்மையாக கண்டிக்கிறேன் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அரசு இ-சேவை மையம் மூலம் பாடநூல்கள் பெறும் வசதி அறிமுகம்


முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிschool_booksலான பாடநூல்களுக்கு மாணவர்கள் அரசு இ-சேவை மையத்தில் பணம் செலுத்தி பதிவு செய்தால், வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும் என தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
”மாணவர்களுக்கு தேவையான முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணையவழி மூலமாக (www.textbookcorp.in) விற்று வருகிறது. மேலும், இணையவழியாக பணம் செலுத்த இயலாததால், பாடநூல்களை பெற முடியாத மாணவர்களுக்கும் எளிதில் பாடநூல்கள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், தாலுகா அளவிலான அரசு பொது இ-சேவை மையம் மூலமாகவும் பணம் செலுத்தி பாடநூல்கள் பெற தற்போது வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பாடநூல்களின் விவரம் மற்றும் விலை ஆகியவற்றை அரசு பொது இ-சேவை மையத்திலேயே, பாடநூல் நிறுவன இணைய தளம் மூலம் அறிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே, பாடநூல்கள் தேவைப்படும் மாணவர்கள் அருகில் உள்ள அரசு பொது இ-சேவை மையத்தை அணுகி தேவையான பாடநூல்களை தேர்வு செய்து அதற்கான பணத்தை செலுத்தி, பதிவு செய்யலாம். அதற்கான ரசீதும் வழங்கப்படும்.
இதற்கு கூடுதல் கட்டணங்கள் ஏதும் இல்லை. அவ்வாறு பதிவு செய்யும் மாணவர்களுக்கு, பாடநூல்கள் அவர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அருகே ஐஓபி வங்கியில் கொள்ளை முயற்சி

IOBபுதுக்கோட்டை திருச்சி தேசிய  நெடுஞ்சாலையில் நார்த்தாமலையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை மர்ம நபர்கள் ஜன்னலை உடைத்து கொள்ளையிட முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை அருகே  நார்த்தாமலையில்  அரசுடமை வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை கடந்த பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. வாடகைக்கட்டடத்தில் இயங்கி வந்த இவ்வங்கி கடந்த 2  ஆண்டுகளுக்கு முன் புதிய  புதிய கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. விவசாயம் சார்ந்த கிராமங்களை அதிகம் கொண்டுள்ளதால் இந்த வங்கியில் சுற்று வட்டாரத்திலுள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயக்கடன், நகைகடனுதவி பெற்று தங்களது தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
 மேலும் இப்பகுதியில் நூற்றுக்கணக்கான தனியார் கல் குவாரிகள் செயல்பட்டு வருவதால் கோடிக்கணக்கில் வரவு செலவு நடைபெற்று வருகிறது. சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் விடுமுறைக்குப்பின் வழக்கம் போல திங்கள்கிழமை காலையில் வங்கியை திறப்பதற்காகச்சென்ற  வங்கி மேலாளர் குணசேகரன்  வங்கியின் நுழைவு வாயிலருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் (சிசிடிவி) காமிராவின் வயல்  அறுந்திருந்ததைப் பார்த்துள்ளார்.  இதையடுத்து சந்தேகமடைந்த அவர் வஙகியின் வெளியே 3  பக்கமும் சுற்றிப்பார்த்தபோது ஒரு பகுதியில்வங்கியின் ஜன்னல் கண்ணாடி உடைந்திருந்ததும், உள்ளேயிருந்த ஜன்னல் கம்பி ஆக்ஸா பிளேடால் பாதி அறுக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து  கீரனூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததபின்,  காவல் ஆய்வாளர் ஞானவேலன் தலைமையில் போலீஸார் அங்கு சென்று வங்கியின் கதவைத் திறந்து உள்ளே சென்று ஆய்வு செய்தனர். அதில், ஜன்னல் கம்பியை அறுக்கும் முயற்சி பலனளிக்காததால் திருடவந்த மர்ம நபர்கள் திரும்பிச் சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து  வங்கியில் இருந்த சிசிடிவி காமிராவின் பதிவை ஆய்வு செய்த போது வங்கி வாயிலில் ஒரு மர்ம நபர் தலையில் முக்காடு போட்டு குனிந்தபடி சென்ற காட்சி  5 நொடிகள் இருந்ததைப் பார்க்க முடிந்தது.
இது குறித்த புகாரின் பேரில் கீரனூர் போலீஸார்  வழக்குப் பதிவு செய்து தீவிர  விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 திட்டமிட்டபடி இவ்வங்கிக் கொள்ளை நடந்திருந்தால் விவசாயிகள் அடகு வைத்துள்ள பல கோடி மதிப்புள்ள தங்க நகைகள், ரொக்கம் பறிபோயிருக்கும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த  ஆண்டில் இதே சாலையில் குளத்தூரில் இயங்கி வரும் தனியார் (சிட்டியூனியன்) வங்கியில் நடந்த  கொள்ளை சம்பவத்தில் 80 கிலோ தங்க நகைகள் காணாமல் போனது குறிப்பிடத்தக்கது. ஓராண்டுக்குப்பின் மீண்டும் நடைபெற்றுள்ள கொள்ளை முயற்சி  மாவட்ட மக்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இண்டர்நெட்டை அதிகம் பயன்படுத்துவதில் தமிழ்நாட்டுக்கு 2-வது இடம்


இந்தியாவில் இண்டர்நெட்டை அதிகமாக பயன்படுத்துவதில் தமிழ்நாட்டிற்கு இரண்டாவது இடம் பெற்றுள்ளது என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. முதல் இடத்தை மகாInternet screenராஷ்டிரா மாநிலம் இடம் பெற்றுள்ளது.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலகட்டத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள புள்ளி விவரங்கள்:
இந்தியாவில் 32.5 கோடி இண்டர்நெட் பயன்படுத்துவோர்கள் உள்ளனர். இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 2.77 கோடி பேர் இண்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர். இதில், 97 லட்சம் பேர் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள். இதற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில் இண்டர்நெட்டை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் 2.68 கோடி பேரும், ஆந்திராவில் 2.39 கோடி பேர், கர்நாடகாவில் 2.17 கோடி பேர் இண்டர்நெட்டை பயன்படுத்துகின்றனர்.
நாட்டின் மொத்த இண்டர்நெட் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கையில் 12 கோடி பேர் பிராட்பேண்ட் இணைய சேவையை பயன்படுத்து வருகின்றனர்.
தில்லி (1.84 கோடி), மும்பை (1.52 கோடி), கொல்கத்தாவில் (86 லட்சம்) போன்ற முக்கிய பெரும் மாநகரங்களில் குறைந்த அளவே இண்டர்நெட்டை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாட் போராட்டத்தின்போது 50க்கும் மேற்பட்ட பெண்கள் கூட்டு பலாத்காரம்? அதிர்ச்சியில் ஹரியானா

சண்டிகர்: சாலையில் சென்ற வாகனங்களில் பயணித்த பெண்களை, ஜாட் போராட்டக்காரர்கள், இழுத்துச்சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்களின் உள்ளாடைகள் சோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒ28-1456647876-jat-protest45துக்கீடு கேட்டு ஜாட் இன மக்கள் ஹரியானா மாநிலத்தில், போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் இருந்து 50 கி.மீ தொலைவில் முர்தால் என்ற பகுதியில், பெண்கள் பலர் போராட்டத்தின் நடுவே பலாத்காரத்திற்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. லாரி டிரைவர் ஒருவர், செய்தி நிறுவனமான ஏ.என்.ஐயிடம் இத்தகவலை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், சுமார் 50 பெண்களை போராட்டக்காரர்கள், வயல் வெளிக்குள் இழுத்துச் சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்தனர். கார்களில் பயணித்த பெண்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடைபெற்றது. சம்பவ இடத்தில் உள்ளாடைகள் சிதறிக்கிடந்தன என்றார். இந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலாத்காரம் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என்றும், பலாத்கார சம்பவம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் சோனிபட் மாவட்ட போலீஸ் எஸ்.பி தெரிவித்துள்ளார். இருப்பினும் பெண் போலீஸ் அதிகாரிகள் கொண்ட விசாரணை குழுவை மாநில காவல்துறை அமைத்துள்ளது. அவர்கள் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட உள்ளாடைகளை கைப்பற்றி சோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தப்லீக் ஜமாத்பற்றி


தப்லீக் ஜமாத்பற்றி

Posted by Jeddah TNTJ on Sunday, February 28, 2016

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

ஜனநாயக அரசியல்

ஜனநாயக ரீதியாக:  அரசியல்  செய்பவர்கள் / செய்தவர்கள் , தாங்கள் செய்த நல்ல திட்டங்களை வைத்து பிரச்சாரம்    செய்வது வழக்கம். நல்லது எதுவும் செய்யாமல் அடுத்தவர்களை குறை கூறி / குறை சொல்லி அரசியல் செய்யும். அநாகரிகமான அரசியல், இந்தியாவில் தவிர வேறெங்கும் கானகிடைகாது.

“ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்..! பாசிசத்தை வேரறுப்போம்!”




~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நாடு முழுவதும் அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வெல்ஃபேர் பார்ட்டியின்
தேசியத் தலைவர் இல்யாஸ் அவர்களும் பொதுச் செயலாளர்
ஹம்ஸா அவர்களும் டெல்லியில் நடைபெற்ற
செய்தியாளர் சந்திப்பில் கூறினர்.
“மோடிக்கு எதிராகப் பேசுவதே தேச துரோகம்தான் என்று
அலீகரைச் சேர்ந்த பாஜக எம்பி ஒருவர் கூறுகிறார்.
மோடிக்கு எதிராகவும் சங்பரிவாரங்களுக்கு எதிராகவும்
கருத்துகளைச் சொன்னதால்தான்
ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக
மாணவர்களும் டெல்லி ஜேஎன்யு மாணவர்களும்
வேட்டையாடப்படுகின்றனர்” என்று வெல்ஃபேர்
பார்ட்டி தலைவர்கள் கூறினர்.
அறிவிக்கப்படாத இந்த நெருக்கடி நிலைக்கு எதிராக,
நாடு முழுவதும் தேசிய அளவில் “ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்
பாசிசத்தை வேரறுப்போம்” எனும் தலைப்பில்
பரப்புரை இயக்கம் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்தனர்.
ஏராளமான செய்தியாளர்கள் வந்திருந்தனர்.
டெல்லியில் நடைபெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில்
வெல்ஃபேர் பார்ட்டியின் தேசியத் துணைத் தலைவரும்
தமிழகத்தைச் சேர்ந்தவருமான
சுப்ரமணி அவர்களும் கலந்துகொண்டார்.
ஜனநாயகத்தை மீட்டெடுப்போம்..!
பாசிசத்தை வேரறுப்போம்..!!
-சிராஜுல்ஹஸன்

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது திருடனிடம் சிக்கிக் கொண்டால்

ஏ.டி.எம்-ல் பணம் எடுக்கும்போது திருடனிடம் சிக்கிக் கொண்டால், கவனமாகச் செயல்பட்டு நமது பணத்தைக் காப்பாற்றிக் கொண்வதுடன் திருடனையும் பிடிபடவைக்க முடியும்.
ATM ன் பயன்பாடு நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்களிலும் அதிகரித்துள்ளது. இதனால் பெரும்பாலானவர்கள் ATM ஐ பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், திருடர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ATM ல் பணம் எடுக்கும்போது, திருடர்கள் பணத்தைப் பரித்துச் செல்வது ஆங்காங்கே தொடர்ந்து நடந்து வருகின்றது.
இத்தகைய திருட்டைத் தடுப்பதற்காகவும், திருடர்களைப் பிடிப்பதற்காகவும், ATM மையங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.atm_girl_002.w540
எனினும், இப்படிப்பட்ட இக்கெட்டில் சிக்கிக்கொள்ளும் போது, நாம் நமது பணத்தையும் பரிகொடுக்காமல், திருடனை பிடிபட வைப்பதற்கும் வழிவகை உள்ளது. ஆனால் இது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது.
நாம் ATM ல் பணம் எடுக்கச் செல்லும்போது திருடன் நம்மை மிரட்டி, பணத்தை ATM ல் இருந்து எடுத்துக் கொடுக்கச் சொல்லி மிரட்டினால், நாம் நமது ATM Pin நம்பரை தலைகீழாக பதிவு செய்யவேண்டும்.
அதாவது, 5678 என்பது நமது பிண் நம்பர் என்றால் 8765 என்று பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யும்போது, பணம் எண்ணப்படும். ஆனால் வெளியே வராமல் பாதியில் நின்றுகொள்ளும் அத்துடன் காவல்துறையினருக்கும் தகவல் சென்றுவிடும்.
இதனால் நமது பணத்தைக் காப்பாற்றிக் கொள்வதுடன் திருடனையும் சிக்கவைக்க முடியும்.

கல்லூரியில் அரசியலை பற்றி விவாதிக்க கூடாதா ?



சுட்டுக்கொல்லப்பட வேண்டும் என பாஜக வின் ஹெச் ராஜாவால் சொல்லபட்ட சகோதரி அபரஞ்சிதாவின் கருத்து மிகவும் ரசித்தேன் ..
அம்பானியும் அதானியும் வியாபாரத்தில் அரசியல் செய்யலாம் மோடியும் அத்வானியும் அரசியலில் வியாபாரம் செய்யலாம் நாங்கள் கல்லூரியில் அரசியலை பற்றி விவாதிக்க கூடாதா ? எம்மை வருங்கால நாட்டின் தூண்கள் என கருதுவது உண்மையனால் நாங்கள் விவாதிக்கும் அரசியலை தடுப்பது ஏன் ?
சல்யூட் சகோதரி .......

எங்கே இந்த 20 “தேச துரோகிகள்”.. லிஸ்ட் போட்டு தேடும் டெல்லி போலீஸ்!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த சர்ச்சைக்குரியதாக கருதப்படும் விழாவில் கலந்து கொண்ட 20 பேரின் பெயர்கள் கொண்ட பட்டியலை டெல்லி போலீஸார் தயாரித்துள்ளனர். இந்த 20 பேரும் தேச துரோகிகள் என்று டெல்லி போலீஸ் வர்ணித்துள்ளது. இவர்களைக் கைது செய்ய நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாம். பிப்ரவரி 9ம் தேதி பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவின்போது இந்27-1456570366-jnu-protest1-600தியாவுக்கு எதிராக கோஷம் போட்டவர்களிடையே இவர்களும் இருந்தனராம். இவர்களைத்தான் தேடி வருவதாக போலீஸார் கூறுகிறார்கள். சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட 12 வீடியோ பதிவுகளை வைத்து இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களைத் தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். இவர்கள் குறித்து கன்யா குமார், அனிர்பன் பட்டச்சார்யா, உமர் காலித் ஆகியோரிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் இவர்களைப் பற்றித் தெரியாது என்று கூறி விட்டனராம். மேலும் கன்யா கூறுகையில், நான் விழாவின் கடைசிக் கட்டத்தில்தான் அங்கு வந்தேன். இந்த நபர்கள் யார் என்ற விவரம் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளாராம். எனவே இந்த 20 பேரும் பல்கலைக்கழகத்தைச் சேராதவர்கள் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவர்கள் போல ஊடுறுவியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்த வழக்கை சிறப்புப் பிரிவுக்கு டெல்லி போலீஸார் மாற்றியுள்ளனர்.

இது தான் சட்டமா .. ?


தமிழ் நாட்டில் ஆவணப்படம் மூலம் கலவரத்தை நடத்த திட்டமிட்ட இந்து முன்னணிக்கு காவல் துறை பாதுகாப்பு. .
கலவரத்தை தடுக்க காவல் துறையில்
புகார் அளித்த இந்திய தேசிய லீக் கட்சி மாவட்ட செயலாளர் தம்பி அபுதாலிப் (எ) அபூ 506/2 சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைப்பு....
இது தான் சட்டமா .. ?
அபுதாலிப் உட்பட அப்துர்ரஹ்மான் , அப்பாஸ் மூன்று பேரைக் கைது செய்ததையும் திண்டுக்கல் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஆசிக் உட்பட நான்கு பேரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ள திண்டுக்கல் மாவட்ட காவல் துறையை இந்திய தேசிய லீக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ...
தமிழக அரசு தலையிட்டு உடனே கைது செய்யப்பட்ட சகோதரர்களை விடுதலை செய்ய வேண்டும் என இந்திய தேசிய லீக் கட்சி கோருகிறது. ..

கோடைக்கால சிறப்பு பயிற்சிகள் ஈரோட்டில்

கோடைக்கால சிறப்பு பயிற்சிகள் ஈரோட்டில் தரமான முறையில் 
சுயதொழில் ஆர்வம் உள்ளவர்களுக்காக சிறப்பான வகுப்புகள் இதனுடன் விற்பனை /வியாபார யுக்திகள் கற்பிக்கப்படும் . contact : 99424-93854 மேலும் FEB 28 தேதிக்குள் பதிவு செய்து கொள்பர்களுக்கு பயிற்சி கட்டணத்தில் சலுகை உண்டு . 
✔ Professional மெஹந்தி பயிற்சி 
✔ Professional Designer Jewellery Making (பேஷன் டிசைனர் நகை தயாரிப்பு )
✔ Terracotta நகை தயாரிப்பு பயிற்சி மற்றும் விற்பனை முறைகள் 
✔ Spoken இங்கிலீஷ் ( தொழில் முனைவோர் இல் இருந்து பள்ளி பிள்ளைகள் வரை அனைவருக்கும் தனி தனி வகுப்பு)
✔வேலை தேடுவோருக்கான ஸ்பெஷல் course JOB SEEKERS (ஆளுமை திறன் / GD /Interview / Resume writing )என்று முக்கியமானவை கற்பிக்கப்படும்
✔Personality Development Course ஆளுமை திறன் வகுப்புகள் (பிசினஸ் செய்வோர் / Working professional /marketing /students )
✔Business Presentation வகுப்புகள் ( பிசினஸ் /தொழில் /மற்றும் பள்ளி கல்லூரி பிள்ளைகளுக்கு )
✔ Crafts வகுப்புகள்
பயிற்சி கட்டணம் குறித்த விபரங்கள் அறிய அழைக்கவும் 99424-93854

தனியாக வசிக்கும் இளம்பெண் வீட்டு முன்பு தொடர்ந்து ஆணுறை வீசிச்சென்ற போலீஸ் எஸ்.ஐ.: கண்காணிப்பு காமிராவில் சிக்கினார்


கேரள மாநிலம் கண்ணனூர் போலீஸ் சரகம் பகுதியைtsr_camசேர்ந்த இளம்பெண் தனியே வசித்து வருகிறார். இவரது கணவர் துபாயில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இளம்பெண் காலையில் எழுந்து வாசலை பார்க்கும்போது வாசலில் 2 முதல் 4 வரையிலான ஆணுறை பாக்கெட்டுகள் கிடந்தன.
தொடர்ச்சியாக நடந்த இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து எடக்காடு போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இது குறித்து துபாயில் உள்ள கணவரிடம் தெரிவித்தார். அவர் வீட்டின் மறைவான இடத்தில் கண்காணிப்பு கேமிரா பொருத்தும்படி அறிவுரை கூறினார். அதன்படி யாருக்கும் தெரியாமல் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது.
சம்பவத்தன்று காலையும் வீட்டு வாசலில் ஆணுறை பாக்கெட்டுகள் கிடந்தன. ஆவேசமடைந்த இளம்பெண் கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தார்.
கேமிராவில் எதிர் வீட்டில் வசிக்கும் சப்–இன்ஸ்பெக்டர் சுரேஸ்பாபு (வயது50) ஆணுறை பாக்கெட்டுகளை வீட்டு வாசலில் வீசிய காட்சி பதிவாகி இருந்தது.
கேமிரா காட்சிகளை எடக்காடு போலீசில் இளம்பெண் காட்டினார். வழக்குப்பதிவு செய்த போலீசார் இது குறித்து கண்ணனூர் மாவட்ட எஸ்.பி.க்கு தெரிவித்தனர். இதனையடுத்து சப்–இன்ஸ்பெக்டர் சுரேஸ்பாபு தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் இது குறித்து ஐ.ஜி.க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று எஸ்.பி. தெரிவித்தார்.

லக்கேஜ் கட்ட கயிறுகளை பயன்படுத்த வேண்டாம் - ஏர் இந்தியா அறிவிப்பு !!!!



Baggage wrapped up with rope for check-in at KFIA (King Fahd International Airport-Dammam) is not permitted.

விமானத்தில் பயணிக்கும் பொழுது நாம் கொண்டு செல்லும் லக்கேஜ் மற்றும் இதர பொருள்களின் மீது கயிறுகளை கட்டி பாதுகாப்பாக கொண்டு செல்வது வழக்கம்.
இவ்வாறு கயிறுகளை பயன்படுத்துவதால், விமான நிலையத்தில் லக்கேஜ்ஐ இழுத்து செல்லும் கன்வேயர் பெல்டில் இக்கயிறுகள் சிக்கி நிறைய அசபாவிதங்கள் ஏற்படுகிறது. இதை தவிர்க்கும் பொருட்து லக்கேஜ் கட்ட கயிறுகளை பயன்படுத்த வேண்டாம் என சவுதி தமாம் கிங் பாஹாத் ஏர்போர்ட் அதிகாரிகள் அறிவுரித்து சவுதியில் உடனடியாக அமல்படுத்தினர்.இது விரைவில் அனைத்து விமான நிலையங்களிலும் அமலுக்கு வரும் என தெரிகிறது.
கயிறுகளை தவிருங்கள் !!!

வக்கீல் வேஷத்தில் பத்திரிகையாளர்களை தாக்கிய பிஜேபி கைகூலி

இவன்தான் டெல்லி நீதிமன்றத்தில் வக்கீல் வேஷத்தில் பத்திரிகையாளர்களை தாக்கிய பிஜேபி தலைவர்களின் கைகூலி
யார் என்றே தெரியாத சிலர் திடீர் என்று வழக்கறிஞர் உடை அணிந்து வந்து அங்கிருந்த பத்திரிக்கையாளர்களையும், மாணவர்களையும் தாக்கினர் என்று செய்திதாளில் ஊடகவாசிகள் சொல்லி "யாருனே தெரியலேன்னு" சொன்னார்களே அவர்கள் இவர்கள்தான். எல்லாம் காசுதான். காசு கொடுத்தா உண்மைய உடனே மாத்தி செய்தி வெளியிடுவானுங்க இந்த மதவாத பத்திரிக்கைகள்.

PVC PIPE BENDING தொழில்

12500 ரூபாய் முதலீட்டில் PVC PIPE BENDING தொழில் செய்து வாரம் 5000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்,ஒவ்வொருக்கும் தனித்தனியாக 
Training வழங்கப்படும், pvc bend செய்ய தேவையான heater,dye, மற்றும் அனைத்து பொருள்களும் வழங்கப்படும்,நீங்கள் bend செய்த பைப்புகளை நாங்களே எடுத்துக் கொள்கிறோம்.
Place :Trichy,
Pettavaithalai
(ஏதேனும் ஒரு நாள்,ஒரு மணி நேரம் மட்டும்)training வர இயன்றவர்கள் ,விருப்பம் உள்ளவர்கள் மட்டும் முன்பதிவு செய்யவும்
Contact:
9092964444
(9.30 am to 5 pm)
[தமிழகம் முழுவதும் செய்யலாம்]

சனி, 27 பிப்ரவரி, 2016

நூல் வெளியீட்டு நிகழ்ச்சி :சிதம்பரத்தின் பேச்சு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

நேற்று டெல்லியில் ப.சிதம்பரத்தின் நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் அவர் தொடர்ந்து வாரந்தோறும் சென்ற ஆண்டு எ.ழுதிய 51 கட்டுரைகளின் தொகுப்பு.
Standing Guard - A Year in Opposition எனும் இந்நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மன்மோகன் சிங், கபில் சிபல், சீதாராம் எச்சூரி, ஷிவ் விஸ்வநாதன் முதலிதோர் பங்கேற்ற இந்த நிகழ்வில் சிதம்பரத்தின் பேச்சு குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
இந்திய மக்கள் பெரிய அளவில் எதிர் எதிராகப் பிளவுண்டு இருந்த தருணங்கள் என அவர் பிரிவினைக் கலவரங்கள் நடந்தது, பாபர் மசூதி இடிக்கப்பட்டது, மூன்றாவதாக பாஜக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டுக் காலம் என்கிறார் சிதம்பரம். இந்தக் கணக்குப்படி வாஜ்பேயி தலைமையிலான ஆறாண்டு ஆட்சியைக் காட்டிலும் மோடியின் இந்த ஓராண்டு கொடிது என்றாகிறது. விளிம்பு மக்கள் மத்திதில் ஒரு அச்சம், பதட்டம் உருவாகியுள்ளது என்கிறார்.
பல்கலைக் கழகங்களுக்கும் மடங்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள். பல்ஜலைக்கழகங்களில் அந்த வயது மாணவர்கள் தவறாக இருப்பதற்கும் உரிமை உடையவர்கள்.
எவ்வளவு வக்கிரமாக இங்கே விவாதங்கள் உருமாற்றப் படுகின்றன... தாத்ரி சம்பவத்தில் நடந்தது என்ன? எந்த ஒரு கும்பலும் யாரையும் குத்திக் கொல்வதற்கு உரிமை உண்டா எனும் விவாதம், கொல்லப்பட்ட முஸ்லிமின் வீட்டில் இருந்தது ஆட்டுக் கறியா இல்லை நாட்டுக் கறியா என்கிற விவாதமாக மாற்றப்பட்டது. ரோகித் விஷயத்தில் என்ன நடந்தது? முதல் தலைமுறையாகப் படிக்க வந்த ஒரு தலித் இளைஞனை தற்கொலைக்கு ஒரு பல்கலைக்கழகம் காரணமான பிரச்சினை அவன் தலித்தா இல்லையா என்கிற பிரச்சிபையாக ஆக்கப்பட்டது. JNU வில் சில மாணவர்கள் அப்படி முழக்கமிட்டார்களா இல்லையா என்பதல்ல. பல்கலைக்கழகம் என்றால் என்ன என்பதுதான் விவாதம் ...."

Law

Types of Writs .
There are five types of Writs - Habeas Corpus, Mandamus, Prohibition, Certiorari and Quo warranto.
1. Habeas Corpus
"Habeas Corpus" is a Latin term which literally means "you may have the body." The writ is issued to produce a person who has been detained , whether in prison or in private custody, before a court and to release him if such detention is found illegal.
2. Mandamus
Mandamus is a Latin word, which means "We Command". Mandamus is an order from the Supreme Court or High Court to a lower court or tribunal or public authority to perform a public or statutory duty. This writ of command is issued by the Supreme Court or High court when any government, court, corporation or any public authority has to do a public duty but fails to do so.
3. Certiorari
Literally, Certiorari means to be certified. The writ of certiorari can be issued by the Supreme Court or any High Court for quashing the order already passed by an inferior court, tribunal or quasi judicial authority.
There are several conditions necessary for the issue of writ of certiorari .
There should be court, tribunal or an officer having legal authority to determine the question with a duty to act judicially.
Such a court, tribunal or officer must have passed an order acting without jurisdiction or in excess of the judicial authority vested by law in such court, tribunal or officer.
The order could also be against the principles of natural justice or the order could contain an error of judgment in appreciating the facts of the case.
4. Prohibition
The Writ of prohibition means to forbid or to stop and it is popularly known as 'Stay Order'. This writ is issued when a lower court or a body tries to transgress the limits or powers vested in it. The writ of prohibition is issued by any High Court or the Supreme Court to any inferior court, or quasi judicial body prohibiting the latter from continuing the proceedings in a particular case, where it has no jurisdiction to try. After the issue of this writ, proceedings in the lower court etc. come to a stop.
Difference between Prohibition and Certiorari:
While the writ of prohibition is available during the pendency of proceedings, the writ of certiorari can be resorted to only after the order or decision has been announced.
Both the writs are issued against legal bodies.
5. The Writ of Quo-Warranto
The word Quo-Warranto literally means "by what warrants?" or "what is your authority"? It is a writ issued with a view to restrain a person from holding a public office to which he is not entitled. The writ requires the concerned person to explain to the Court by what authority he holds the office. If a person has usurped a public office, the Court may direct him not to carry out any activities in the office or may announce the office to be vacant. Thus High Court may issue a writ of quo-warranto if a person holds an office beyond his retirement age.
Conditions for issue of Quo-Warranto
The office must be public and it must be created by a statue or by the constitution itself.
The office must be a substantive one and not merely the function or employment of a servant at the will and during the pleasure of another.
There must have been a contravention of the constitution or a statute or statutory instrument, in appointing such person to that office.

முகவரியின்றி பிரசுரித்த நபரை கண்டிக்கிறோம்.


இந்த போஸ்டர் தலைமையின் கவனத்திற்கு வந்தது. மார்க்கம் தெரிந்த ஒரு தமுமுக சகோதரனின் வாசகமாக இது இருக்க முடியாது. முகவரியின்றி பிரசுரித்த நபரை கண்டிக்கிறோம்.

இந்தியாவில் தேச துரோகிகளால் நிரம்பிய மாநிலம் எது தெரியுமா ?: பட்டியலை பாருங்கள் !


இந்தியாவில் தேச விரோத குற்றத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை, தேசிய குற்றவியல் ஆவண காப்பகம் வெளியிடும் வருடாந்திர அறிக்கையை வைத்து, அதுல் தாகூர் என்பவர் ஆய்வு செய்ததில், தேச விரோதிகள் அதிகம் வசிக்கும் மாநிலங்கள் எவை எவை என்று கண்டறிந்திருக்கிறார்.
*அதன்படி, 2014-ம் ஆண்டு தேச விரோத குற்றத்தின் கீழ், பீகார் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்களே அதிகம் கைது செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
*தீவிர இடதுசாரி  இயக்கங்கள் உள்ள  இந்த இரண்டு மாநிலங்களில் ,  பீகாரில் 16 பேரும், ஜார்க்கண்டில் 18 பேரும் தேச விரோத குற்றத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 
*அதற்க்கு அடுத்தபடியாக கேரளாவில், ஐந்து பேர் தேசவிரோத சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

24_02_2016_010_020_002
மேற்கு வங்கம், ஓடிசாவில் தலா இரண்டு பேரும்,  அஸ்ஸாம், சட்டீஸ்கர், ஆந்திரா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவரும் தேசவிரோத சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
*சிவப்பு நிறம்: தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள்
*நீல நிறம்: தேச விரோத சட்டம் தவிர்த்து, மாநிலங்களுக்கு எதிரான செயலில் ஈடுபட்டதாக கூறி சிறையில் அடைக்கப்பட்டவர்கள்

இந்தக் குளத்துல குளிச்சவங்க


Kaalaimalar's photo.

PAVER BLOCK - ரோடு









முக்கண்ணாமலைபட்டி செங்குளம் பகுதி தவ்ஹித் ஜமாத் பெண்கள் மதரசா செல்லும் வழி புதூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் PAVER BLOCK - ரோடு 
thanks to 

முக்கண்ணாமலைப்பட்டி பக்கம்

தவ்ஹீதில் இருப்பவர்கள் யார்?


⬆⬆⬆⬆⬆⬆⬆⬆↗↗󾠁󾠁󾠁󾠁󾠁󾠁󾠁󾠁󾠁󾠁தவ்ஹீதில் இருப்பவர்கள் யார்?❓❓❓❓󾠁󾠁󾠁󾠁󾠁󾠁󾠁󾠁󾠁󾠁⏫⏫⏫⏫⏫⏫⏫⏫⏫⏫

Posted by Jeddah TNTJ on Friday, February 26, 2016

கன்ஹையா குமார் என்ன பேசிவிட்டார்?


அவர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது ?
இதோ வாசித்துக் காட்டுகிறோம். நியாயவான்களே சிந்திப்பீர்! தமிழக மக்கள் எடுத்துரைத்து த த ஜ
உரை: கோவை ரஹ்மத்துல்லாஹ் 💥👇🏻👇🏿 மீடியா நாய்களுக்கு பதில் அடி 👇🏿

󾮙󾭚 கன்ஹையா குமார் என்ன பேசிவிட்டார்?அவர் பேசியதில் என்ன தவறு இருக்கிறது ?இதோ வாசித்துக் காட்டுகிறோம். நியாயவான்களே சிந்திப்பீர்! தமிழக மக்கள் எடுத்துரைத்து த த ஜஉரை: கோவை ரஹ்மத்துல்லாஹ் 󾭚󾮚🏻󾮚🏿 மீடியா நாய்களுக்கு பதில் அடி 󾮚🏿

Posted by Jeddah TNTJ on Friday, February 26, 2016

நிலவில் கேட்ட வினோதமான இசை சப்தம் –

பூமிக்கு தென்படாத நிலவின் மறுபக்கத்தில் இசை போன்ற விண்வெளி ஓசையை 1969 ஆம் ஆண்டு அந்த பகுதியை கடந்து சென்ற விண்வெளி வீரர்கள் கேட்டிருப்பது தற்போது வெளியாகியுள்ளது.
நிலவில் முதல் முறை தரையிறங்கிய அப்பலோ 11 விண்கலத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரான அப்பலோ 10 விண்வெளி பயணத்திலேயே இந்த மர்மமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த அசாதாரண ஒலி பற்றி அதனைக் கேட்ட விண்வெளி வீரர்களின் உரையாடலே தற்போது வெளியாகியுள்ளது. இது வரை காலமும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த சம்பவம் சயன்ஸ் சன்னல் நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளது.
‘நாஸாவின் விளக்கமுடியாத ஆவணங்கள்’ என்ற எதிர்வரும் நிகழ்ச்சியிலேயே வெளியாகவுள்ளது.
இந்த ஒலியை ஒட்ட ஒரு விண்வெளி வீரர், “நீங்கள் அதை கேட்டீர்களா? விசில் அடிப்பது போன்ற சப்தம்? வூவூ?” என்று சக விண்வெளி வீரரிடம் சம்பாசித்துள்ளார்.
பின்னர் மற்றொரு விண்வெளி வீரர் குறிப்பிடும்போது, “இந்த இசை மிக வினோதமாக இருக்கிறது. எம்மை யாரும் நம்பப்போவதில்லை” என்று குறிப்பிடுகிறார்.
இந்த இசை போன்ற ஒலி பற்றி பல தர்க்கரீதியான காரணங்கள் கூறப்பட்ட போதும் இதுவரை எதுவும் உறுதி செய்யப்படவில்லை.

இதற்கு முன்னர் நிலவுக்கு சென்ற ஆம்ஸ்ட்ராங்கு நிலவில் முஸ்லிம்கள் தொழுகைக்கு கூறும் பாங்கு சப்தத்தைக் கேட்ட நீல் ஆம்ஸ்டராங்கு இஸ்லாத்தை ஏற்றதாகக் கூறப்படுகிறது

அனைத்து சமுதாயத்திற்கும் உதவும் முஸ்லிம்கள் சவூதியில் வாழும் இந்தியர்களுக்கு ஓர் நற்செய்தி

இந்தியாவில் இருந்து சவூதிக்கு வந்து சம்பளம் மற்றும் கஷ்டமான வேலைகளில் சிக்கி  கஷ்டப்படும்  நமது இந்திய சொந்தங்களுக்காக தகவல் மற்றும் உதவி ஆலோசனைகளை வழங்க நமது சகோதரர் செய்யது அலி அவர்கள் தயாராக உள்ளார்கள்.
images
மேலும்,இறந்தவர்களின் உடல்களை நமது நாட்டிற்கு கொண்டு செல்லவும், தகுந்த நேரடி உதவிகளையும் அளிக்க 24 மணிநேரமும் நமது சகோதரர் தயாராக இimages (1)ருக்கிறார். 
குறிப்பு :இச்சேவை அனைத்து மதத்தவர்களுக்கும் பொருந்தும். 

இது முழுக்க முழுக்க இலவச சேவை. 
அவரின் அலைபேசி மற்றும் பெயர். 
சகோதரர்_
செய்யது_அலி: 00966-563710437.,
நன்றி Whats app குழுமம்

#Rss_கோட்சே காந்தியை கொலை செய்த காரணத்தை பொது மேடையில் போட்டு உடைத்த தமிழக வீர மங்கை சகோதரி #ஜோதிமனி !

#Rss_கோட்சே காந்தியை கொலை செய்த காரணத்தை பொது மேடையில் போட்டு உடைத்த தமிழக வீர மங்கை சகோதரி #ஜோதிமனி !

780 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான் அரசு வழங்கும்...!



பாலஸ்தீனை மீண்டும் கட்டியெழுப்ப 780
மில்லியன் அமெரிக்க டொலர்களை ஜப்பான்
அரசு வழங்கும்...!

கடந்த வாரம் ஜப்பான் பிரதமர் ஷின்சோ
அபேக்கும் பாலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்
பாஸ்க்கும் இடையிலான சந்திப்பு ஒன்று
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இடம்
பெற்றது.
இதன் போது ஜப்பான் பிரதமர் பாலஸ்தீனின்
தேசிய பொருளாதாரம் மற்றும் கட்டிடங்கள்
என மீண்டும் கட்டியெழுப்ப 780 மில்லியன்
அமெரிக்க டொலர்களை ஜப்பான் மனிதாபி
மான உதவியாக வாழ்ங்கும் என உறுதியளித்
தார்.
மேலும் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின்ஆக்
கிரமிப்பை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச
நாடுகள் முன்வர வேண்டும் எனவும் தெரிவித்
தார் ஜப்பான் பிரதமர்.
Mohamed Hasil

அல்சரா...? இதை பாலோ பண்ணுங்க!


வயசுல பெரியவங்களா இருப்பாங்க.... சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.
அதென்ன அல்சர்?
நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும். லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு... இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.
அல்சர் ஏன் வருது?
முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி காபி, டீயா குடிச்சு வயிற்றை நிரப்பறது....
சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு. இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும்.
ரொம்ப சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடறதும் காரணம். ஏதோ சுகமின்மைக்காக டாக்டரைப் பார்க்கறோம். டாக்டர் ஆன்ட்டிபயாடிக் எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கிறப்ப, பிகாம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும். இதை சில டாக்டர்ஸ் செய்யறதில்லை. டாக்டர்ஸ் எழுதிக் கொடுத்தாலும், 'சத்து மாத்திரை வேணாம்'னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்க... காரணம் இதுதான்.
அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இதெல்லாமும் அல்சருக்கு காரணம்!
மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து எடுத்துப்பாங்க சிலர். மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும். தவறினா, அல்சர்ல போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடி உணர்ச்சிவசப்படறவங்களுக்கு அல்சர் இருக்கும்.
எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம்கூட அல்சரோட அறிகுறிகளா இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தா உடனே டாக்டரை பார்க்கணும். அல்சரை முழுமையா குணப்படுத்திடலாம். வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு. வராம இருக்க...? சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு ரெண்டும் முக்கியம். கோபத்தைக் குறைச்சுக்கணும்.
அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்...
நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம். கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி இதெல்லாம் அறவே தவிர்க்கணும். மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும்.
நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் அல்சர் வந்தவங்களுக்கும்... விருந்தும் கூடாது... விரதமும் கூடாது!

Youtube பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

முதல் வெற்றி!
இன்று (26-02-2016) மாலையிலிருந்து இந்து முன்னணியின் Youtube பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி வெளியிட்ட ஆவணப்படத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக மாநில அளவில் DGP ஐ சந்தித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனுக்கொடுக்கபட்டது.
இதற்கு முன் அனைத்து மாவட்டங்களிலும் S P மற்றும் காவல்துறை ஆணையர்களிடம் மனுக்கொடுக்கபட்டது. திண்டுக்கலில் இதுதொடர்பாக இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலையிலிருந்து இந்து முன்னணியின் Youtube பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதை நாம் வரவேற்கின்றோம். இது நமது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.
மேலும் அந்த ஆவணப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறான செய்திகளை பேசிய அனைவரின் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான முயற்சியை நாம் தொடர்ந்து மேற்கொள்ளும்.
தமிழகத்தில் காவி பயங்கரவாதம் ஒழிக்கப்படும் வரை நமது பாப்புலர் ஃப்ரண்டின் போராட்டம் தொடரும்..

POSTER

மஞ்சள் சிறப்புகள் !


மஞ்சள் ஒரு சிறந்த வலி நிவாரணியாக சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளை எண்ணெயில் காய்ச்சி, உடலில் வீக்கம் ஏற்படும் இடங்களில் கட்டுப்போட்டால், வலி மறையும், வீக்கம் குறையும்.
மஞ்சளில் பாலிபீனாலிக் கூட்டுபொருட் களால் ஆன குர்குமின் என்ற சத்து இருக்கிறது. இது புற்றுநோய் கட்டிகள் வருவதைத் தடுக்கும்.
மஞ்சள் ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது. மஞ்சளை உணவில் தொடர்ந்து சேர்த்துவந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
ஆன்டிபாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் மருந்துகள் தயாரிப்பில் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. மூளை சம்பந்தப்பட்ட பல்வேறு வியாதிகள் வருவதைத் தடுக்கிறது. அல்சைமர் எனும் மறதி நோய் வருவதைத் தடுக்கும்.
மஞ்சளை உணவில் சேர்த்துவரும்போது, இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது, எழும்புகள் உறுதியாகும். ஆர்த்ரைடிஸ் பிரச்னை ஏற்படுவதைத் தடுக்கும்.

பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களை சந்திக்க அழைக்கின்றோம்......!

மரியாதைக்குரிய ஆலிம் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களை சந்திக்க அழைக்கின்றோம்......!
*****************************************************
அன்பிற்கினிய சகோதரி தமிழச்சி அவர்களுக்கு....
எல்லாவற்றிற்கும் முதலாவதாக எழுத்துக்கள் வழி உங்கள் உள்ளத்தை காயப்படுத்தி விட்ட எங்கள் சக முஸ்லிம் சகோதரர்கள் சார்பில் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
நிச்சயமாக உங்களை காயப்படுத்தும் எண்ணத்தில் அவர்கள் அதனை செய்திருக்க மாட்டார்கள் என்பதனை எங்களால் உறுதியாக கூற இயலும்.
மாறாக தங்களது பதிவில் எங்கள் தலைவர் நபிகளார் மற்றும் அவர்கள் தம் துணைவியர் குறித்த தங்களது கடின சொல்லாடல்களின் எதிர்வினையாகத்தான் இது நிகழ்ந்திருக்கும் என நம்புகிறோம்.
இருப்பினும் இதை நாம் நியாயப் படுத்தவில்லை. எனவேதான் வேதனைகளிலாழ்ந்துள்ள தங்கள் உள்ளத்தில் "அஸ்ஸலாமு அலைக்கும் - சாந்தியும் சமாதானமும் நின்று நிலவட்டுமாக" என மொழிந்தவர்களாக தொடர்கிறோம்.
தாங்கள் எந்த ஒரு விஷயத்தையும் ஆக்கப்பூர்வமாக அறிவுபூர்வமாக சிந்திப்பவராக உங்களது பல பதிவுகளை கண்ணுற்றுள்ளோம்.
நாம் அவற்றுள் பலவற்றை SHARE செய்தும் கொண்டிருக்கின்றோம்.
ஆனால் கடந்த சில தினங்களாக இஸ்லாம் மார்க்கத்தில் பெண்களின் நிலை குறித்தும், எங்கள் உயிரினும் மேலான தலைவர் நபிகள் நாயகம் அவர்களைப் பற்றியும் கடும் விமர்சனங்களை முன் வைக்கின்றீர்கள்.
எங்கள் தலைவரின் மீதும் எங்களது மார்க்கத்தின் மீதும் ஏறத்தாழ 1470 வருடங்களாக விமர்சனங்கள் தொடுக்கப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன.
அவற்றை அழகிய முறையில் எதிர்கொண்டு, அறிவியல் ரீதியாகவும் தெளிந்த உறுதியான ஆதாரங்களின் அடிப்படையிலும் -
"இஸ்லாம் மனித குலத்தின் உன்னத வாழ்வியல்" -
என்பதனை நிரூபணம் செய்து, அது பெரு வளர்ச்சி பெற்றுக் கொண்டுதான் உள்ளது என்பதனை உங்கள் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நீங்களே அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறோம்.
இந்நிலையில் தற்பொழுது இஸ்லாம் மார்க்கத்தின் மீதும் நபிகள் நாயகத்தின் தங்களது ஏற்பட்டுள்ள சந்தேக வினாக்களுக்கு உங்கள் பகுத்தறிவு சிந்தனை ஏற்றுக் கொள்ளத் தக்கதான விடைகள் தர வேண்டியது முஸ்லிம்களின் கடமையாக இருக்கின்றது.
ஆனால் இந்த கடின பணியை அனைத்து முஸ்லிம்களாலும் செய்திட இயலாது.
எனவே இன்றைய கால கட்டத்தில் அல்லாஹ்வின் அருளால் இஸ்லாம் மார்க்கத்தை - அதன் சட்ட திட்டங்களை தமது தொடர் ஆய்வுகளின் மூலம் பெருமளவு அறிந்துள்ள மார்க்க அறிஞர் என நாங்கள் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ள-
மரியாதைக்குரிய ஆலிம் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களை நேரில் சந்தித்து-
தங்களது உள்ளத்தின் அனைத்து சந்தேகங்களையும் விவரித்து குழப்ப மனநிலையில் உள்ள தாங்கள் மகிழ்ச்சியான தெளிவுகள் பெற வேண்டுமென அன்போடு அழைப்பு விடுக்கின்றோம்.
நீங்கள் கல்வி கேள்வியில் மிகைத்தவர். சிறந்த முடிவெடுப்பீர்கள் என நம்புகிறோம்.
அன்புடன்
முகநூல் முஸ்லிம் அரசியல் மீடியா.
26/02/2016

மதுக்கடைகளை மூடுவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகின்றது


மதுக்கடைகளை மூடுவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகின்றது - எழுத்தாளர...

மதுக்கடைகளை மூடுவதற்கு அரசாங்கம் ஏன் தயங்குகின்றது - எழுத்தாளர், அரசியல் விமர்சகர் ஞாநி சங்கரன் ..பாருங்கள் அவசியம் பகிருங்கள் !!

Posted by Nadarajah Sanjeev on Friday, February 19, 2016

இந் கேள்விக்கு யாராவது பதில் சொல்ல முடியுமமா?


இந் கேள்விக்கு யாராவது பதில் சொல்ல முடியுமமா?

Posted by Guna Sekara on Monday, February 22, 2016

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?

29–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்: வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படுகிறது?

பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று ரெயில் மந்திரி சுரேஷ் பிரபு ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை. பழைய திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் புதிய திட்டங்கள், புதிய ரெயில்கள் அறிவிக்கப்படவில்லை.
அனைவரும் ஆவBudget 2016_logoலுடன் எதிர்பார்க்கும் மத்திய பட்ஜெட் வருகிற 29–ந்தேதி (திங்கட்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. நிதி மந்திரி அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் வருவதால் பட்ஜெட்டில் பல்வேறு சலுகைள், அறிவிப்புகள் இருக்கும்.
குறிப்பாக வருமானவரி செலுத்வோர் பட்டியலில் அதிக அளவில் உள்ள நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகைகள் அளிக்கப்படும் என்று தெரிகிறது. இவர்களுக்கு தற்போது ரூ.2½ லட்சமாக இருக்கும் வருமானவரி விலக்கு உச்சவரம்பு ரூ.3 லட்சமாக உயர்த்தப்படக்கூடும் என்று தெரிகிறது.
மேலும் நடுத்தர வர்க்கத்தினரும் கவரும் வகையில் எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் நுகர்வோர் பயன்படுத்தும் தயாரிப்புகளுக்கு வரிச்சலுகைகள் அளிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
அரசு ஊழியர்களுக்கான 7–வது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு ரூ.15 ஆயிரம் கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை நிதிச்சுமை அதிகரிக்கும்.
தற்போது வீட்டுக் கடன்களுக்கான வட்டிச் சலுகை ரூ.2 லட்சம் வரை என உள்ளது. இதுவும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
நிதி கட்டுப்பாடு தொடர்பாக பொருளாதார வல்லுனர்களிடம் கருத்து கேட்டு அறியவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வாகன ஓட்டுநர்கள் கவனத்திற்கு…

Driving fb

மதிய வேளைகளில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.
சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.
நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.
வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.
நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளி வராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.
நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.