மக்கள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1.5 லட்சம் உதவித்தொகை: இங்கல்ல.., சுவிட்சர்லாந்தில் புதிய சட்டம் வருகிறது.
முதியோர், இளைஞர், வேலை செய்பவர்கள், வேலையற்றவர்கள், ஆண், பெண் என்ற பாகுபாடின்றி அனைத்து பிரிவு மக்களுக்கும் மாதந்தோறும் 2500 பிராங்க்களை உதவித்தொகையாக வழங்குவதற்கு வகை செய்யும் புதிய சட்டத்தை அமல்படுத்த சுவிட்சர்லாந்து அரசு தீர்மானித்துள்ளது.
வேலை இல்லாமல் இருப்பவர்கள் வசதியாக வாழ்வதும், வேலையற்றவர்கள் வசதியின்றி இருப்பதுமான பொருளாதார ஏற்றத்தாழ்வை போக்கும் வகையில் அறிமுகப்படுத்தவுள்ள இந்த திட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், இந்த திட்டம் வேலையில் இருப்பவர்களையும் சோம்பேறிகளாக்கிவிடும். இனிமேல் யாரும் வேலைதேடி செல்ல மாட்டார்கள் என ஒரு பிரிவினரும், உதவித்தொகை கிடைத்தாலும் வேலைக்கு செல்வோம் என மற்றொரு பிரிவினரும் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுக்கும் மாதாந்திர உதவித்தொகையாக 625 பிராங்க் வழங்க வழி செய்யும் இந்த சட்டத்தை நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த ஆண்டொன்றுக்கு 208 பில்லியன் பிராங்க் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் உள்ள செல்வந்தர்கள் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தின் மூலம் வட்டியாக கிடைக்கும் தொகை உள்நாட்டு மக்களிடம் இருந்து பெறும் லெவி தீர்வை மற்றும் செல்வ வரி ஆகியவற்றின் மூலம் இந்த செலவை சரிகட்ட சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டம் சட்டமாக்கப்பட்டாலோ, நடைமுறைப்படுத்தப்பட்டாலோ, நாட்டு மக்களுக்கு தேவையான அடிப்படை பொருளாதாரத்தை உறுதிப்படுத்திய உலகின் முதல் நாடு என்ற பெருமையை சுவிட்சர்லாந்து அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
T S Arunkumar