வியாழன், 18 பிப்ரவரி, 2016

பாஜக வைத்த பெரிய ஆப்பு : ரூ.251 ஸமார்ட் போன்

தளம் முடங்கியது -முன் பதிவு செய்த அனைவரும் பாஜக உறுப்பினர் அட்டை வழங்கப்படும்

ஃப்ரீடம் 251 ஸ்மார்ட் போனில் ‘தூய்மை இந்தியா‘ திட்டம் உள்ளிட்ட 9 ஆப்புகள் ஏற்கனவே ஏற்கனவே இந்த செல்போனில் ப்ரீலோட் செய்யப்பட்டே இருக்கும் என்று சொல்லப்பட்டது. இதில்  ஐ-கான்கள் அனைத்தும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் ஐஓஎஸ் ஐகான்களை அப்படியே சுட்டு அது மாதிரியே ஃப்ரீடம் ஸ்மார்ட் போனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது காப்புரிமை விதிமுறை மீறல் சட்டப்படி தவறாகும். 
இது குறித்து ரிங்கிங்பெல் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் விகாஷ் சர்மாவிடம் பேசுகையில், ”ஆப்பிள் நிறுவனம் தனது பொருட்கள் மற்றும் அதன் டிசைன்கள் மீது எந்த காப்புரிமையும் பெறவில்லை” என பதில் அளித்துள்ளார்.
ஆனால் இது முற்றிலும் தவறானது ஆகும். ஆப்பிள் நிறுவனத்தில் ஆப்புகளில் இருந்து ஐபேட் வரை அனைத்துமே காப்புறுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவை. 
ஆப்பிள் நிறுவனம் தனது இணையதளத்தில் ”எந்த ஒரு வகையிலும் எங்கள் நிறுவனத்தின் பெயரையோ லோகோ அல்லது ஐகான் உள்ளிட்ட எதனை  பயன்படுத்த வேண்டுமென்றாலும் முறையான லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டுமென தெளிவாக குறிப்பிட்டுள்ளது.
 ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் எந்த லைசென்சும் ஆப்பிள் நிறுவனததிடம் இருந்து பெறவில்லை என்றேத் தெரிகிறது.
எப்படியோ போன் வித்தமோ இல்லையோ முன்பதிவு செய்த அனைவருக்கும் பாஜக உறுப்பினர் அட்டை அனுப்பிவைக்கப்படும்.

Related Posts: