வியாழன், 4 பிப்ரவரி, 2016

ஹிந்து நாளிதழ் ஆசிரியர் சமஸ் தவ்ஹீத் ஜமாத்தை சாடுகிறாரா?


இவரை புரிந்து கொள்ள வேண்டும்
தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பை பிடிக்காதவர்கள் தான் இந்த அமைப்பை வஹ்ஹாபிகள் என்று அழைக்கின்றனர்.
இப்படி யாரெல்லாம் அழைக்கிறார்களோ அவர்களுடன் நல் உறவு வைத்திருக்கும் ஹிந்து நாளிதழ் ஆசிரியர் சமஸ் நடுநிலையாக இல்லாமல் அவர்கள் சார்பாகவே இந்த கட்டுரை எழுதியிருக்கிறார் என்று மக்கள் சந்தேக கேள்வியை எழுப்புகின்றனர்.

இது சம்பந்தமாக ஒரு இஸ்லாமிய தோழன்
இவையெல்லாம் சமஸுக்குத் தெரியுமா? என்ற ஒரு ஆக்கத்தை தருகிறார் கேளுங்கள்,
இவையெல்லாம் சமஸுக்குத் தெரியுமா?
“இந்துத்துவம் அடிப்படைவாதம் என்றால்  வஹ்ஹாபி யிசத்துக்கு என்ன பெயர்?”
எனும் தலைப்பில் பத்திரிகையாளர் சமஸ்  ஒரு நீ………………..ண்ட கட்டுரை எழுதியுள்ளார். அந்தக் கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள கருத்துகளுக்கு_20160204_160101
“சமஸ் இசம்” என்று வேண்டுமானால் பெயர் வைத்துக்கொள்ளலாம். “வஹ்ஹாபியிசம் இன்று தர்காவை இடித்துத் தள்ளும் எனில், நாளை சிவனையும் பெருமாளையும் முனியாண்டியையும் சுடலைமாடனையும் எப்படி விட்டுவைக்கும்?” என்று இந்துத்துவவாதிகள் கேட்பது போலவே ஒரு கேள்வியை இவராகவே எழுப்பிக்கொண்டு, அதற்கு ஏற்றாற்போலவே அவ்வளவு நீண்ட கட்டுரையையும் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் தர்கா கலாச்சாரத்தின் பாதுகாவலர்களாய் விளங்கும் சுன்னத் வல் ஜமாஅத்தைச்  சேர்ந்தவர்களால் பொதுவாக “வஹ்ஹாபி அமைப்புகள்” என்றுஅழைக்கப்படும் இயக்கங்கள் எவை எவை என்று  தோழர் சமஸுக்குத் தெரியுமா?
அந்த இயக்கங்கள் “வஹ்ஹாபி அமைப்புகள்” என்று அழைக்கப்படுவதிலுள்ள அரசியல் என்னவென்றாவது சமஸுக்குத் தெரியுமா? சேறும் சகதியும் அப்பிக்கிடந்த கோவிலை முஸ்லிம் இளைஞர்கள் தூய்மை செய்த படம் ஒன்று இந்து நாளிதழில் வெளியாகி, அது இந்தியா முழுக்க பிரபலம் ஆகியது. கோவிலைத் தூய்மை செய்த அந்த முஸ்லிம் இளைஞர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சமஸுக்குத் தெரியுமா? தர்கா கலாச்சாரத்தைப் பாதுகாப்பவர்களால்  அந்த இளைஞர்களின் அமைப்புக்கு என்ன முத்திரை குத்தப்பட்டுள்ளது என்றாவது சமஸுக்குத் தெரியுமா?
வஹ்ஹாபிகள் என்று அழைக்கப்படுபவர்கள் வெறும் தாயத்து கட்டுவதையும் மந்திரிப்பதையும் மட்டும்தான் எதிர்க்கிறார்களா? அவர்கள் வேறு எதையெல்லாம் எதிர்க்கிறார்கள் என்றாவது சமஸுக்குத் தெரியுமா?
சமஸ் அவர்கள் இதற்கு முந்தைய ஒரு கட்டுரையில் பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் கப்பார் கானை தங்களின் வழிகாட்டியாக இந்திய முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எழுதியிருந்தார். இப்போது எந்த அடிப்படை புரிதலும் இல்லாமல், இன்னொரு நீண்ட கட்டுரை எழுதியுள்ளார்.
முஸ்லிம்கள் பின்பற்ற விரும்புவது இஸ்லாமிய வாழ்வியலைத்தானே தவிர சமஸ்இசத்தை அல்ல.
இப்படியா ஆக்கம் முடிவுற்றது.
இப்படிபட்ட கட்டுரை எழுத முற்படும்போதே இதை பற்றிய முழு விபரங்களை ஹிந்து ஆசிரியர் தெரிந்து தெளிவு பெற்றிருந்தால் விமர்சனம் வர வாய்ப்பு இருக்காது என்பது நடுநிலையாளர்கள் கருத்து .