தொழுகைக்கு முஸ்லீம்களை அழைக்கும் பாங்கை கூறவிடாமல் நிறுத்திக் காட்டுவேன் சபதமேற்ற போலீஸ் அதிகாரி சஸ்பண்ட்
ஃபேஸ்புக்கில் முஸ்லீம்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கார்பி அங்லோங் மாவட்ட துணை எஸ்.பி. அஞ்சன் போரா. அவர் ஜனவரி மாதம் 28ம் தேதி முதல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்துள்ளார். அவரின் கருத்துகளுக்கு அவரது நண்பர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
ஜெய் ஸ்ரீராம், ஜெய் இந்துஸ்தான், ஜெய் ஜெய் ஸ்ரீராம், ஜெய் இந்துபூமி. முஸ்லீம்கள் இல்லாத இந்துஸ்தான் என்று எல்லாம் அவர் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரது கருத்தால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடந்தது. அவரை கைது செய்யவும், காவல் துறையில் இருந்து நீக்குமாறும் கோரிக்கை எழுந்தது. அவர் மீது காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஃபேஸ்புக்கில் முஸ்லீம்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக அஞ்சன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையே அஞ்சன் ஃபேஸ்புக்கில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளை தற்போது நீக்கிவிட்டார். தனது ஃபேஸ்புக் கணக்கை யாரோ ஹேக் செய்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டுள்ளதாகவும் அஞ்சன் போரா தெரிவித்துள்ளார்.