தமுமுக வை விட்டு பி.ஜெ வெளியேறிய பிறகு சிறைவாசிகளுடைய பிரச்சனையை கையிலெடுத்து பல வீரியமான தொடர் போராட்ங்களையும் ஆர்பாட்டங்களை செய்தது தமுமுக..அதன் பலனாகவே மதானியும்,ஹனிபா அவர்களும் விடுதலையானார்கள்...அதன் பிறகு சிறைவாசிகளுக்கு என்று வீரியமான போராட்டங்களோ ஆர்பாட்டங்களோ எதுவும் முன்னெடுக்கவில்லை தமுமுக சார்பில்..
குறிப்பாக கடந்த நான்கு வருடமாக எந்த பெரிய போரட்டமும் நடைபெறவில்லை..ஆர்ப்பாட்டம் நடைபெறவில்லை என்பதை விட தமுமுக வே முடங்கி போய் கிடந்தது என்றுதான் சொல்ல வேண்டும்..ஜே.எஸ் ரிபாயின் கையாளாகாத்தனமும்,ஹைதர் அலியின் பவர் பாலிடிக்சும் இயக்கத்தை வலுவிலக்க வைத்தது..ரிபாயிக்கு தன் தலைமையை காப்பாற்றி கொள்ளவே நேரம் சரியாக இருந்தது.. ஆனால் கட்சி அன்சாரி தலைமையில் அசுர வளர்ச்சியை கண்டுகொண்டிருந்தது...இந்நேரத்தில் தமுமுக சிறைவாசிகள் பிரச்சனையை கையிலெடுத்து போராடியிருந்தால் கூட அவர்கள் இந்நேரம் விடுதலையாகியிருப்பார்கள்..ஆனால் அன்சாரி வளர்ச்சியை கண்டு மட்டுமே பொருமிகொண்டிருந்தார்கள் அவர்கள் அனைவரும்..அந்தப் பொறாமை தீ கொழுந்துவிட்டெரிந்து அன்சாரியை காவு வாங்கியது..
இத்தனை நாள் தூங்கியிருந்துவிட்டு தேர்தல் நேரத்தில்,ஆட்சி முடியும் தருவாயில் அதுவும் இப்போது எந்த கொள்கை முடிவும் எடுக்க முடியாத நேரத்தில் மமக பெயரில் ஆர்பாட்டம் என்பது யாருக்கான நாடகம்.?கோவையில் நடந்த சிறைவாசிகளுக்கான ஆர்பாட்டத்தை சீர்குலைக்க முனைந்துவிட்டு இப்போது நடக்கும் ஆர்பாட்டம் சிறைவாசிகள் விடுதலைக்காகவா..?? மாறாக கூட்டத்தை காட்டி சீட்டு பேரத்திற்காகவா???இறைவன் அறிந்தவன்..
இவர்களை பற்றி உண்மை முகங்கள் தெரிந்தும் இந்த சுயநலக்காரர்கள் மூலமாவது ஏதாவது நடக்காத என்று ஒவ்வொரு கட்சி,இயக்க ஆபிசிலும் ஏறி இறங்கி ரோட்டில் நின்று போராடிகொண்டிருக்கும் அந்த சிறைவாசிகள் குடும்பத்தாருக்காகவும் பிஞ்சு குழ்ந்தைகளுக்காவும் இறைவனிடத்தில் கையேந்துவோம்..அவன் நாடிவிட்டால் ஒரு நிமிடம்தான்...இன்ஷா அல்லாஹ்..