கேள்வி 2
முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு, சிறைவாசிகளின் விடுதலை ஆகியவற்றை ஏற்கும் கட்சிகளுக்கு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் ஆதரவு தெரிவிக்குமா?
பதில்
தேர்தலில் யாரையும் ஆதரிப்பதில்லை என்ற முடிவு அவசரக் கோலத்தில் எடுக்கப்பட்டதல்ல. பல வருட அனுபவத்தில் நீ்ண்ட ஆய்வுக்குப் பின் எடுக்கப்பட்டதாகும்.
நாம் யாரை ஆதரித்த போதும் அதனால் பணம் பதவி என எவ்வித ஆதாயத்தையும் அடைந்ததில்லை. ஆதாயத்திற்காகவே தேர்தல் பணியாற்றுபவர்களுக்கு மத்தியில் எவ்வளவுதான் தூய்மையாக நாம் நடந்து கொண்டாலும் நம்மையும் சிலபேர் அந்தப் பார்வையில்தான் பார்க்கிறார்கள். அவர்களுக்காக வேலை செய்து விட்டு அவப் பெயரை நாம் ஏன் சுமக்க வேண்டும்?
தலைமை சொன்னது என்பதற்காக தேர்தல் பணியாற்றச் சென்ற நம் நிர்வாகிகளை காசுக்கு வேலை பார்ப்பவர்களைப் போல் எண்ணிக் கொண்டு சில வேட்பாளர்களும் அவர்களின் கைத்தடிகளும் அலைக்கழித்து, அலட்சியப்படுத்தி அவர்களின் தன்மானத்தை சீண்டிய நிகழ்வுகளும் நடந்திருக்கின்றன.
இந்த இயக்கத்தில் இருப்பவர்கள் இதனால் கண்ணியம் பெற வேண்டுமே தவிர, சுயமரியாதையை இழக்கக்கூடாது. அந்த நிலைக்கு நம் மக்களை நாம் ஏன் தள்ள ஆளாக்க வேண்டும்?
இன்றைய அரசியல், கொள்கை சமரசம் எனும் ஆபத்தான படுகுழியில் நம்மை தள்ளிவிடும் என்பதால் அதிலிருந்து முழுதாக விலகி நிற்கிறோம். தேர்தலுக்கு தேர்தல் வேலை செய்ய வைத்து அரசியல் ஆசையை ஏற்படுத்தி நாமே நம் உறுப்பினர்களை அந்த சாக்கடையை நோக்கி ஏன் தள்ள வேண்டும்?
அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக நமக்கிடையில் எவ்வளவோ எதிர்ப்புகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம். இதற்கு மறுமையில் பிரதிபலன் உண்டு என்பதால். இதே போல தேர்தலில் யாரோ ஜெயிப்பதற்காக நாம் ஏன் சண்டையிட்டுக் கொள்ள வேண்டும்?
இப்படி பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்து விட்டு எடுக்கப்பட்ட தீர்க்கமான முடிவு இது. இடஒதுக்கீடு தந்தாலும் வேறு எந்த நன்மைகளை அவர்கள் நமக்கு செய்து கொடுத்தாலும் அதற்காக நாம் யாரையும் ஆதரிக்கப் போவதில்லை. அந்த நன்மைகளை முஸ்லிம்களிடம் எடுத்துச் சொல்லி அவர்களின் ஓட்டுக்களைப் பெற்றுக் கொள்ளட்டும்.
தமக்கு நன்மை செய்யும் கட்சிக்கு முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அரசியல்வாதிகள் செய்யும் நன்மைகளைப் பரிசீலித்து பார்த்து வாக்களிக்கும் பக்குவம் முஸ்லிம்களிடம் போதுமான அளவு இருப்பதாகவே நாம் கருதுகிறோம்.