வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

உங்களுக்கு எதிலிருந்து விடுதலை வேண்டுமென்று நீதிபதி கேட்டிருக்கிறார்.

JNU மாணவர் சங்கத் தலைவர் தோழர் கன்ஹையா நீதிபதியின் முன் கேட்ட விடுதலை....
கண்ஹையாவிடம், உங்களுக்கு எதிலிருந்து விடுதலை வேண்டுமென்று நீதிபதி கேட்டிருக்கிறார்.
எங்களுக்கு தேவையான விடுதலையை வரையறை செய்கிறோம் கேளுங்கள்.
ஆம், எங்களுக்கு விடுதலை வேண்டும். தேசத்துரோகிகளிடமிருந்து எங்களுக்கு விடுதலை வேண்டும்….
காஷ்மீருக்கும், கேரளத்திற்கும் மட்டுமல்ல….மொத்த நாட்டுக்கும் WTO விலிருந்து விடுதலை வேண்டும்..
ஆம் விடுதலை வேண்டும் ரோஹித் வெமுலாவின் உயிரை குடித்த சாதியவாதத்திடமிருந்து விடுதலை வேண்டும்.
ஆம், எங்களுக்கு விடுதலை வேண்டும். பாலின பேதத்தை அடிப்படையாக கொண்ட சட்டங்களிலிருந்து விடுதலை வேண்டும்….
ஆம், கேவலமான தேசத்துரோக வழக்கு தொடர்வதற்கு ஏதுவாக சட்டங்களிலிருந்து விடுதலை வேண்டும்.
ஆம், எங்களுக்கு விடுதலை வேண்டும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்திலிருந்து விடுதலை வேண்டும்.
ஆம், எல்லாவிதமான சுரண்டலிலிருந்து விடுதலை வேண்டும்.
நாட்டின் மொத்த வளங்களை சுரண்டி தின்னும் 1% முதலாளிகளின் ஆதிக்கத்திலிருந்து எங்களுக்கு விடுதலை வேண்டும்.
மக்கள் தலைவன்.!