வீட்டில் பாகற்காய் குழம்பு என்றாலே தலைத்தெறித்து ஓடுவார்கள் நம்ம வீட்டு வாண்டுகள்..
ஆனால்.... அந்த பாகற்காயை வாரம் ஒருமுறை உட்கொண்டு வந்தால், நாம் சந்திக்கும் பல உடல் நல பிரச்சனைகளை எளிதாக போக்கலாம்.
அந்த அளவுக்கு பாகற்காயில் சத்துக்கள் நிறைந்துள்ளது.
குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், பாகற்காயை உட்கொண்டு வந்தால், உடலை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
அதுமட்டுமின்றி...
கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், பாகற்காயை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்துவிடும்.
கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுபவர்கள், பாகற்காயை உட்கொண்டு வந்தால், அதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்துவிடும்.
கொலஸ்ட்ரால் நமக்கு வர வேண்டாம் என்று நினைப்பவர்கள், பாகற்காயை அதிகம் உட்கொண்டு வாருங்கள்.
இக்கால மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக உற்ளளது.
ஆனால் பாகற்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, அடிக்கடி பிடிக்கும் சளி, காய்ச்சலில் இருந்து விடுதலைத் தருகிறது.
பாகற்காயில் #புற்றுநோய் எதிர்ப்பு பொருள் உள்ளது...
எனவே பாகற்காயை அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
எனவே பாகற்காயை அவ்வப்போது உணவில் சேர்த்து வந்தால், புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம்.
என்ன ஆச்சரியமா இருக்கா..?
ஆம், உண்மையிலேயே பாகற்காயை எடையைக் குறைக்க உதவும்.
ஆம், உண்மையிலேயே பாகற்காயை எடையைக் குறைக்க உதவும்.
அதற்கு அதில் உள்ள பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் தான் முக்கிய காரணம்.
பாகற்காயில் அந்தல்மின்டிக் உட்பொருட்கள் உள்ளதால், இவை குடலில் உள்ள புழுக்களை அழிக்கும்.
மேலும் உடலில் தேங்கியுள்ள டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்ற உதவும்.
நீரிழிவு :-
சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் ஜூஸை குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
குறிப்பாக பாகற்காய் ஜூஸ் குடித்து வந்தால், மருந்து மாத்திரைகளை நாளடைவில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் வராது.
பாகற்காய் மட்டுமல்ல...
இன்னும் கசப்பான உணவுப் பொருள்கள் அனைத்துமே மனித உடலை வைரமாக மாற்றும் சக்தி படைத்ததே....!
இன்னும் கசப்பான உணவுப் பொருள்கள் அனைத்துமே மனித உடலை வைரமாக மாற்றும் சக்தி படைத்ததே....!
நோய் எதிர்ப்பு சத்துக்கள் அனைத்தும் கசப்பின் மூலத்திலிருந்து வருபவைதான்...!
எனவே...
உற்றாரிடம் மனக் கசப்பை மட்டும் தூர வையுங்கள்..!
உணவில் கட்டாயம் கசப்பை சேருங்கள்..!