இங்கிலாந்து பிரதமர் அண்மையில் 20 மில்லியன் பவுண்ட்களை இஸ்லாமிய பெண்களின் ஆங்கில கல்விக்காக ஒதுக்கியிருந்தார்.
22% இங்கிலாந்தில் வாழும் இஸ்லாமிய பெண்களுக்கு ஆங்கிலம் தெரியாது. அவர்கள் நல்லபடியாக வாழ்வதற்கு உதவுவதற்கும் ஆங்கிலம் படிப்பதற்கும் இந்த பணத்தை பயன்படுத்த இருப்பதாக பி.பி.சி-க்கு தெரிவித்தது இங்கிலாந்து அரசு. இங்கிலாந்தில் வாழும் இஸ்லாமிய பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லை. மேலும் அவர்கள் அதிகம் பேசாமல் இருப்பதால் சில இஸ்லாமிய ஆண்கள் ஐஎஸ் மாதிரியான தீவிரவாத அமைப்புகளில் இணைவதற்கான சூழ்நிலை உருவாகிறதாக டேவிட் கேமரூன் கூறியிருந்தார். அதை டெலெகிராப் பத்திரிக்கை பதிவு செய்தது.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து முப்பதாயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமிய பெண்கள் #traditionallysubmissive என்கிற ஹேஷ்டேக்கில் தங்களின் கண்டனத்தை பதிவு செய்தனர்.