21 12 2021

TMC set to sweep KMC polls, BJP relegated to third place: கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் (KMC) தேர்தலில் 144 வார்டுகளில் 133 வார்டுகளில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற உள்ளது. நான்கு வார்டுகளில் முன்னிலைப் பெற்று இடதுசாரி முன்னணி இரண்டாவது இடத்தில் உள்ளது. அதேநேரம் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவின் வேட்பாளர்கள் மூன்று வார்டுகளில் முன்னிலை பெற்றுள்ளதால் பாஜக மூன்றாவது இடத்தில் உள்ளது. காங்கிரஸ் இரண்டு இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
சில வார்டுகளில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுவிட்டதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸின் முக்கிய வேட்பாளர்களான தேபாசிஷ் குமார் (வார்டு 85), தாரக் சிங் (வார்டு 118), மாலா ராய் (வார்டு 88) மற்றும் பலர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை திரிணாமுல் காங்கிரஸ் 74.2 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. வியக்கத்தக்க வகையில், பிஜேபியை விட (8 சதவீதம்) சிபிஎம் (9.1 சதவீதம்) சிறந்த வாக்குகளை பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நடந்த KMC தேர்தலில் வாக்குச் சாவடிகளில் இருந்து வாக்குச் சாவடி முகவர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், வேட்பாளர்கள் தாக்கப்பட்டதாகவும், திரிணாமுல் காங்கிரஸின் தொண்டர்களால் வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்ததாகவும் மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளான BJP, காங்கிரஸ் மற்றும் CPM ஆகியவை புகார் கூறின. மூன்று பகுதிகளில், கச்சா குண்டுகள் வீசப்பட்டன, மூன்று பேர் காயமடைந்தனர். பகலில் சுமார் 64 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், 200க்கும் மேற்பட்டோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
உள்ளாட்சி அமைப்புக்கு மீண்டும் தேர்தல் நடத்தக் கோரி பாஜக, சிபிஎம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் திங்கள்கிழமை நகரில் தனித்தனியாக போராட்டம் நடத்தின. மறுபுறம் பிஜேபி மற்றும் சிபிஎம் ஆகியவை இதே கோரிக்கையுடன் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு டிசம்பர் 23ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
source https://tamil.indianexpress.com/india/kolkata-municipal-corporation-results-bjp-tmc-386201/