திங்கள், 22 பிப்ரவரி, 2016

பா.ஜா.க அரசு என்னை தீவிரவாதியாக்க பார்கிறது நான் தீவிரவாதி அல்ல

: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித்

புதுடெல்லி, ’நான் தீவிரவாதி கிடையாது,’ என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித் கூறிஉள்ளார். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 9–ந் தேதி, பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
Screenshot_2016-02-22-10-17-08-327

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பியதில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் ஒருவரான உமர் காலித். ’நான் தீவிரவாதி கிடையாது, வளாகத்தை குறிவைப்பதை பாரதீய ஜனதா அரசு தவிர்ப்பது அவசியமாகிறது,” என்று கூறிஉள்ளார். பல்கலைக்கழக மாணவர் இயக்க தலைவர் கான்யா குமாரை தேசவிரோத வழக்கில் போலீஸ் கைது செய்ததும் கடந்த 12-ம் தேதி தலைமறைவு ஆன உமர் காலித்,  ‘என்னுடைய பெயர் உமர் காலித், நான் தீவிரவாதி கிடையாது.’ என்று கூறிஉள்ளார்.
ஊடக விசாரணைகள் தன்னை தீவிரவாதியாக முத்திரை குத்துகிறது என்றும் கண்டனம் தெரிவித்து உள்ளார். பல்கலைக்கழக மாணவர் இயக்க தலைவர் கான்யா குமாரை போலீஸ் கைது செய்ததும் கடந்த 12-ம் தேதி தலைமறைவு ஆன மாணவர்கள் உமர் காலித், அனிர்பன் பட்டாச்சார்யா, ராம நாகா, அசுதோஷ் குமார் மற்றும் ஆனந்த் பிரகாஷ் ஆகியோர் பல்கலைக்கழகத்திற்கு திரும்பிஉள்ளனர். இதற்கிடையே அவர்களை கைதுசெய்ய பல்கலைக்கழகத்திற்கு வெளியே போலீஸ் நிற்கிறது. போலீஸ் பல்கலைக்கழகத்திற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படவில்லை.
மாணவர்கள் இன்று கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.