செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

கெயில் (GAIL )

கெயில் (GAIL ) என்பது இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான ஒரு அற்புதமான திட்டம் , ஆனால் பொருளாதாரம் உயர்ந்த இந்தியாவில் கடைக்கோடியில் ஒரு சுடுகாடு இருக்கும் அதன் பெயர் தமிழ்நாடு.
வருடத்திற்கு கிட்டதட்ட 1500 கோடி ரூபாய் வருமானம் ஈட்டித்தரும் ஒரு திட்டம்,கேரள அரசின் கனவுத்திட்டம் என்றுதான் இதை சொல்ல வேண்டும்.
ஆனால் அதுல பாருங்க நம்ம தமிழ்நாட்டுக்கு அதனால் என்ன கிடைக்கும் என்றால் சிறந்த முறையில் தயார் செய்யப்பட்ட அல்வாதான்.
திட்டத்தை பற்றி எல்லாம் நம்ம அரசாங்கம் தெளிவாக எடுத்து சொல்லும்,
அரசாங்கம் சொல்ல பயப்படும் விஷயத்தை நான் சொல்றேன்.
போன வருடம் ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கெயில் நிறுவனத்தின் கவனக்குறைவினால் நடந்த ஒரு சின்ன விபத்து " நகரம்" என்ற கிராமமே உருக்குலைந்து போனது கொஞ்சம் பேர் உயிர் போச்சு அவளவுதான்.

செத்தவங்க எல்லாம் அன்னாடங்காட்சி என்று சொல்லகூடிய விவசாயிகள் தான்.
சின்ன விபத்து தான் இது..!
அதே போல அந்த குழாய்கள் தமிழ்நாட்டில் ,
கோயமுத்தூர் - 15 கிராமங்கள்
திருப்பூர் - 22 கிராமங்கள்
ஈரோடு - 11 கிராமங்கள்
நாமக்கல் - 9 கிராமங்கள்
சேலம் - 29 கிராமங்கள்
தர்மபுரி - 27 கிராமங்கள்
கிருஷ்ணகிரி - 18 கிராமங்கள்
வழியாக பதிக்கப்படும்.
மேற்கொண்டு என்ன நடக்கும் என்று நீங்களே யோசிச்சிக்குங்க நண்பர்களே..!


கேரளத்தான் மலையாளியாக இருக்கிறான்.
கர்னாடகத்தான் கன்னடனாக இருக்கிறான்.
ஆந்திரத்தான் தெலுங்கனாக இருக்கிறான்.
மகாராட்டியத்தான் மராட்டியாக இருக்கான்.
குசராத்தான் குசராத்தியாக இருக்கான்.
தமிழ்நாட்டான் மட்டும் இந்தியன் என்று குனிந்து கொடுத்துக் கொண்டே இருக்கான்,