செவ்வாய், 2 பிப்ரவரி, 2016

கெயில் வழக்கு - தலைமை நீதிபதியை கோபமடையச் செய்த தமிழக அரசு வக்கீல்கள்..!



இயற்கை எரிவாயு வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று தொடங்கியபோதே தமிழக அரசின் வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி இன்னும் வரவில்லை அவர்தான் வாதிட உள்ளார் 
என்று கூறினார்.

அப்போது கெயில் நிறுவனத்தின் வாதத்தை
கேட்கத் தொடங்கினர் நீதிபதிகள்.

பின்னர் அரை மணி நேரம் சென்ற பின் தமிழகத்தின் கருத்தை அறிய நீதிபதிகள் பாலாஜியிடம் திரும்பினர். அப்போது அவர் மூத்த வழக்கறிஞர் இன்னும் வரவில்லை வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என்றார். இதனை கேட்டு கோபம் அடைந்த தலைமை நீதிபதி தாகூர்,

"இறுதி விசாரணைக்காக முக்கியத்துவம் கொடுத்து முதல் வழக்காக இன்று பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறது. அப்படியும் உங்கள் வக்கீல் வரவில்லை என்றால் என்ன அர்த்தம்...? இன்னும் அரைமணி நேரத்தில் வரவில்லை என்றால் வழக்கை தள்ளுபடி செய்து விடுவோம்.." என்று கோபமாக கூறினார்.

அதன் பின்னரும் ராகேஷ் திவேதி வரவில்லை.
பின்னர் பாலாஜிக்கு கைகுடுக்க மற்றொரு தமிழக அரசு வழக்கறிஞரான சுப்ரமணிய பிரசாத் வந்தார். அவருடைய வாதத்தை கேட்டபிறகு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

ஜெ. வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை மூத்த வழக்கரிஜர்கள் 5 பேர் உள்பட 25 பேர் நீதி மன்றத்துக்கு வந்திருந்தனர். நேற்று சசி வழக்குக்காக 10 கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றத்தில் நின்றனர்.
இன்று இந்த வழக்குக்காக எப்போதும் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் ஏன் வரவில்லை என்பது மர்மமாகவே உள்ளது.

ஜல்லிக்கட்டு வழக்கின் போது தமிழக அரசு வழக்கறிஜர் ஒருவர் கூட வராமல் இருந்தது கடந்த மாத சம்பவம்.