சனி, 2 ஏப்ரல், 2016

சேலத்தில் இந்தாண்டு மாம்பழம் விளைச்சல் குறைந்துள்ளது


mangoமாம்பழத்திற்கு பெயர் போன சேலத்தில் இந்தாண்டு விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் சந்தையில் மாம்பழங்களின் வரத்து இன்றி காணப்படுகிறது. இது மாம்பழ பிரியர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

முக்கனிகளில் முதல் கனியாக திகழும் மாம்பழங்கள் சேலம் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விளைவிக்கப்படுகிறது. சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம் என்று சொல்லும் அளவிற்கு அதன் சுவையும் மனமும் கொண்ட மாம்பழங்களில், சேலம்-பெங்களூரா, இமாம்பசந்த், மல்கோவா, அல்போன்சா, செந்தூரா,  பங்கனப்பள்ளி என 50க்கும் மேற்பட்ட வகை மாம்பழங்கள் இருந்தாலும், இதில் குறிப்பிட்ட வகை மாம்பழங்கள் மட்டுமே அனைவராலும் விரும்பி வாங்கப்படுகிறது.

தற்போது பூக்கள் பூத்த நிலையில் மழை பெய்யாத காரணத்தால் விளைச்சல் குறைந்து பெரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் விவசாயிகள்.

சேலத்தை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து இந்த மாம்பழங்கள்  சந்தைக்கு வரும். இதனால் சேலம் கடை வீதிகளில் மாம்பழம் வாசம் வீசும். ஆனால் இந்தாண்டு பழங்கள் அதிகளவில் வராத காரணத்தால் மாம்பழ பிரியர்கள் வருத்தம் அடைதுள்ளதுள்ளனர்.

சேலத்து மாம்பழங்களை வெளிநாட்டிற்கும், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கவும் முன்பதிவு நடைபெற்று வருகிறது.  அதற்கான முன் பதிவில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ள மாம்பழ வியாபாரி சீனி,  மாம்பழங்கள்  வரத்து குறைவாக உள்ளதாகத்  தெரிவித்தார்.

மழை பெய்தால் மட்டுமே மா விளைச்சல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சேலம் மாவட்டத்தில் மாம்பழ விவசாயிகளுக்கு தனி சந்தை அமைத்து தர வேண்டும் என்பது மா விவசாயிகளின் கோரிக்கை