திங்கள், 4 ஏப்ரல், 2016

ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாரத மாதா


சரியாகச் சொன்னால் பண்டைய வரலாற்றில் “இந்தியா”வே இல்லை. தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில், மறைந்த வரலாற்றறிஞர் பிபன் சந்திரா நினைவு உரை நிகழ்ச்சியில் பிரபல வரலாற்றுத் துறை பேராசிரியர் இர்ஃபான் ஹபீஃப் கலந்து கொண்டு பேசினார். அதில் பண்டைய இந்தியா மற்றும் மத்தியகால இந்திய வரலாற்றில் பாரத் மாதா கி ஜெய் என்ற முழக்கமே இல்லை, அது ஒரு ஐரோப்பிய இறக்குமதி, தந்தையர் நாடு, தாய் நாடு என்ற கருத்தாக்கங்கள் ஐரோப்பாவில் தோன்றியவை என்பதை அவர் விளக்கினார்.
மகாராட்டிர சட்டசபையில், மஜ்லிஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வாரிஸ் பத்தான் சட்டசபையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். செய்த குற்றம் என்ன? பாரத் மாதா கி ஜெய் முழக்கத்தை சொல்ல மறுத்ததுTriple_Entente. இதை குற்றம் என்று பா.ஜ.க வானரங்கள் மட்டும் சொல்லவில்லை. சிவசேனா என்ற அதன் பாங்காளி வானரமும், உள்ளூர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கூட வழிமொழிந்தார்கள். இதை வைத்து முஸ்லீம்கள் அனைவரும் தேச துரோகிகள் என்ற கருத்தை இந்துமதவெறியர்கள் பரப்பினர். கூடுதலாக தீவிரவாத கம்யூனிஸ்டுகள்தான் தேசபக்தியை கேள்விக்குள்ளாக்கும் சித்தாங்கங்களை பரப்புகின்றனர் என்றும் பிரச்சாரம் செய்தனர்.
“பண்டைய இந்தியாவில் ‘பாரத்’ என்ற வார்த்தை புழங்கப்பட்டாலும் நாட்டை தாய், தந்தை என்று மனித உருவில் பார்க்கும் வழக்கம் பண்டைய மற்றும் மத்திய கால இந்திய வரலாற்றில் இல்லை” என்கிறார் பேராசிரியர் இர்ஃபான்.
ஐரோப்பாவில் முதலாளித்துவ உற்பத்தி முறை வளர்ச்சி அடைந்து ஒரு நாட்டையே சந்தையின் பெயரால் இணைக்க வேண்டிய தேவை வந்த போது உருவான கருத்தாக்கம்தான் தேசியம். ரசியாவிலும், பிரிட்டனிலும் இப்படி தோன்றிய தேசிய கருத்தாக்கங்களின் வழிதான் நாட்டை தாயாக, தந்தையாக பார்க்கும் பழக்கம் தோற்றுவிக்கப்பட்டது. பிறகு இது ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும் பரவியதோடு அதன் பிறகு உலகமெங்கும் பரவியது.
ஆக “பாரத் மாதா கி ஜெய்” என்ற முழக்கமே வெள்ளையர்கள் போட்ட பிச்சை என்பதை மறுப்பதற்கில்லை. இப்படியாக ஐரோப்பிய காலனியாதிக்க மையவாத சிந்தனை முறைதான் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் எரிபொருள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. பாரத் மாதாவிற்கே இதுதான் கதி என்றால் தமிழ் அன்னைக்கும் அதுதான் கதி!
ஆங்கிலேய காலனியாதிக்க – ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்து உருவான இயல்பான தேசபக்தி என்பதை வழிபாட்டு சடங்கு முறையாக மாற்றியது இந்துமதவெறியர்கள் மட்டுமே. அதனால்தான் அவர்கள் சுதந்திர போராட்டத்தை காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாக இருந்தார்கள். தேச பக்தி என்பது ஆதிக்கத்திற்கு எதிராக தோன்றும் போது முற்போக்காகவும், ஆதிக்கம் செய்வதற்காக துருத்தும் போது பிற்போக்காவும்தான் இருக்கும்.
இந்தியாவின் ஜனகன மண எனும் தேசிய கீதம் ஆங்கிலேய மன்னனை வாழ்த்தி பாடப்பட்டது. வந்தே மாதரம் எனும் கீதம் முஸ்லீம் மன்னர்களை வீழ்த்தும் வங்க மாதாவிற்காக பாடப்பட்டது. ஆக இந்தியாவின் தேசப்பற்று அடையாளங்கள் எவையும் ஒரிஜனல் அல்ல!
எது எப்படியோ இனி பாரத் மாதா கி ஜெய் என்று ஒருவர் முழங்கினால் அது இந்து ஞான மரபின் கண்டுபிடிப்பு அல்ல, ஐரோப்பாவின் இரவல் சரக்கு என்பதை தெளிய வைப்போம்!