திங்கள், 11 ஏப்ரல், 2016

மகாராஷ்டிராவை வாட்டும் வறட்சி: இரவிலும் குடிநீர் தேடி அலையும் அவலநிலை

மகாராஷ்டிராவில் வாட்டி வதைக்கும் வறட்சியால் குடிநீர் தேடி பொதுமக்கள் இரவிலும் நீண்ட தூரம் செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 


மகாராஷ்டிரா மாநிலம் லத்தூரில் கடும் வறட்சி நிலவுவதால் நீர்நிலைகள் நீரின்றி வறண்டு காணப்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. அதனால், தற்போது அங்கு வசிக்கும் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றன. 

டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த போதிலும், குடிநீர் தட்டுப்பாடு தீர்ந்தபாடில்லை. அதனால், இரவு நேரத்திலும் குடிநீரை தேடி மக்கள் நீண்ட தூரம் பயணம் மேற்கொள்கின்றனர். பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு, இரவிலும் தூங்காமல் குடிநீரை தேடி அலைவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

இதேபோல் மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரிலும் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மலைகளை கடந்து நீண்ட தூரம் சென்று தண்ணீரை கொண்டு வருகின்றனர்.