சனி, 2 ஏப்ரல், 2016

Hadis

ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யர்களுக்கு ஆதரவு அளித்து, உதவி செய்யும் முகமாக பொய் சாட்சி பகர்கின்றனர். இதுவும் பெரும் பாவமான காரியமாகும்.
அபூபக்ரா (ரலி) கூறியதாவது: "பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். "ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்'' என்று நபித் தோழர்கள் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் தான்'' என்று கூறினார்கள்.
சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள் பிறகு எழுந்து அமர்ந்து, "அறிந்து கொள்ளுங்கள். பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்)'' என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள்.
(நூல்: புகாரி 5976, முஸ்லிம் 126)