90 களில் பிறந்த குழந்தைகளின் பள்ளி பருவத்தை இனிமையாக்கிய பழைய Yahoo Messenger விரைவில் மூடப்பட உள்ளது.
1997-ம் ஆண்டுக்கு பின் இணையதள வசதி பிரபலமாகிக் கொண்டிருந்த நேரம். பள்ளி கல்லூரி மாணவர்கள் இணையத்தில் நண்பர்களுடன் chat செய்ய, முதன் முதலில் பயன்படுத்தியது Yahoo Messenger தான்.

இதனை தொடர்ந்து வந்த Orkut, Gtalk, Facebook என மற்ற சமூக வலைதளங்களால், Yahoo Messenger-ன் பயன்பாடு முற்றிலும் குறைந்தது. ஒரு காலத்தில் இளம் பருவத்தினரை வெகுவாக கவர்ந்த இந்த பழைய Yahoo Messenger வரும் ஆகஸ்ட் 5-ம் தேதியுடன் மூடப்பட உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து Yahoo தன் வலைப்பதிவில், 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ம் தேதியோடு பழைய Yahoo Messenger மூடப்பட உள்ளதால், அதில் உள்ள கணக்கை முடித்துக் கொள்ளுமாறு பயன்பாட்டாளர்களை கேட்டுக் கொண்டள்ளது. புதிய Yahoo Messenger-ஐ மேம்படுத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2000-ம் ஆண்டு ஆரம்பத்தில் முதன் முதலாக Yahoo Messenger-ல் கணக்கை தொடங்கி, அதில் chatசெய்து, அது குறித்து வகுப்பறையில் பேசிய நாட்களை யாராலும் மறக்க முடியாது. Chat-ல் ASL (Age,Sex, Location) கேட்பது தொடங்கி, பல மணி நேரம் உரையாடுவது என நம்மை இணையத்தில் ஈடுபட வைத்த அதன் நினைவுகள் ஏராளம்.
இணையம் ஒரு பகுதியாக இருந்தாலும், நண்பர்களுடன் நேரில் பேசி பழகிய காலங்கள் மீண்டும் திரும்ப வராது என்பது போல், சமூக வலைதளங்களில் மட்டுமே பேசி பழகுகிறது தற்போதைய தலைமுறை.