இஸ்ரோ வரலாற்றில் புதிய மைல் கல்லாக பிஎஸ்எல்வி சி-34 ராக்கெட் மூலமாக 20 செயற்கைக் கோள்கள் இன்று விண்ணில் செலுத்தப்பட்டன
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து இன்று காலை 9.26 மணிக்கு பி.எஸ்.எல்.வி சி34 ராக்கெட் மூலம் 20 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. அடுத்த 26 நிமிடங்களில், இருபது செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன.
இந்தியாவின் கார்டோசாட்-2 செயற்கைகோளுடன், சென்னை மற்றும் புனே பல்கலைக்கழக மாணவரகள் தயாரித்த 2 செயற்கைகோள்களும் இந்த ராக்கெட் மூலம் ஏவப்பட்டுள்ளன. ஜெர்மனி, அமெரிக்கா, இந்தோனேசியா, கனடா, உள்ளிட்ட நாடுகளுக்குச் சொந்தமான 17 செயற்கைகோள்களையும், பி.எஸ்.எல்.வி சி-34 வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியுள்ளது.
இஸ்ரோ வரலாற்றில் மைல் கல்லாக கருதப்படும் இந்த சாதனை குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியா, கனடா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் செயற்கைக்கோள்கள் இதில் அனுப்பப்பட்டுள்ளன. அனுப்பப்பட்டுள்ள செயற்கைக்கோள்கள் ஒவ்வொன்றின் நோக்கம் என்ன?
இந்தோனேஷியாவின் LAPAN-A3 செயற்கைக்கோள் புவி கண்காணிப்பு மற்றும் இயற்கை வளங்களை அறிவதற்கு அனுப்பப்பட்டுள்ளது.
கனடாவின் M3MSat செயற்கைக்கோள் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக அனுப்பப்பட்டுள்ளது.
கனடாவின் மற்றொரு செயற்கைக்கோளான GHGSat-D, மீதேன் ஆராய்ச்சியை மையமாகக் கொண்டு அனுப்பப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் BIROS செயற்கைக்கோள் கடும் வெப்ப நிகழ்வுகளை தொலைவில் இருந்தே உணரும் நோக்கில் அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் SkySat Gen2-1 செயற்கைக்கோள், ஹெச்.டி. தொழில்நுட்பத்தில் காட்சிகளை எடுக்க வல்லது.
சத்தியபாமா பல்கலைக்கழக செயற்கைக்கோள், தகவல் சேகரிப்பை நோக்கமாகக் கொண்டு அனுப்பப்பட்டுள்ளது.
புனேவைச் சேர்ந்த பொறியியல் நிறுவனம் தயாரித்துள்ள செயற்கைக்கோள், அமெச்சூர் வானொலிக்கான தகவல்களை அளிக்கும் நோக்கில் அனுப்பப்பட்டுள்ளது.