புதன், 22 ஜூன், 2016

Breadஇல் சேர்க்கப்படும் புற்றுநோய் விளைவிக்கக்கூடிய ரசாயனத்திற்கு தடை

டெல்லியில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் 84% பொட்டாசியம் ப்ரோமேட் இருப்பது ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, புற்றுநோய் உண்டாக்கும் இந்த ரசாயனத்திற்கு தடை விதித்துள்ளது இந்திய இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம்.

''இந்திய உணவு பாதுகாப்பு தர ஆணையம் பொட்டாசியம் ப்ரோமேட்டை தடை செய்துள்ளது,'' என்று ஆணையத்தின் தலைவர் பவன் குமார் அகர்வால் தெரிவித்துள்ளதாக பி டி ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேக்கரி பொருட்களில் பயன்படுத்தப்படும் பொட்டாசியம் ஐயோடேட் என்ற விஷத்தன்மை வாய்ந்த ரசாயனத்தையும் அரசு தடை செய்ய வேண்டும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக இந்த ஆய்வை நடத்திய, டெல்லியைச் சேர்ந்த சுற்றுச் சூழல் ஆய்வு அமைப்பான அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம்( Centre for Science and Environment) தெரிவித்துள்ளது.

ஆனால் இந்தியாவின் பேக்கரிகளில் இவை பயன்படுத்தப்படுவதை இந்தியா தொடர்ந்து அனுமதித்து வருகிறது. அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் 38 ரொட்டி மற்றும் பிற நொதித்தல் செய்து வைக்கப்பட்ட உணவு மாதிரிகளை சில்லறைக் கடைகள் மற்றும் துரித உணவுக் கடைகளில் இருந்து எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தியது.

''84% சதவீதத்திற்கு மேலான மாதிரிகளில் பொட்டாசியம் ப்ரோமேட்/ஐயோடேட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.