புதன், 22 ஜூன், 2016

சீனாவில் கண்டெடுக்கப்பட்டது டிராகன் புதைப்படிவமா?

​சீனாவில் கண்டெடுக்கப்பட்டது டிராகன் புதைப்படிவமா?


சீனாவில் கண்டெடுக்கப்பட்ட டிராகன் உடல் போன்ற புதைப்படிவம் கண்டெடுக்கப்பட்ட அன்று இரவே திருடப்பட்டுள்ளது.


சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜென்ஸியாங் கவுண்டி பகுதியில் அமைந்துள்ள ஆறு ஒன்றின் அருகே இம்மாத தொடக்கத்தின் வித்யாசமான வரிவடித்திலான புதைப்படிவம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 130 செ.மீ நீளமும், 17 செ.மீ விட்டதுடனும் நீண்டு உருண்டிருந்த அந்த புதைப் படிவத்தின் மேற்புறத்தில் பாம்பின் தோலினை போன்ற வரிகளும் காணப்பட்டன. 

சீனா இலக்கியங்கள் கூறும் டிராகனின் புதைப்படிவம் என்று வதந்தி பரவியது. அதன் படங்களும் இணையங்களில் வேகமாக வைரலான நிலையில், இரவோடு இரவாக கண்டுபிடிக்கப்பட்ட அன்றே மர்மநபர்கள் அந்த புதைப்படிவத்தை திருடிச் சென்றுள்ளனர். இந்நிலையில், அதேபகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர் இணைந்து புதைப்படிவத்தின் மீதப்பகுதிகளை மீட்டுள்ளனர்.

இதனிடையே, கைப்பற்றப்பட்ட புதைப்படிவத்தின் மீதத்தை ஆராய்ந்த தொல்லியலாளர்கள், அது scale tree எனப்படும் Lepidodendron மரத்தின் பாகங்கள் என்று தெரிவித்துள்ளனர். பெர்மியன் காலம் எனப்படும் தற்போதிலிருந்து 298.9 மில்லியன் ஆண்டுகள் முதல் 252.17 மில்லியன் ஆண்டுகள் முன்னதான காலத்தில் வாழ்ந்த scale tree எனப்படும் மரத்தின் கல்லாக உருமாறிய பகுதிகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.